உள்ளடக்கத்துக்குச் செல்

வில்கபம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்கபம்பா இடிபாடுகள்

வில்கபம்பா (Vilcabamba) என்பது பெரு நாட்டில் இருந்த ஒரு நகரம் ஆகும். மான்கோ இன்கா கட்டிய இந்த நகரம் 1539 இருந்து 1572 வரை இன்கா பேரரசின் தலைநகரமாக இருந்தது. இன்கா பேரரசு எசுப்பானியப் படைகளால் கைப்பற்றப்பட்டபின் இந்நகரம் அழிக்கப்பட்டது. பின் பல நூற்றாண்டுகள் வெளியாட்களின் கவனத்தில் இருந்து மறைந்து போனது. 1892 ஆம் ஆண்டு இந்நகரத்தின் இடிபாடுகள் மீண்டும் வெளியுலகின் கவனத்துக்கு வந்தன. தற்போது இந்நகரம் பெருவின் தொல்லியல் மற்றும் வரலாற்றுக் களங்களுள் ஒன்றாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்கபம்பா&oldid=3812402" இலிருந்து மீள்விக்கப்பட்டது