உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் ஜோன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்
வில்லியம் ஜோன்ஸ்
சர் வில்லியம் ஜோன்சின் சித்திரம்
பிரித்தானிய இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதியரசர், (வங்காளம்)
பதவியில்
22 அக்டோபர் 1783[1] – 27 ஏப்ரல் 1794[2]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1746-09-28)28 செப்டம்பர் 1746
வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன்
இறப்பு27 ஏப்ரல் 1794(1794-04-27) (அகவை 47)
கொல்கத்தா
கொல்கத்தாவில் சர் வில்லியம் ஜோன்சின் கல்லறை

சர் வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) (28 செப்டம்பர் 1746 – 27 ஏப்ரல் 1794) ஆங்கிலேயரான இவர் மொழியியல் அறிஞரும், நீதியரசரும் ஆவார். இவர் வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் இருந்த பிரித்தானிய இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் இந்து மற்றும் இசுலாமிய சட்டங்களின் நீதியரசராக 22 அக்டோபர் 1783 முதல் 27 ஏப்ரல் 1794 முடிய பணியாற்றியவர். இவர் 1770-ஆம் ஆண்டில் மனுதரும சாத்திரம் எனும் நூலை ஆங்கில மொழியில் வெளியிட்டார். [3]

இந்தியவியல் மற்றும் சமஸ்கிருதம் மற்றும் ஐரோப்பிய மொழிகளை கற்றறிந்த இவர், இந்திய-ஆரிய மொழிகளுக்கும், இந்திய ஐரோப்பிய மொழிகளுக்கிடையே உள்ள உறவுகளை நிலைநாட்டியவர்.[4] இவர் 1784இல் கொல்கத்தா நகரத்தில் ஆசியச் சமூகம் எனும் நிறுவனத்தை நிறுவினார். [5]

இந்து மற்றும் முஸ்லீம் சமயச் சட்டங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருத மொழியை ஆழ்ந்து கற்றார. 1794-இல் இந்து வாழ்வியல் சட்டங்களைக் கூறும் மனுதரும சாத்திரத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தார். காளிதாசரின் சாகுந்தலம் போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1792-இல் இசுலாமியச் சட்ட முறைமையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சமஸ்கிருதம், இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளின் பொதுவான கூறுகள் குறித்தான இவரது மொழியியல் ஆய்வுகள 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒப்பீட்டு மொழியியலின் வளர்ச்சிக்கான உந்துதலாக அமைந்தது.

மேலும் 1771இல் இவர் எழுதிய பாரசீக மொழி இலக்கண நூல் மற்றும் இஸ்லாமியத்திற்கு முந்தைய ஏழு அரபு மொழிகளின் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பான மொல்லாகட் (1782) கவிதைகள் பிரித்தானிய மக்களுக்கு அறிமுகமானது.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Curley, Thomas M. (1998). Sir Robert Chambers: Law, Literature, & Empire in the Age of Johnson. University of Wisconsin Press. p. 353. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0299151506. பார்க்கப்பட்ட நாள் 2019-07-17.
  2. Curley 1998, ப. 434.
  3. Institutes of Hindu law by Jones, William, Sir, 1746-1794, Year 1770
  4. Damen, Mark (2012). "SECTION 7: The Indo-Europeans and Historical Linguistics". பார்க்கப்பட்ட நாள் 16 April 2013.
  5. Sir William Jones, British orientalist and jurist

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
William Jones
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஜோன்ஸ்&oldid=3582285" இலிருந்து மீள்விக்கப்பட்டது