ஹர்சத் மாதா கோயில்
ஹர்ஷத் மாதா கோவில் (Harshat Mata Temple) என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தானின் ஆபாநேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலாகும். இந்தக் கோயில் இப்போது ஹர்ஷத் மாதா (இலட்சுமி) என்ற தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில கலை வரலாற்றாசிரியர்கள் இது முதலில் வைணவ சன்னதி என்று கருதுகின்றனர்.
அசல் கோயில் பஞ்சயாதனம் பாணியில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதில் நான்கு துணை ஆலயங்களால் சூழப்பட்ட ஒரு பிரதான சன்னதி உள்ளது. பிரதான சன்னதியின் சில பகுதிகள் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளன, அவை பல நூற்றாண்டுகளாக பாழடைந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளன. உயரமான விமானத்துக்குப் பதிலாக கூரை-குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் பெரும்பகுதி தப்பிப்பிழைக்கிறது. அசல் கட்டமைப்பிலிருந்து செதுக்கப்பட்ட கற்களின் துண்டுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான சிற்பங்கள் ஆம்பர் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
கோயிலின் கட்டுமானம் குறித்து கல்வெட்டியல் சான்றுகள் எதுவுமில்லை. ஆனால் அதன் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை பாணிகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், வரலாற்றாசிரியர்கள் இது 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாக நம்புகின்றனர். இது அருகிலுள்ள சாந்த் பௌரி படிக் கிணறைக் கட்டிய பின்னர். கோயிலின் அசல் கட்டடம் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் இது ஒரு கூர்ஜர-பிரதிகார மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இது ஒரு உள்ளூர் சஹாமனா ஆட்சியாளருடன் இணைந்தும் இருக்கலாம். இந்தக் கோயில் இப்போது இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் மத பயன்பாட்டில் உள்ளது.
வரலாறு
[தொகு]காலம்
[தொகு]அசல் ஹர்ஷத் மாதா கோயில் பல நூற்றாண்டுகளாக பாழடைந்து பின்னர், மாற்றியமைக்கப்பட்டுள்ளது. [1] கோயிலின் கட்டுமானம் அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட சாந்த் பௌரி பவோலி படிக்கிணறு குறித்து எந்தவொரு கல்வெட்டு ஆதாரமும் கிடைக்கவில்லை. பரணகர் மற்றும் மாண்டூர் கோயில்களுடன் பாணி மற்றும் செதுக்கல்களில் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில், பாவோலியை 8 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை காணலாம். [2] இது பாவோடி கோயிலுக்கு முன்பே கட்டப்பட்டிருக்கலாம், [3] இது 9ஆம் நூற்றாண்டில் கட்டிடக்கலை அடிப்படையில் அடிப்படையாகக் கொண்டது. [1] பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றாசிரியர் மைக்கேல் டபிள்யூ மெய்ஸ்டர் கோவில் வளாகத்திலுள்ள கட்டடக்கலை விவரங்களின் அடிப்படையில் பொ.ச. 800–825 ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தேதியிட்டுள்ளார். [4]
அர்ப்பணிப்பு
[தொகு]கோயிலில் உள்ள சிற்பங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில், கலை வரலாற்றாசிரியர்களான மீஸ்டர் மற்றும் ஆர்.சி.அக்ரவாலா (1991) ஆகியோர் இந்த கோயில் முதலில் வைணவ சன்னதியாக இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். [5] கலை வரலாற்றாசிரியர் சிந்தியா பாக்கெர்ட் ஆதர்டன் (1995) கோயிலின் உருவப்படம் வைணவத்தின் பாஞ்சராத்திர இயக்கத்தின் பிரதிநிதி என்று கருதுகிறார். [6] இருப்பினும், பான் பல்கலைக்கழகத்தின் பால்க் ரீட்ஸ் (1993), இந்த கோயில் எப்போதும் ஒரு தெய்வத்திற்கு ( தேவி ) அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சக்தி கோயில் என்று நம்புகிறார். ரைட்ஸ் அபானேரியிலிருந்து பல சிற்பத் துண்டுகளை - இப்போது பல்வேறு அருங்காட்சியகங்களில் இருக்கிறது - இக்கோயிலுடன் தொடர்புபடுத்துகிறார். மேலும் இந்த துண்டுகள் வலுவான சாக்தம் மற்றும் சைவச் செல்வாக்கைக் காட்டுகின்றன என்று வரையறுக்கிறார். . [7]
நவீன வரலாறு
[தொகு]20ஆம் நூற்றாண்டில், கருவறையில் ஒரு துர்க்கை சிலை இருந்தது. அது திருடப்பட்டது. அதற்கு பதிலாக லட்சுமி தெய்வத்தின் சிலை மாற்றப்பட்டது. இத் தெய்வம் இப்போது ஹர்ஷத்-மாதா என்று வணங்கப்படுகிறார்.
கோவில் மத பயன்பாட்டில் உள்ளது; இது நவம்பர் 28, 1951 தேதியிட்ட 1951 ஆம் ஆண்டின் சட்டம் எண் LXXI இன் கீழ் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பரமரிக்கப்படுகிறது. [8]
-
நுழைவு படிக்கட்டுகள்
-
கர்ப்பக்கிருகம்
-
கருவறையில் ஹர்ஷத் மாதாவின் சிலை
-
மேலே கோபுரத்தில் கல் சிற்பங்கள்
-
தெய்வம்
-
தெய்வம்
-
வில்லும் அம்பும் கொண்ட மனிதன்
-
அமர்ந்த நிலையில் ஒரு தெய்வம்
-
செதுக்கப்பட்ட மலர் சிற்பம்
-
-
செதுக்கப்பட்ட அடுக்குகள்
-
தூண்
-
செதுக்கப்பட்ட மயில் சிற்பம்
-
வேடிக்கை நிகழ்ச்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Cynthia Packert Atherton 1995.
- ↑ Chandramani Singh, ed. (2002). Protected Monuments of Rajasthan. Jawahar Kala Kendra. pp. 176–177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86782-60-6.
- ↑ Cynthia Packert Atherton 1997.
- ↑ Falk Reitz 1993.
- ↑ Falk Reitz 1993, ப. 652.
- ↑ Cynthia Packert Atherton 1995, ப. 207.
- ↑ Falk Reitz 1993, ப. 649.
- ↑ "Harsat Mata ka Mandir". Archaeological Survey of India Jaipur Circle. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
நூலியல்
[தொகு]- Cynthia Packert Atherton (1995). "The Harṣat-Mātā Temple at Ābānerī: Levels of Meaning". Artibus Asiae 55 (3/4): pp. 201–236. doi:10.2307/3249750.
- Cynthia Packert Atherton (1997). The Sculpture of Early Medieval Rajasthan. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10789-4.
- Falk Reitz (1993). Asko Parpola and Petteri Koskikallio. ed. "The Harṣatmātā Temple at Abaneri: Originally a Devī-pañcāyatana Complex". South Asian Archaeology (Suomalainen Tiedeakatemia) II: 645–656. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789514107290. https://books.google.com/books?id=p_htAAAAMAAJ.
- George Michell, ed. (1990) [1989]. The Penguin Guide to the Monuments of India, Volume 1: Buddhist, Jain, Hindu. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140081445.
மேலும் படிக்க
[தொகு]- Krishna Deva (2008). Temples of North India. National Book Trust, India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-1970-2.
- Michael W. Meister; Madhusudan A. Dhaky (1991). Encyclopaedia of Indian Temple Architecture. Vol. North India. Period of Early Maturity. American Institute of Indian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-04094-3.
- Pupul Jayakar (1959). "Medieval Sculpture: Abaneri". Marg 12 (2): 28–30.
- C. Margabandhu (1981). "Some Notable Sculptures from Abaneri, Rajasthan". In Vijai Shankar Srivastava (ed.). Cultural Contours of India: Dr. Satya Prakash Felicitation Volume. Abhinav. pp. 197–199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-391-02358-1.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Harṣat Mātā ka Mandir தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.