வெள்ளி நைத்திரைட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) நைத்திரைட்டு
| |
வேறு பெயர்கள்
அர்செண்டசு நைத்திரைட்டு
| |
இனங்காட்டிகள் | |
7783-99-5 | |
ChemSpider | 141361 |
EC number | 232-041-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 160904 |
| |
UNII | T3MZ57OGIF |
பண்புகள் | |
AgNO2 | |
வாய்ப்பாட்டு எடை | 153.87 கி/மோல் |
தோற்றம் | நிறமற்றது முதல் மஞ்சள் நிறம் வரை |
உருகுநிலை | 140 °C (284 °F; 413 K) |
0.155 கி/100 மி.லி (0 °செல்சியசு) 0.275 கி/100 மி.லி (15 °செல்சியசு 1.363 கி/100 மி.லி (60 °செல்சியசு) | |
கரைதிறன் | எத்தனாலில் கரையாது. |
−42.0·10−6 cm3/mol | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Sigma-Aldrich |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H272, H302, H315, H319, H400 | |
P210, P220, P221, P264, P270, P273, P280, P301+312, P302+352, P305+351+338, P321, P330, P332+313, P337+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளி நைத்திரைட்டு (Silver nitrite) AgNO2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது.[2]
பயன்பாடுகள்
[தொகு]வெள்ளி நைத்திரைட்டு பல பயன்களைக் கொண்டுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை சில:
- அனிலின் சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
- ஒரு பொதுவான ஆக்சிசனேற்றும் முகவராகப் பயன்படுகிறது.
- விக்டர் மேயர் வகை பதிலீட்டு வினைகளில் கரிம புரோமைடு அல்லது கரிம அயோடைடுகளுடன் வினையில் ஈடுபட்டு நைட்ரோ சேர்மங்களை உருவாக்குகிறது. [3]
- தளத்தில் உருவாக்கப்பட்ட நைட்ரைல் அயோடைடுடன் வெள்ளி நைத்திரைட்டும் தனிம நிலை அயோடினும் வினைபுரிந்து நைட்ரோ ஆல்க்கீன் தயாரிக்கும் தொகுப்பு வினையில் பயன்படுகிறது. [4]
தயாரிப்பு
[தொகு]வெள்ளி நைட்ரேட்டும் சோடியம் நைத்திரைட்டு போன்ற ஒரு காரநைத்திரைட்டும் சேர்ந்து வினைபுரியும்போது வெள்ளி நைத்திரைட்டு உருவாகிறது.
- AgNO3 (aq) + NaNO2 (s) → NaNO3 (aq) + AgNO2 (வீழ்படிவு)
வெள்ளி சல்பேட்டுடன் பேரியம் நைட்ரைட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் வெள்ளி நைத்திரைட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]வெள்ளி நைட்ரேட்டை விடக் குறைவாக வெள்ளி நைத்திரைட்டு தண்ணீரில் கரைகிறது. வெள்ளி நைட்ரேட்டுடன் சோடியம் நைட்ரைட்டைச் சேர்த்தால் உடனடியாக வெள்ளி நைத்திரைட்டு வீழ்படிவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Silver nitrite". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
- ↑ American elements
- ↑ Kornblum, N.; Ungnade, H. E. (1958). "1-Nitroöctane (Octane, 1-nitro-)". Organic Syntheses 38: 75. http://www.orgsyn.org/Content/pdfs/procedures/cv4p0724.pdf. பார்த்த நாள்: 6 January 2014.
- ↑ Waldman, Steve; Monte, Aaron, Monte; Bracey, Ann; Nichols, David (1996). "One-pot Claisen rearrangement/O-methylation/alkene isomerization in the synthesis of ortho-methoxylated phenylisopropylamines". Tetrahedron Letters 37 (44): 7889–7892. doi:10.1016/0040-4039(96)01807-2.