ஸ்டான்லி ப்ராட்ஸ்கி
ஸ்டான்லி ப்ராட்ஸ்கி (Stanley Brodsky, பிறப்பு: 9, சனவரி 1940) என்பவர் அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர், மற்றும் இசுட்டான்போர்டு பல்கலைக்கழக, எஸ்எல்ஏசி தேசிய முடுக்கி ஆய்வகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்புகள்
[தொகு]ப்ராட்ஸ்கி 1961 ஆம் ஆண்டு இளங்கலை பட்டமும், 1964 ம் ஆண்டு, மின்னசோட்ட பல்கலைக்கழகத்தில், அவரது இயற்பியல் ஆலோசகர் டொனால்ட் பென்னியின் ஆலோசனையின் பேரில் முனைவர் பட்டமும் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சுங் டாவ் லீ க்கு 1966 ம் ஆண்டு எஸ்எல்ஏசி பணியில் ஆராய்ச்சி இணைப்பாளராக இருந்தார். இவர் 1976 ல் பேராசிரியராக பணிபுரிந்தார்.
ப்ராட்ஸ்கி குவைய நிற இயக்கவியல் பற்றிய ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார். இந்த ஆராய்ச்சி குவார்க்குகள் மற்றும் ஒட்டுமின்னி ஆகியவற்றுக்கு இடையேயான வலிய இடைவினைகளைப் பற்றி விவரிக்கிறது. இவர் 1973 ம் ஆண்டு க்ளென்னிஸ் ஆர் ஃபர்ராரூடன் இணைந்து பெரிய குறுக்குத் திணிவு வேகத்தின் அளவீட்டு விதிகளைப் பற்றிய ஆராயச்சிக் கட்டுரை (இயல். ரெவ். லெட். 31,1153–1156), மற்றும் 1980 ல் பீட்டர் லேபேஜே உடன் இணைந்து உலைவு குவைய நிற இயக்கவியலின் (இயல். ரெவ். டி 22, 2157–2198), பிரத்யேக செயல்முறைகள் பற்றிய கட்டுரையை எழுதினார். இது சாக்காய் பரிசு விருதுக்கு வழிவகுத்தது.[1]
துகள் இயற்பியல் பற்றிய முக்கிய கேள்விகளுக்குக் குறிப்பாக வலுவான இடைவினைகளைப் பற்றிய பிரத்யேக முறைகளுக்கு."[2][3] உலைவு குவைய புல கோட்பாட்டின் பயன்பாட்டினைப் பயன்படுத்தினார். இதற்காக 2007 ம் ஆண்டில் சாக்குராய் பரிசினை பெற்றார். 2015 ல் இயற்பியல் கோட்பாட்டிற்காகச் சர்வதேச விருதும் மற்றும் போமரான்ஜக் பரிசும் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hewett, JoAnne (9 October 2006).
- ↑ 2007 J.J. Sakurai Prize for Theoretical Particle Physics Recipient, aps.org, Retrieved October 8, 2012
- ↑ Plummer, Bard. (9 October 2006).