உள்ளடக்கத்துக்குச் செல்

2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு

ஆள்கூறுகள்: 39°42′21″N 104°49′14″W / 39.7059°N 104.8206°W / 39.7059; -104.8206
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு
அவுரோரா நகர நிலையம் - துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்
அவுரோரா நகர நிலையம் - துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்
கீழ் இடம்: டென்வருடன் கொலராடோ மற்றும் அவுரோரா குறிக்கப்பட்ட வரைபடம்.
மேல்: மத்திய அவுரோரா வரைபடம்.
கீழ் வலம்:அவுரோரா நகர நிலையத்துடன் சென்சுரி 16 படமாளிகை அமைவிடம்.
இடம்14300 இ. அலமெடா அவென்யு
அவுரோரா, கொலராடோ, அமெரிக்கா.[1]
ஆள்கூறுகள்39°42′21″N 104°49′14″W / 39.7059°N 104.8206°W / 39.7059; -104.8206
நாள்சூலை 20, 2012 (2012-07-20)
12:39 காலை (உள்ளூர் நேரம்) (UTC-6)
தாக்குதல்
வகை
பொருந்திரள் கொலை
ஆயுதம்ஏஆர்-15, ரெமிங்டன் 870, 2 .40 கலிபர் குளக் கைத்துப்பாக்கி[2][3]
இறப்பு(கள்)12
காயமடைந்தோர்58[4]
சந்தேக நபர்ஜேம்ஸ் ஈகன் கொல்மஸ் (கைது)[5] [6]

20 சூலை 2012 அன்று ஒரு ஆயுததாரியால் த டார்க் நைட் ரைசஸ் என்ற திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள அவுரோரா எனுமிடத்திடத்திலுள்ள ஓர் படமாளிகை மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டும், 58 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புக் கவசம் அணிந்திருந்த தனியொரு ஆயுததாரி படமாளிகையினுள் நுழைந்து புகை கைக்குண்டுகளினால் தாக்கிவிட்டு பலவித துப்பாக்கிகளினாலும் தாக்குதல் நடத்தினார். சமகால அமெரிக்க வரலாற்றில் இது பயங்கரமான பொருந்திரள் கொலையும் உலகளாவிய ஊடகங்களில் இத்தாக்குதல் முக்கிய இடத்தையும் பிடித்தது.

தாக்குதலுக்குள்ளானோர்

[தொகு]

10 பேர் சம்பவ இடத்தில் மரணமடைய, 2 பேர் உள்ளூர் வைத்தியசாலையில் மரணமடைந்தனர்[6] சுடப்பட்ட 70 பேர்களில் 58 பேர் காயமடைய, 12 பேர் மரணமாயினர்.[6][7][8]

தாக்குதலுக்குள்ளானோரில் 3 மாத குழந்தை முதல் 51 வயது உடையோர் வரை காணப்பட்டனர். காயப்பட்டவர்களில் 3 அமெரிக்க படைத்துறையினரும் அடங்குவர்.[9]

சந்தேக நபர்

[தொகு]

சந்தேக நபர் ஜேம்ஸ் ஈகன் கொல்மஸ் (பிறப்பு: டிசம்பர் 13, 1987) சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் படமாளிகைக்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் காணப்பட்ட இவர் கைது செய்தபோது எதிர்ப்பு எதனையும் காட்டவில்லை. அவருடைய வாகனத்திலிருந்து பல துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. இது பற்றி கருத்துத் தெரிவித்த அலுவலர்கள் சந்தேக நபர் தன் தலைக்கு சிவப்பு நிற மை புசி தன்னைத்தானே "கோமாளி" என்றழைத்ததாக ஏபிசி செய்திக்குத் தெரிவித்தனர். ஆயினும் இதுபற்றி அவுரோரா காவல்துறை அதிகாரி எதுவும் தெரிவிக்கவில்லை.[10]

குறிப்புகள்

[தொகு]
  1. Parker, Ryan; Lee, Kurtis; Ingold, John; Steffen, Jordan; Brown, Jennifer (July 20, 2012). "Family identifies 27-year-old victim of Aurora theater shooting". The Denver Post. http://www.denverpost.com/news/ci_21118201. பார்த்த நாள்: July 20, 2012. 
  2. "Police: Suspect wore body armor, used assault rifle, shotgun, Glock handgun in theater attack". Associated Press. CBS. July 20, 2012 இம் மூலத்தில் இருந்து ஜூலை 22, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120722233312/http://www.cbsnews.com/8301-501368_162-57476870/police-suspect-wore-body-armor-used-assault-rifle-shotgun-glock-handgun-in-theater-attack/. பார்த்த நாள்: July 20, 2012. 
  3. "Batman premiere gunman looked like 'assassin ready for war'". CBC News. July 20, 2012. http://www.cbc.ca/news/world/story/2012/07/20/denver-shooting-movie-premiere.html. பார்த்த நாள்: July 20, 2012. 
  4. [1] Breakingnews Denverpost
  5. [2] Breakingnews - abcnews
  6. 6.0 6.1 6.2 Carter, Chelsea J.; Pearson, Michael (July 20, 2012). "Gunman turns 'Batman' screening into real-life 'horror film'". CNN. http://www.cnn.com/2012/07/20/us/colorado-theater-shooting/index.html. பார்த்த நாள்: July 20, 2012. 
  7. Dan Frosch; Kirk Johnson (July 20, 2012). "Gunman Kills 12 in Colorado, Reviving Gun Debate". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/07/21/us/shooting-at-colorado-theater-showing-batman-movie.html?pagewanted=print. பார்த்த நாள்: July 20, 2012. 
  8. "Shooting Suspect Attacked During 'Dark Knight Rises' Movie". CBS Denver. July 20, 2012. http://denver.cbslocal.com/2012/07/20/aurora-colorado-mall-shooting-town-center-century-16/. பார்த்த நாள்: July 20, 2012. 
  9. Sandall, Clayton; Dolak, Kevin; Curry, Colleen (July 20, 2012). "Colorado Movie Theater Shooting: Suspect Bought 4 Guns, 6,000 Rounds of Ammunition in Past 60 Days". ABC News. http://abcnews.go.com/US/colorado-movie-theater-shooting-suspect-bought-guns-6000/story?id=16817842. பார்த்த நாள்: July 20, 2012. 
  10. "Aurora 'Dark Knight' Suspect James Holmes Says He 'Was the Joker': Cops – ABC News". Abcnews.go.com. பார்க்கப்பட்ட நாள் July 21, 2012.

வெளியிணைப்புக்கள்

[தொகு]

வரைபடம்

ஒலி வடிவம்

செய்திகளும் காணொளியும்