உள்ளடக்கத்துக்குச் செல்

ஹார்டிங் பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹார்டிங் பிரபு
வைஸ்ராய்
பதவியில்
23 நவம்பர் 1910 – 4 ஏப்ரல் 1916
ஆட்சியாளர்ஐந்தாம் ஜோர்ஜ்
முன்னையவர்மிண்டோ பிரபு
பின்னவர்செம்ஸ்போர்டு பிரபு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சூன் 1858
லண்டன்
இறப்பு2 ஆகஸ்டு 1944
கெண்ட், ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
துணைவர்வினிபிரட் செலினா
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிதிருத்துவக் கல்லூரி, கேம்பிரிட்ஜ்
காளை மாட்டு வண்டியில் ஹார்டிங் பிரபுவின் குடும்பம், ஆண்டு 1911

ஹார்டிங் பிரபு (Charles Hardinge, 1st Baron Hardinge of Penshurst) (1858 – 1944), பிரித்தானிய அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான இவர் 1910 முதல் 1916 முடிய பிரித்தானிய இந்தியாவின் வைஸ்ராயாக 1910 முதல் 1916 முடிய பணியாற்றியவர்.

கல்வி

[தொகு]

ஹார்டிங் பிரபு, முன்னாள் இந்தியத் தலைமை ஆளுநர் ஹென்றி ஹார்டிங் பிரபுவின் பேரன் ஆவார். இவர் பள்ளிப் படிப்பை ஆரோ பள்ளியிலும்,[1] கல்லூரிப் படிப்பை லண்டன் திருத்துவக் கல்லூரியிலும் முடித்தவர்.[2]

இந்தியத் தலைமை ஆளுநராக

[தொகு]
1912 ல் ஹார்டிங் பிரபு மீதான கொலை முயற்சி

ஹார்டிங் பிரபு 1910ல் இந்தியத் தலைமை ஆளுநராக கல்தத்தாவின் வில்லியம் கோட்டையில் பதவி ஏற்றார்.

பிரித்தானியப் பேரரசர் ஐந்தாம் ஜோர்ஜ் தில்லி தர்பாரில் வருகை தந்த போது, தலைமை ஆளுநரான ஹார்டிங் பிரபு வரவேற்றார். இவரது ஆட்சிக் காலத்தில் பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் 1912ல் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.

தில்லி-லாகூர் சதி திட்டத்தின்படி, இந்திய விடுதலை இயக்கத்தின் தீவிரவாதப் பிரிவினர், ஹார்டிங் பிரபுவை கொலை செய்யும் முயற்சியிலிருந்து தப்பினார்.

1914ஆம் ஆண்டில் ஹார்டிங் பிரபு, முதல் உலகப் போரின் போது, பிரித்தானிய இராணுவத்திற்கு உதவ இந்திய வீரர்களின் ஒத்துழைப்பை பெற்று, இந்தியாவிற்கு வெளியே மெசபடோமியாவில் போரிட உதவினார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. photo at Harrow Photos பரணிடப்பட்டது 2009-04-17 at the வந்தவழி இயந்திரம் and cf List of Old Harrovians
  2. "Hardinge, the Hon. Charles (HRDN876C)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  3. Lord Hardinge and the Mesopotamia Expedition and Inquiry, 1914–1917; Douglas Goold; The Historical Journal, Vol. 19, No. 4 (Dec., 1976), pp. 919–945

ஆதாரங்கள்

[தொகு]
  • Briton C. Busch (1980). Hardinge of Penshurst: a study of the old diplomacy. Hamden, Conn.: Conference on British Studies and Indiana University at South Bend by Archon Books.
  • Lord Hardinge of Penshurst (1947). The Reminiscences of Lord Hardinge of Penshurst. London.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Steiner, Zara S. (1969). The Foreign Office and Foreign Policy 1898–1914. Cambridge.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)

கட்டுரைகள்

[தொகு]
  • Goold, Douglas (1976). "Lord Hardinge and the Mesopotamia Expedition and Inquiry, 1914–1917". The Historical Journal 19 (4). 

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்டிங்_பிரபு&oldid=3858765" இலிருந்து மீள்விக்கப்பட்டது