உள்ளடக்கத்துக்குச் செல்

2014 உலகக்கோப்பை காற்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2014 உலகக்கோப்பை கால்பந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2014 உலகக்கோப்பை கால்பந்து
Copa do Mundo da FIFA
பிரேசில் 2014
2014 பீஃபா உலகக் கிண்ண அதிகாரபூர்வச் சின்னம்:
Juntos num só ritmo
(All in one rhythm)
(எல்லோரும் ஒரே தாளத்தில்)
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுபிரேசில்
நாட்கள்12 சூன் – 13 சூலை
அணிகள்32 (5 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)12 (12 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் செருமனி (4-ஆம் தடவை)
இரண்டாம் இடம் அர்கெந்தீனா
மூன்றாம் இடம் நெதர்லாந்து
நான்காம் இடம் பிரேசில்
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்64
எடுக்கப்பட்ட கோல்கள்171 (2.67 /ஆட்டம்)
பார்வையாளர்கள்34,29,873 (53,592/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)கொலம்பியா ஜேம்சு ரொட்ரீகசு
(6 கோல்கள்)[1]
சிறந்த ஆட்டக்காரர்அர்கெந்தீனா லியோனல் மெசி[2]
சிறந்த இளம் ஆட்டக்காரர்பிரான்சு பவுல் பொக்பா[3]
சிறந்த கோல்காப்பாளர்செருமனி மானுவல் நொயார்[4]
2010
2018

2014 உலகக்கோப்பை காற்பந்து (2014 FIFA World Cup) அல்லது 20 ஆவது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் பிரேசிலில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெற்றன.

இரண்டாவது தடவையாக பிரேசிலில் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. முதற்தடவை 1950 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் இங்கு நடைபெற்றன. தென் அமெரிக்காவில் இடம்பெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டி இதுவாகும். முன்னதாக 1978 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் இடம்பெற்றது. 2007 இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடாக பிரேசிலைத் தேர்ந்தெடுத்தது.

சூன் 2011இல் துவங்கிய 2014 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று 31 நாடுகள் இப்போட்டியில் நுழைந்தன. ஏற்று நடத்தும் நாடான பிரேசிலையும் சேர்த்து 32 அணிகள் மோதின. மொத்தம் 64 ஆட்டங்கள் பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெற்றன. இந்த 12 நகரங்களிலிலும் விளையாட்டரங்கங்கள் புதியதாகவோ புதுப்பிக்கப்பட்டதாகவோ கட்டமைக்கப்பட்டன. இம்முறையே முதன்முதலாகப் புதிய கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டது.[5]

1930 இலிருந்து உலகக்கோப்பையை வென்ற உலக வாகையாளர்களான உருகுவை, பிரேசில், இத்தாலி, செருமனி, இங்கிலாந்து, அர்கெந்தீனா, பிரான்சு மற்றும் எசுப்பானியா ஆகியன 2014 போட்டிகளில் பங்கேற்றன. 2010 உலகக்கோப்பை வாகையாளரான எசுப்பானியா அணி, மற்றும் இங்கிலாந்து, இத்தாலி ஆகியன குழுநிலை ஆட்டங்களில் தோல்வியுற்று வெளியேறின. உருகுவாய் 16 அணிகளின் சுற்றிலும், பிரான்சு காலிறுதியிலும் தோல்வியுற்று வெளியேறின. பிரேசில் அணி அரையிறுதியில் தோல்வியடைந்ததை அடுத்து இறுதிப் போட்டியில் அர்கெந்தீனாவும், செருமனியும் போட்டியிட்டன. இதுவரை அமெரிக்கக் கண்டங்களில் இடம்பெற்ற ஏழு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் தென் அமெரிக்க அணிகளே வென்றுள்ளன.[6] இறுதியாட்டத்தில் செருமனி அர்கெந்தீனாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் பெற்றது.[7]

போட்டி நடத்தும் நாடு தேர்வு

[தொகு]
செப் பிளாட்டர் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக பிரேசிலை அறிவித்தல்

மார்ச்சு 7, 2003இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒவ்வொரு கண்டத்திலும் போட்டிகளை சுழற்றுவது என்ற கொள்கைக்கேற்ப 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் தென் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவித்தது.[8][9] இந்த முடிவு முதன்முறையாக அடுத்தடுத்த இரு உலகக்கோப்பைகள் ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட வாய்ப்பளித்தது.

சூன் 3, 2003இல் தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு அர்கெந்தீனா, பிரேசில்,கொலாம்பியா இந்தப் போட்டிகளை நடத்த விரும்பியது.[10] ஆனால், மார்ச்சு 2004இல் கூடிய தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு சங்கங்கள் ஒருமனதாக பிரேசில் இந்தப் போட்டிகளை தங்கள் சார்பில் நடத்த தெரிவு செய்தன.[11]

இடைக்காலத்தில் கொலம்பியா தான் ஏற்று நடத்த ஏலக்கோரிக்கையை அனுப்ப முடிவு செய்து[12] அலுவல்பூர்வமாக திசம்பர் 2006இல் தனது கோரிக்கையை அறிவித்தது.[13] இதற்கு ஒரு வாரம் முன்னதாக பிரேசிலும் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.[14] பின்னதாக, கொலம்பியா அலுவல்பூர்வமாக ஏப்ரல் 2007இல் தனது ஏலக்கோரிக்கையை மீட்டுக் கொண்டதால் மீண்டும் பிரேசிலே ஒரே கோரிக்கையாளராக அமைந்தது.[15] 2007ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் ஃபிபா முறையாக பிரேசிலை இந்நிகழ்வை ஏற்று நடத்தும் நாடாக உறுதி செய்தது.[16]

தகுதிநிலை

[தொகு]

இறுதிப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான இடங்கள் மார்ச் 3, 2011 அன்று முடிவாயின; 31 இடங்களுக்கான பகிர்வு முந்தையப் போட்டியைப் போன்றே தகுதிப் போட்டிகளின் மூலம் முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.[17] சூலை 30, 2011 அன்று இரியோ டி செனீரோவில் உள்ள மரீனா ட குளோரியா தங்குவிடுதியில் 2014 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுக்கான நிரல் வரையப்பட்டது.[18][19] ஏற்று நடத்தும் நாடாக, பிரேசில் தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.

208 ஃபிஃபா தேசிய அணிகளில் 203 தகுதிச் சுற்றுக்களில் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் சூன் 15, 2011 முதல் நவம்பர் 20, 2013 வரை நடைபெற்றன. தகுதிபெற்ற 32 அணிகளில் 24 அணிகள் முந்தைய போட்டியிலும் தகுதி பெற்றிருந்தனர். புதியவர்களாக பொசுனியா எர்செகோவினா, முதல்முறையாக தனிநாடாக, தகுதி பெற்றுள்ளனர்.[20] பிஃபா உலகத் தரவரிசைப்படி உயர்ந்த தரவரிசையில் இருந்து பங்குபெறாத நாடாக உக்ரைன் உள்ளது.[21] 2002க்குப் பிறகு முதன்முறையாக ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து எந்த அணியும் இந்த உலகக்கோப்பையில் தகுதிபெறவில்லை.

தகுதிபெற்ற அணிகள்

[தொகு]

கீழ்வரும் 32 அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. போட்டி ஆட்டங்களின் நிரலை வரைவதற்கான அவற்றின் போட்டி தரவரிசைகளுக்கு பிஃபா தரவரிசைப் பட்டியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[22]

ஆசி.காகூ (4)
ஆப்.காகூ (5)
ஓகாகூ (0)
  • தகுதி பெறவில்லை
வமஅககாகூ (4)
தெஅகாகூ (6)

ஐகாசகூ (13)

  உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற நாடு
  தகுதி பெறாத நாடு
  போட்டியிடாத நாடு
  பிஃபா உறுப்பினரல்லாத நாடு

இடம்

[தொகு]

பனிரெண்டு இடங்கள் (ஏழு புதிய மற்றும் ஐந்து புணரமைக்கப்பட்ட இடங்கள்) பனிரெண்டு நகர்களில் இருந்து போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இரியோ டி செனீரோ, ரிசெ பிரசிலியா, கூமா சாவோ பாவுலோ, சாபா போர்த்தலேசா, சியா
எசுடேடியோ டொ மரக்கானா எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா[23] கொரிந்தியன்சு அரங்கம் எசுடேடியோ கேஸ்தலோவ்

22°54′43.8″S 43°13′48.59″W / 22.912167°S 43.2301639°W / -22.912167; -43.2301639 (Estádio do Maracanã)

15°47′0.6″S 47°53′56.99″W / 15.783500°S 47.8991639°W / -15.783500; -47.8991639 (Estádio Nacional Mané Garrincha)

23°32′43.91″S 46°28′24.14″W / 23.5455306°S 46.4733722°W / -23.5455306; -46.4733722 (Arena de São Paulo)

3°48′26.16″S 38°31′20.93″W / 3.8072667°S 38.5224806°W / -3.8072667; -38.5224806 (Estádio Castelão)

கொள்ளளவு: 76,935[24]

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளளவு: 70,042[25]

(புதிய அரங்கு)

கொள்ளளவு: 68,000
(புதிய அரங்கு)
கொள்ளளவு: 64,846[26]

(புதுப்பிக்கப்பட்டது)

பெலோ அரிசாஞ்ச், மிஜெ போர்ட்டோ அலெக்ரி, ரிசு
மினெய்ரோ விளையாட்டரங்கம் எசுடேடியோ பெய்ரா ரியோ

19°51′57″S 43°58′15″W / 19.86583°S 43.97083°W / -19.86583; -43.97083 (Estádio Mineirão)

30°3′56.21″S 51°14′9.91″W / 30.0656139°S 51.2360861°W / -30.0656139; -51.2360861 (Estádio Beira-Rio)

கொள்ளவு: 62,547

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளவு: 51,300[27]
(புதுப்பிக்கப்பட்டது)
சால்வடோர், பா ரெசிஃபி, பெ
அரீனா பொன்டே நோவா இட்டாய்பவா அரீனா

12°58′43″S 38°30′15″W / 12.97861°S 38.50417°W / -12.97861; -38.50417 (Arena Fonte Nova)

8°2′24″S 35°0′29″W / 8.04000°S 35.00806°W / -8.04000; -35.00806 (Arena Pernambuco)

கொள்ளவு: 56,000[28]

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளவு: 46,154

(புதிய அரங்கு)

குய்யாபா, மா மனௌசு, அமா நடால், ரி குரிடிபே,
அரீனா பன்டனல் அரீனா அமசோனியா அரீனா டஸ் டுனஸ் அரீனா ட பய்க்சாடா

15°36′11″S 56°7′14″W / 15.60306°S 56.12056°W / -15.60306; -56.12056 (Arena Pantanal)

3°4′59″S 60°1′41″W / 3.08306°S 60.02806°W / -3.08306; -60.02806 (Arena Amazônia)

5°49′44.18″S 35°12′49.91″W / 5.8289389°S 35.2138639°W / -5.8289389; -35.2138639 (Arena das Dunas)

25°26′54″S 49°16′37″W / 25.44833°S 49.27694°W / -25.44833; -49.27694 (Arena da Baixada)

கொள்ளவு: 42,968
(புதிய அரங்கு)
கொள்ளவு: 42,374
(புதிய அரங்கு)
கொள்ளவு: 42,086
(புதிய அரங்கு)
கொள்ளவு: 43,981[29]
(புதுப்பிக்கப்பட்டது)

இறுதி குலுக்கல்

[தொகு]
தொட்டி 1 (மூலம்) தொட்டி 2 (ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா) தொட்டி 3 (ஆசியா மற்றும் வட அமெரிக்கா) தொட்டி 4 (ஐரோப்பா)

 பிரேசில் (நடத்தும் நாடு)
 அர்கெந்தீனா
 கொலம்பியா
 உருகுவை
 பெல்ஜியம்
 செருமனி
 எசுப்பானியா
 சுவிட்சர்லாந்து

 அல்ஜீரியா
 கமரூன்
 ஐவரி கோஸ்ட்
 கானா
 நைஜீரியா
 சிலி
 எக்குவடோர்

 ஆத்திரேலியா
 சப்பான்
 ஈரான்
 தென் கொரியா
 கோஸ்ட்டா ரிக்கா
 ஒண்டுராசு
 மெக்சிக்கோ
 ஐக்கிய அமெரிக்கா

 பொசுனியா எர்செகோவினா
 குரோவாசியா
 இங்கிலாந்து
 பிரான்சு
 கிரேக்க நாடு
 இத்தாலி (தொட்டி 2க்கு)
 நெதர்லாந்து
 போர்த்துகல்
 உருசியா

ஆட்ட நடுவர்கள்

[தொகு]

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மார்ச்சு 2013இல் முன்தெரிவாக 52 நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆறு காற்பந்து கூட்டமைப்புக்களிலிலிருந்தும் ஒரு நடுவருக்கு இரு துணை நடுவர்கள் கூட்டாக இந்தப் பட்டியல் அமைந்திருந்தது.[30] 2014 சனவரி 14 அன்று பிஃபாவின் நடுவர் குழு 25 மூன்று நபர் நடுவர் அணிகளையும் ஆதரவாக எட்டு இரட்டையர் அணிகளையும் 43 வெவ்வேறு நாடுகளிலிலிருந்து அறிவித்தது.[31][32]

கோல்-கோடு தொழினுட்பம்

[தொகு]

உலகக்கோப்பை காற்பந்தின் இறுதிப்போட்டிகளில் முதன்முறையாக நடுவர்களுக்குத் துணையாக கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உந்துதலாக முந்தைய உலகக்கோப்பை அமைந்தது; 2010ஆம் ஆண்டுப் போட்டியில் பதினாறுவர் சுற்றில் செருமனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு கோல் வழங்க தவறுதலாக மறுக்கப்பட்டது.[33] இந்தப் பிழையை அடுத்து பிஃபா தலைவர் செப் பிளாட்டர் "கோல்-கோடு தொழினுட்பத்தைக் கருத்தில் எடுக்காதிருப்பது முட்டாள்தனம்" எனக் கடுமையாகச் சாடினார்.[34] இதனையடுத்து 2012இல் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் இதன் பயன்பாட்டிற்கு ஏற்பளித்தது.[35] இந்த மாற்றத்திற்கு பின்பு இந்தத் தொழினுட்பம் பிஃபாவின் 2012, 2013 கழக உலகக்கோப்பை போட்டிகளிலும் 2013 கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் முறையாக 2014 உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படவுள்ளது. அக்டோபர் 2013இல் செருமனி நிறுவனத்தின் கோல்கன்ட்ரோல் இந்தப் போட்டியில் அலுவல்முறையாகப் பயன்படுத்தவிருக்கும் தொழினுட்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[36]

இந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோபை காற்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி மற்றும் ஹாண்டூரஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் 48 ஆவது நிமிடத்தில் பென்சமா அடித்த கோல் அடிக்க முயற்சி செய்தபோது, பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பும் வேளையில், அந்த கோலைத் தடுக்க முயற்சித்த ஹாண்டூரஸ் அணியின் கோல் கீப்பர் நோயல் வெலாட்ரஸின் கைகளில் உரசி கோல் எல்லைக் கோட்டைக் கடந்தது என்று முறைப்பாடு எழ, 'கோல்-கோடு தொழினுட்பம்' மூலம் பந்து கோல் வலையின் கோட்டைக் கடந்தது என்று முடிவு செய்யப்பட்டது.[37]

மறைகின்ற தெளிப்பு

[தொகு]

உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் முதன்முறையாக மறைகின்ற தெளிப்பு பயன்படுத்தப்படவிருக்கின்றது; நீரை அடிப்படையாகக் கொண்ட இந்த தெளிப்பு சில நிமிடங்களிலேயே மறைகின்ற தன்மை உடையதாக உள்ளது. தடங்கலற்ற உதையின்போது தடுக்கும் அணிக்கான பத்து கஜ கோட்டையும் பந்தை எங்கு வைப்பது என்பதையும் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. 2013 பிஃபா 20-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா 17-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா கழகங்களுக்கான உலகக்கோப்பையிலும் வெற்றிகரமான சோதனையோட்டங்களுக்குப் பிறகு இதன் பயன்பாட்டிற்கு பிஃபா அனுமதி வழங்கியுள்ளது.[38]

போட்டிகள்

[தொகு]

குழு நிலை

[தொகு]

குழுவில் வெற்றி பெற்ற அணிகளும் அதற்கடுத்து வரும் அணிகளும் சுற்று 16க்கு முன்னேறும்.[39]

  வாகையாளர்
  இரண்டாமிடம்

  மூன்றாமிடம்
  நான்காமிடம்

  கால் இறுதி
  சுற்று 16

  குழு நிலை

சமநிலையை முறி கட்டளை விதி

குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறதி செய்யப்படும்:

  1. எல்லா குழு போட்டிகளிலும் அதிக புள்ளி
  2. எல்லா குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம்
  3. எல்லா குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை
  4. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள்
  5. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம்
  6. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை
  7. பீபா ஒழுங்கமைப்புக் குழுவினுடைய சீட்டுக் குலுக்கல்
குழு அட்டவணையில் முக்கிய நிறம்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறாத அணிகள்

குழு ஏ

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 பிரேசில் 3 2 1 0 7 2 +5 7
 மெக்சிக்கோ 3 2 1 0 4 1 +3 7
 குரோவாசியா 3 1 0 2 6 6 0 3
 கமரூன் 3 0 0 3 1 9 −8 0
பிரேசில் 3-1 குரோவாசியா
நெய்மார் Goal 29'71' (தண்ட உதை)
ஒஸ்கார் Goal 90+1'
அறிக்கை மாசெலோ Goal 11' (சுய கோல்)[nb 1]
பார்வையாளர்கள்: 62,103[41]
நடுவர்: யூச்சி நிசிமுரா (ஜப்பான்)[42]

மெக்சிக்கோ 1-0 கமரூன்
பெரல்டா Goal 61' அறிக்கை
பார்வையாளர்கள்: 39,216
நடுவர்: வில்மர் ரொல்டன் (கொலம்பியா)

பிரேசில் 0-0 மெக்சிக்கோ
அறிக்கை
பார்வையாளர்கள்: 60,342
நடுவர்: கூனெய்த் சாகிர் (துருக்கி)

கமரூன் 0-4 குரோவாசியா
அறிக்கை ஒலிக் Goal 11'
பெரிசிக்Goal 48'
மான்சுகிக்Goal 61' Goal 73'
பார்வையாளர்கள்: 39,982
நடுவர்: பெட்ரோ புரொவென்கா (போர்த்துக்கல்)

கமரூன் 1–4 பிரேசில்
மட்டிப் Goal 26' அறிக்கை நெய்மர் Goal 17'35'
பிரட் Goal 49'
பெர்னாண்டினோ Goal 84'
பார்வையாளர்கள்: 69,112
நடுவர்: ஜோன்ஸ் எரிக்சன் (சுவீடன்)

குரோவாசியா 1–3 மெக்சிக்கோ
ஐவன் பெரிசிக் Goal 87' அறிக்கை மார்க்குயிஸ் Goal 72'
குராடோ Goal 75'
கெர்னாட்ஸ் Goal 82'
பார்வையாளர்கள்: 41,212
நடுவர்: ரவ்சான் இர்மடோவ் (உஸ்பெகிஸ்தான்)

குழு பி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 நெதர்லாந்து 3 3 0 0 10 3 +7 9
 சிலி 3 2 0 1 5 3 +2 6
 எசுப்பானியா 3 1 0 2 4 7 −3 3
 ஆத்திரேலியா 3 0 0 3 3 9 −6 0
எசுப்பானியா 1–5 நெதர்லாந்து
அலன்சோ Goal 27' (தண்ட உதை) அறிக்கை வான் பெர்சீ Goal 44'72'
ரொபென் Goal 53'80'
டெ விரிச் Goal 65'
பார்வையாளர்கள்: 48,173
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

சிலி 3-1 ஆத்திரேலியா
சான்செசு Goal 12'
வால்தீவியா Goal 14'
போசெசோர் Goal 90+2'
அறிக்கை காகில் Goal 35'
பார்வையாளர்கள்: 40,275
நடுவர்: நுமான்டியெசு டூயே (ஐவரி கோஸ்ட்)

ஆத்திரேலியா 2-3 நெதர்லாந்து
டிம் காகில் Goal 21'
ஜெடினாக் Goal 54' (தண்ட உதை)
அறிக்கை ரொபென் Goal 20'
வான் பெர்சி Goal 58'
டெப்பே Goal 68'
பார்வையாளர்கள்: 42,877
நடுவர்: ஜமெல் ஐமூடி (அல்சீரியா)

எசுப்பானியா 0-2 சிலி
அறிக்கை வர்கஸ் Goal 19'
அராகிஸ் Goal 43'
பார்வையாளர்கள்: 74,101
நடுவர்: மார்க் கெய்கர் (ஐக்கிய அமெரிக்கா)

ஆத்திரேலியா 0-3 எசுப்பானியா
அறிக்கை டேவிட் வில்லா Goal 36'
டொரெசு Goal 69'
மட்டா Goal 82'
பார்வையாளர்கள்: 39,375
நடுவர்: நவாப் சுக்ராலா (பகுரைன்)

நெதர்லாந்து 2-0 சிலி
ஃபெர் Goal 77'
மெம்பிசு Goal 90+2'
அறிக்கை
பார்வையாளர்கள்: 62,996
நடுவர்: பக்காரி கசாமா (காம்பியா)

குழு சி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 கொலம்பியா 3 3 0 0 9 2 +7 9
 கிரேக்க நாடு 3 1 1 1 2 4 −2 4
 ஐவரி கோஸ்ட் 3 1 0 2 4 5 −1 3
 சப்பான் 3 0 1 2 2 6 −4 1
கொலம்பியா 3–0 கிரேக்க நாடு
ஆர்மெரோ Goal 5'
குடியெர்ஸ் Goal 58'
ரொட்ரிகஸ் Goal 90+3'
அறிக்கை
பார்வையாளர்கள்: 57,174
நடுவர்: மார்க் கெய்கர் (ஐக்கிய அமெரிக்கா)

ஐவரி கோஸ்ட் 2-1 சப்பான்
பொனி Goal 64'
ஜெர்வீனோ Goal 66'
அறிக்கை ஒண்டா Goal 16'
பார்வையாளர்கள்: 40,267
நடுவர்: என்றிக் ஓசெஸ் (சிலி)

கொலம்பியா 2–1 ஐவரி கோஸ்ட்
ரொட்ரீகசு Goal 64'
குவுன்டெரோ Goal 70'
அறிக்கை செர்வீனோ Goal 73'
பார்வையாளர்கள்: 68,748
நடுவர்: ஹவார்ட் வெப் (இங்கிலாந்து)

சப்பான் 0-0 கிரேக்க நாடு
அறிக்கை
பார்வையாளர்கள்: 39,485
நடுவர்: ஜொயெல் அகிலார் (எல் சால்வடோர்)

சப்பான் 1–4 கொலம்பியா
ஓக்கசாக்கி Goal 45+1' அறிக்கை குட்ராடோ Goal 17' (தண்ட உதை)
மார்டினெஸ் Goal 55'82'
ரொட்ரிக்கஸ் Goal 90'
பார்வையாளர்கள்: 40,340
நடுவர்: பெட்ரோ (போர்த்துக்கல்)

கிரேக்க நாடு 2–1 ஐவரி கோஸ்ட்
சமாரிஸ் Goal 42'
சமராஸ் Goal 90+3' (தண்ட உதை)
அறிக்கை பொனி Goal 74'
பார்வையாளர்கள்: 59,095
நடுவர்: கரோல்ஸ் வேரா (ஈக்வடோர்)

குழு டி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 கோஸ்ட்டா ரிக்கா 3 2 1 0 4 1 +3 7
 உருகுவை 3 2 0 1 4 4 0 6
 இத்தாலி 3 1 0 2 2 3 −1 3
 இங்கிலாந்து 3 0 1 2 2 4 −2 1
உருகுவை 1-3 கோஸ்ட்டா ரிக்கா
கவானி Goal 24' (தண்ட உதை) அறிக்கை கேம்பெல் Goal 54'
துவார்த்தே Goal 57'
யுரேனா Goal 84'
பார்வையாளர்கள்: 58,679
நடுவர்: பீலிக்சு பிரிக் (செருமனி)

இங்கிலாந்து 1-2 இத்தாலி
ஸ்டரிட்ச் Goal 37' அறிக்கை மார்ச்சீசியோ Goal 35'
பலொட்டெலி Goal 50'
பார்வையாளர்கள்: 39,800
நடுவர்: பியோர்ன் கூப்பர்சு (நெதர்லாந்து)

உருகுவை 2-1 இங்கிலாந்து
சுவாரெசு Goal 39'85' அறிக்கை ரூனி Goal 75'
பார்வையாளர்கள்: 62,575
நடுவர்: கார்லோசு கர்வாலோ (எசுப்பானியா)

இத்தாலி 0-1 கோஸ்ட்டா ரிக்கா
அறிக்கை ரூயிசு Goal 44'
பார்வையாளர்கள்: 40,285
நடுவர்: என்றிக்கே ஓசெசு (சிலி)

இத்தாலி 0–1 உருகுவை
அறிக்கை டிகோ கோடின் Goal 81'
பார்வையாளர்கள்: 39,706
நடுவர்: மாகோ ரொட்ரிக்கஸ் (மெக்சிக்கோ)

கோஸ்ட்டா ரிக்கா 0–0 இங்கிலாந்து
அறிக்கை
பார்வையாளர்கள்: 57,823
நடுவர்: கைமெளடி (அல்ஜீரியா)

குழு ஈ

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 பிரான்சு 3 2 1 0 8 2 +6 7
 சுவிட்சர்லாந்து 3 2 0 1 7 6 +1 6
 எக்குவடோர் 3 1 1 1 3 3 0 4
 ஒண்டுராசு 3 0 0 3 1 8 −7 0
சுவிட்சர்லாந்து 2-1 எக்குவடோர்
மெக்மெதி Goal 48'
செஃபெரோவிச் Goal 90+3'
அறிக்கை எ. வலென்சியா Goal 22'
பார்வையாளர்கள்: 68,351
நடுவர்: ராவ்சன் இர்மாத்தொவ் (உசுபெக்கிசுத்தான்)

பிரான்சு 3-0 ஒண்டுராசு
பென்சிமா Goal 45' (தண்ட உதை), Goal 72'
வலாடெரெசு Goal 48' (சுய கோல்)
அறிக்கை
பார்வையாளர்கள்: 43,012
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

சுவிட்சர்லாந்து 2-5 பிரான்சு
ஜெமாய்லி Goal 81'
ஹாக்கா Goal 87'
அறிக்கை கிரூட் Goal 17'
மத்தூடி Goal 18'
வால்பூனா Goal 40'
பென்சிமா Goal 67'
சிசோக்கோ Goal 73'
பார்வையாளர்கள்: 51,003
நடுவர்: யோன் குயிப்பர்சு (நெதர்லாந்து)

ஒண்டுராசு 1-2 எக்குவடோர்
கோஸ்ட்லி Goal 31' அறிக்கை எ. வலேன்சியா Goal 34'65'
பார்வையாளர்கள்: 39,224
நடுவர்: பென் வில்லியம்சு (ஆத்திரேலியா)

ஒண்டுராசு 0-3 சுவிட்சர்லாந்து
அறிக்கை சக்கிரி Goal 6'31'71'
பார்வையாளர்கள்: 40,322
நடுவர்: நெஸ்டர் (ஆர்ஜெந்தீனா)

எக்குவடோர் 0–0 பிரான்சு
அறிக்கை
பார்வையாளர்கள்: 73,749
நடுவர்: நெளமன்டிஸ் (ஐவரி கோஸ்ட்)

குழு எப்

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 அர்கெந்தீனா 3 3 0 0 6 3 +3 9
 நைஜீரியா 3 1 1 1 3 3 0 4
 பொசுனியா எர்செகோவினா 3 1 0 2 4 4 0 3
 ஈரான் 3 0 1 2 1 4 −3 1
அர்கெந்தீனா 2-1 பொசுனியா எர்செகோவினா
கோலசினாக் Goal 3' (சுய கோல்)
மெஸ்ஸி Goal 65'
அறிக்கை இபிசெவிக் Goal 84'
பார்வையாளர்கள்: 74,738
நடுவர்: யோயல் ஆக்குய்லர் (எல் சல்வடோர்)

ஈரான் 0 – 0 நைஜீரியா
அறிக்கை
பார்வையாளர்கள்: 39,081
நடுவர்: கார்லோசு வீரா எக்குவடோர்

அர்கெந்தீனா 1-0 ஈரான்
மெசி Goal 90+1' அறிக்கை
பார்வையாளர்கள்: 57,698
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)

நைஜீரியா 1-0 பொசுனியா எர்செகோவினா
ஓடெம்விங்கி Goal 29' அறிக்கை
பார்வையாளர்கள்: 40,499
நடுவர்: பீட்டர் ஓ'லியரி (நியூசிலாந்து)

 நைஜீரியா2-3 அர்கெந்தீனா
மூசா Goal 4'47' அறிக்கை மெசி Goal 3'45+1'
ரோஜோ Goal 50'
பார்வையாளர்கள்: 43,285
நடுவர்: நிக்கொலா ரிசோலி (இத்தாலி)

பொசுனியா எர்செகோவினா 3-1 ஈரான்
சேக்கோ Goal 23'
பிஜானிச் Goal 59'
விரிசஜேவிச் Goal 83'
அறிக்கை கூசனெஜாத் Goal 82'
பார்வையாளர்கள்: 48,011
நடுவர்: கார்லொசு கார்பாலோ (எசுப்பானியா)

குழு ஜி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 செருமனி 3 2 1 0 7 2 +5 7
 ஐக்கிய அமெரிக்கா 3 1 1 1 4 4 0 4
 போர்த்துகல் 3 1 1 1 4 7 −3 4
 கானா 3 0 1 2 4 6 −2 1
செருமனி 4-0 போர்த்துகல்
முல்லர் Goal 12' (தண்ட உதை)45+1'78'
அமெல்சு Goal 32'
அறிக்கை
பார்வையாளர்கள்: 51,081
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)

கானா 1 – 2 ஐக்கிய அமெரிக்கா
அய்யு Goal 82' அறிக்கை டம்செGoal 1'
புரூக்சுGoal 86'
பார்வையாளர்கள்: 39,760
நடுவர்: ஜோனசு எரிக்சன் சுவீடன்

செருமனி 2-2 கானா
கோட்சி Goal 51'
குளோசி Goal 71'
அறிக்கை ஆயெவ் Goal 54'
கயான் Goal 63'
பார்வையாளர்கள்: 59,621
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

ஐக்கிய அமெரிக்கா 2 – 2 போர்த்துகல்
ஜோன்சு Goal 64'
டெம்ப்சி Goal 81'
அறிக்கை நானி Goal 5'
வரேலா Goal 90+5'
பார்வையாளர்கள்: 40,123
நடுவர்: நெசுட்டர் பிட்டானா (அர்கெந்தீனா)

ஐக்கிய அமெரிக்கா 0–1 செருமனி
அறிக்கை முல்லர் Goal 55'
பார்வையாளர்கள்: 41,876
நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உஸ்பெக்கிஸ்தான்)

போர்த்துகல் 2-1 கானா
போயி Goal 31' (சுய கோல்)
ரொனால்டோ Goal 80'
அறிக்கை கயான் Goal 57'
பார்வையாளர்கள்: 67,540
நடுவர்: நவாப் சுக்ராலா (பகுரைன்)

குழு எச்

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 பெல்ஜியம் 3 3 0 0 4 1 +3 9
 அல்ஜீரியா 3 1 1 1 6 5 +1 4
 உருசியா 3 0 2 1 2 3 −1 2
 தென் கொரியா 3 0 1 2 3 6 −3 1
பெல்ஜியம் 2-1 அல்ஜீரியா
ஃபெலானி Goal 70'
மெர்டென்சு Goal 80'
அறிக்கை ஃபெகோலி Goal 25' (தண்ட உதை)
பார்வையாளர்கள்: 56,800
நடுவர்: மார்க்கோ ரொட்ரிகசு (மெக்சிக்கோ)

உருசியா 1-1 தென் கொரியா
கெர்சாகோவ் Goal 74' அறிக்கை லீ கெயுன்-ஹோ Goal 68'
பார்வையாளர்கள்: 37,603
நடுவர்: நெஸ்டோர் பிட்டானா (ஆர்ஜெண்டீனா)

பெல்ஜியம் 1-0 உருசியா
டிவோக் ஓரிகி Goal 88' அறிக்கை
பார்வையாளர்கள்: 73,819
நடுவர்: பெலிக்சு பிரைக் (செருமனி)

தென் கொரியா 2-4 அல்ஜீரியா
சொன் ஹூங்-மின் Goal 50'
கூ ஜா-சியோல் Goal 72'
அறிக்கை சிலிமானி Goal 26'
அலிச்சி Goal 28'
ஜபூ Goal 38'
பிராகிமி Goal 62'
பார்வையாளர்கள்: 42,732
நடுவர்: வில்மார் ரொல்தான் (கொலம்பியா)

தென் கொரியா 0–1 பெல்ஜியம்
அறிக்கை வெடொங்கன் Goal 78'
பார்வையாளர்கள்: 61,397
நடுவர்: பென் வில்லியம்ஸ் (ஆஸ்திரேலியா)

அல்ஜீரியா 1–1 உருசியா
சிலைமணி Goal 60' அறிக்கை கொகோரின் Goal 6'
பார்வையாளர்கள்: 39,311
நடுவர்: ககிர் (துருக்கி)

ஆட்டமிழக்கும் நிலை

[தொகு]
16 அணிகளின் சுற்று கால் இறுதி அரை இறுதி இறுதி
                           
28 சூன் – பெலோ அரிசாஞ்ச்            
  பிரேசில் (ச.நீ.)  1 (3)
4 சூலை – போர்த்தலேசா
  சிலி  1 (2)  
  பிரேசில்  2
28 சூன் – இரியோ டி செனீரோ
    கொலம்பியா  1  
  கொலம்பியா  2
8 சூலை – பெலோ அரிசாஞ்ச்
  உருகுவை  0  
  பிரேசில்   1
30 சூன் – பிரசிலியா
    செருமனி  7  
  பிரான்சு  2
4 சூலை – இரியோ டி செனீரோ
  நைஜீரியா  0  
  பிரான்சு  0
30 சூன் – போர்ட்டோ அலெக்ரி
    செருமனி  1  
  செருமனி (மி.நே.)   2
13 சூலை – இரியோ டி செனீரோ
  அல்ஜீரியா   1  
  செருமனி (கூ.நே.)  1
29 சூன் – போர்த்தலேசா
    அர்கெந்தீனா  0
  நெதர்லாந்து  2
5 சூலை – சவ்வாதோர்
  மெக்சிக்கோ  1  
  நெதர்லாந்து (ச.நீ.)  0 (4)
29 சூன் – ரெசிஃபி
    கோஸ்ட்டா ரிக்கா  0 (3)  
  கோஸ்ட்டா ரிக்கா (ச.நீ.)  1 (5)
9 சூலை – சாவோ பாவுலோ
  கிரேக்க நாடு  1 (3)  
  நெதர்லாந்து  0 (2)
1 சூலை – சாவோ பாவுலோ
    அர்கெந்தீனா (ச.நீ.)  0 (4)   மூன்றாம் இடம்
  அர்கெந்தீனா (கூ.நே.)  1
5 சூலை – பிரசிலியா 12 சூலை – பிரசிலியா
  சுவிட்சர்லாந்து  0  
  அர்கெந்தீனா  1   பிரேசில்  0
1 சூலை – சவ்வாதோர்
    பெல்ஜியம்  0     நெதர்லாந்து  3
  பெல்ஜியம் (கூ.நே.)  2
  ஐக்கிய அமெரிக்கா  1  

சுற்று 16

[தொகு]
பிரேசில் 1–1 (கூ.நே) சிலி
டேவிட் லுயிஸ் Goal 18' அறிக்கை அலெக்சிஸ் Goal 32'
ச.நீ
டேவிட் லுயிஸ் Penalty scored
வில்லியன் Penalty missed
மார்செலோ Penalty scored
அல்க் Penalty missed
நெய்மார் Penalty scored
3–2 Penalty missed பினிலா
Penalty missed சான்செசு
Penalty scored அராங்குயிசு
Penalty scored டயஸ்
Penalty missed ஜாரா
பார்வையாளர்கள்: 57,714
நடுவர்: கோவட் வெப் (இங்கிலாந்து)

கொலம்பியா 2-0 உருகுவை
ரொட்ரீகசு Goal 28'50' அறிக்கை
பார்வையாளர்கள்: 73,804
நடுவர்: யோன் குயிப்பர்சு (நெதர்லாந்து)

நெதர்லாந்து 2-1 மெக்சிக்கோ
சினெய்ஜர் Goal 88'
அன்டெலார் Goal 90+4' (தண்ட உதை)
அறிக்கை டொசு சான்டோசு Goal 48'
பார்வையாளர்கள்: 58,817
நடுவர்: பெட்ரோ பிரோங்கோ (போர்த்துக்கல்)

கோஸ்ட்டா ரிக்கா 1-1 (கூ.நே) கிரேக்க நாடு
ரூயிசு Goal 52' அறிக்கை பப்பஸ்ததபவுலசு Goal 90+1'
ச.நீ
போர்கசு Penalty scored
ரூயிசு Penalty scored
கொன்சாலசு Penalty scored
கேம்பெல் Penalty scored
உமானா Penalty scored
5–3 Penalty scored மித்ரோகுலு
Penalty scored கிற்ஸ்தோடலோபவுலசு
Penalty scored ஒலிபாசு
Penalty missed கேகாசு
பார்வையாளர்கள்: 41,242
நடுவர்: பென் வில்லியம்சு (ஆத்திரேலியா)

பிரான்சு 2-0 நைஜீரியா
போக்பா Goal 79'
யோபோ Goal 90+' (சுய கோல்)
அறிக்கை

செருமனி 2-1 (கூ.நே) அல்ஜீரியா
சூருல் Goal 92'
ஓசில் Goal 120'
அறிக்கை ஜாபு Goal 120+1'
பார்வையாளர்கள்: 43,063
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

அர்கெந்தீனா 1-0 (கூ.நே) சுவிட்சர்லாந்து
டி மரியா Goal 118' அறிக்கை
பார்வையாளர்கள்: 63,255
நடுவர்: ஜோனாசு எரிக்சன் (சுவீடன்)

பெல்ஜியம் 2–1 (கூ.நே) ஐக்கிய அமெரிக்கா
கெவின் Goal 93'
லுக்காகு Goal 105'
அறிக்கை யூலியன் கிரீன் Goal 107'
பார்வையாளர்கள்: 51,227
நடுவர்: கைமெளடி (அல்ஜீரியா)

கால் இறுதிகள்

[தொகு]
பிரான்சு 0-1 செருமனி
அறிக்கை ஹமெல்சு Goal 13'
பார்வையாளர்கள்: 74,240
நடுவர்: நெஸ்டோர் பித்தானா (அர்கெந்தீனா)

பிரேசில் 2-1 கொலம்பியா
தியேகோ சில்வா Goal 7'
டேவிட் லூயிசு Goal 69'
அறிக்கை ரொட்ரீகசு Goal 80'
பார்வையாளர்கள்: 60,342
நடுவர்: கார்லோசு சர்பாலோ (எசுப்பானியா)

அர்கெந்தீனா 1–0 பெல்ஜியம்
கிகுகைன் Goal 8' அறிக்கை
பார்வையாளர்கள்: 68,551
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

நெதர்லாந்து 0-0 (கூ.நே) கோஸ்ட்டா ரிக்கா
அறிக்கை
ச.நீ
வான் பெர்சீ Penalty scored
ரொபென் Penalty scored
சினைடர் Penalty scored
குயிட் Penalty scored
4–3 Penalty scored போர்கெசு
Penalty missed ரூயிசு
Penalty scored கொன்சாலெசு
Penalty scored பொலானொசு
Penalty missed உமானா
பார்வையாளர்கள்: 51,179
நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உசுபெக்கிசுத்தான்)

அரை இறுதிகள்

[தொகு]
பிரேசில் 1-7 செருமனி
ஒஸ்கார் Goal 90' அறிக்கை முல்லர் Goal 11'
குளோசே Goal 23'
இக்ரூசு Goal 24'26'
கெடிரா Goal 29'
சுர்லெ Goal 69'79'
பார்வையாளர்கள்: 58,141
நடுவர்: மார்க்கோ ரோத்ரிகசு மெக்சிக்கோ

நெதர்லாந்து 0-0 (கூ.நே) அர்கெந்தீனா
அறிக்கை
ச.நீ
விளார் Penalty missed
ரொபென் Penalty scored
சினைடர் Penalty missed
குயிட் Penalty scored
2–4 Penalty scored மெசி
Penalty scored கரே
Penalty scored அகுவேரோ
Penalty scored மாக்சி ரொட்ரீகசு
பார்வையாளர்கள்: 63,267
நடுவர்: சூனெய்த் சாக்கிர் (துருக்கி)

மூன்றாமிடப் போட்டி

[தொகு]
பிரேசில் 0-3 நெதர்லாந்து
அறிக்கை வான் பெர்சீ Goal 3' (தண்ட உதை)
டாலி பிளின்ட் Goal 17'
விச்னால்டம் Goal 90+1'
பார்வையாளர்கள்: 68,034
நடுவர்: ஜாமெல் ஐமூடி (அல்சீரியா)

இறுதி

[தொகு]
செருமனி 1-0 (கூ.நே) அர்கெந்தீனா
மரியோ கட்சே Goal 113' அறிக்கை
பார்வையாளர்கள்: 74,738
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

புள்ளிவிபரம்

[தொகு]

கோல் அடித்தவர்கள்

[தொகு]
6 கோல்கள்
5 கோல்கள்
4 கோல்கள்
3 கோல்கள்
2 கோல்கள்
  • அல்ஜீரியா அப்தெல்மௌமீன் ஜபாவு
  • அல்ஜீரியா இசுலாம் சிலிமானி
  • ஆத்திரேலியா டிம் காகில்
  • பிரேசில் டேவிட் லூயிசு
  • பிரேசில் ஒஸ்கார்
  • கொலம்பியா ஜாக்சன் மார்ட்டீனெசு
  • சிலி அலெக்சி சான்செசு
  • கோஸ்ட்டா ரிக்கா பிறையன் ரூயிசு
  • குரோவாசியா மரியோ மாந்சூக்கிச்
  • குரோவாசியா இவான் பெரிசிச்
  • செருமனி மரியோ கோட்சே
  • செருமனி மாத்சு ஹமெல்சு
  • செருமனி மிரோசிலாவ் குளோசெ
  • செருமனி டொனி குரூசு
  • கானா அந்திரே ஆயெவ்
  • கானா அசாமோவா கயான்
  • ஐவரி கோஸ்ட் வில்பிரீது பொனி
  • ஐவரி கோஸ்ட் ஜெர்வீனோ
  • நெதர்லாந்து மெம்பிசு டெப்பே
  • நைஜீரியா அகமது மூசா
  • ஐக்கிய அமெரிக்கா கிளின்ட் டெம்ப்சி
  • உருகுவை சுவாரெசு
1 கோல்
  • அல்ஜீரியா யாசின் பிராகிமி
  • அல்ஜீரியா சோஃபியான் பெகூலி
  • அல்ஜீரியா ராஃபிக் ஹலிச்சி
  • அர்கெந்தீனா கொன்சாலோ இகுவெயின்
  • அர்கெந்தீனா ஏஞ்சல் டி மரியா
  • அர்கெந்தீனா மார்கோசு ரொஜோ
  • ஆத்திரேலியா மைல் செடினாக்
  • பெல்ஜியம் கெவின் டி புரூயின்
  • பெல்ஜியம் ஃபெலாயினி
  • பெல்ஜியம் ரொமேலு லுக்காகு
  • பெல்ஜியம் மெர்ட்டென்சு
  • பெல்ஜியம் திவொக் ஒரிஜி
  • பெல்ஜியம் சான் வெர்த்தோங்கன்
  • பொசுனியா எர்செகோவினா எதின் ஜேக்கோ
  • பொசுனியா எர்செகோவினா வெதாத் இபிசேவிச்
  • பொசுனியா எர்செகோவினா மிராலெம் பிஜானிச்
  • பொசுனியா எர்செகோவினா ஆவ்திஜா விரிசாஜேவிச்
  • பிரேசில் பெர்னாந்தீனோ
  • பிரேசில் பிரெட்
  • பிரேசில் தியாகோ சில்வா
  • கமரூன் ஜொவெல் மாத்திப்
  • சிலி சார்ல்சு அராங்கிசு
  • சிலி சீன் போசிஜூர்
  • சிலி ஒர்சே வால்தீவியா
  • சிலி எதுவார்தோ வார்கசு
  • கொலம்பியா பாவ்லோ அர்மேரோ
  • கொலம்பியா உவான் குவாட்ராடோ
  • கொலம்பியா தியோபிலோ கிட்டேரசு
  • கொலம்பியா உவான் குவின்டேரோ
  • கோஸ்ட்டா ரிக்கா ஜோயெல் கேம்பெல்
  • கோஸ்ட்டா ரிக்கா ஓஸ்கார் துவார்த்தே
  • கோஸ்ட்டா ரிக்கா மார்க்கோ யுரேனா
  • குரோவாசியா இவிகா ஓலிச்
  • இங்கிலாந்து வேனே ரூனி
  • இங்கிலாந்து தானியேல் ஸ்டரிட்ச்
  • பிரான்சு ஒலிவர் கிரூட்
  • பிரான்சு பிளைசு மட்டூடி
  • பிரான்சு பவுல் போக்பா
  • பிரான்சு மூசா சிசோக்கோ
  • பிரான்சு மெத்தியூ வாபுவேனா
  • செருமனி மெசுட் ஓசிழ்
  • கிரேக்க நாடு சொக்ரெட்டாரிசு பபஸ்தாதோபவுலசு
  • கிரேக்க நாடு 'கியார்கியசு சமாரசு
  • கிரேக்க நாடு அந்திரியாசு சமாரிசு
  • ஒண்டுராசு கார்லோ கோஸ்ட்லி
  • ஈரான் ரேசா கூச்சனெஜாத்
  • இத்தாலி மரியோ பலோட்டெலி
  • இத்தாலி குளோடியோ மார்சீசியோ
  • சப்பான் கெய்சூக்கி ஹொண்டா
  • சப்பான் சிஞ்சி ஒகசாகி
  • தென் கொரியா கூ ஜா-சியோல்
  • தென் கொரியா லீ கியூன்-ஹோ
  • தென் கொரியா சொன் ஹூங்-மின்
  • மெக்சிக்கோ ஜியோவானி டொசு சன்டோசு
  • மெக்சிக்கோ அந்திரேசு குவர்தாதோ
  • மெக்சிக்கோ சேவியர் எர்னான்டசு
  • மெக்சிக்கோ ரபாயல் மார்க்கெசு
  • மெக்சிக்கோ ஒரிபி பெரால்ட்டா
  • நெதர்லாந்து டாலி பிளின்ட்
  • நெதர்லாந்து லெரோய் ஃபெர்
  • நெதர்லாந்து கிளாஸ்-சான் ஹன்டெலார்
  • நெதர்லாந்து உவெசுலி சினெய்ச்டர்
  • நெதர்லாந்து ஸ்தெபான் டி விரிச்
  • நெதர்லாந்து ஜோர்ஜீனியோ விச்னால்டம்
  • நைஜீரியா பீட்டர் ஓடெம்விங்கி
  • போர்த்துகல் நானி
  • போர்த்துகல் சில்வெஸ்டர் வரேலா
  • போர்த்துகல் கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • உருசியா அலெக்சாந்தர் கெர்சக்கோவ்
  • உருசியா அலெக்சாந்தர் கொக்கோரின்
  • எசுப்பானியா சாபி அலொன்சோ
  • எசுப்பானியா உவான் மாட்டா
  • எசுப்பானியா பெர்னாண்டோ டொரெசு
  • எசுப்பானியா டேவிட் வில்லா
  • சுவிட்சர்லாந்து பிளெரிம் ஜெமாலிலி
  • சுவிட்சர்லாந்து அத்மிர் மெகுமெதி
  • சுவிட்சர்லாந்து ஹரிசு செஃபெரோவிச்
  • சுவிட்சர்லாந்து கிரானித் ஹாக்கா
  • ஐக்கிய அமெரிக்கா ஜோன் புரூக்ஸ்
  • ஐக்கிய அமெரிக்கா ஜூலியன் கிறீன்
  • ஐக்கிய அமெரிக்கா செருமயின் ஜோன்சு
  • உருகுவை எடின்சன் கவானி
  • உருகுவை தியேகோ கோதின்
சுய கோல்
  • பொசுனியா எர்செகோவினா கொலசினாக் (அர்சென்டீனாவுக்கு எதிராக)
  • பிரேசில் மார்செலோ (குரோவாசியாவுக்கு எதிராக)
  • கானா ஜோன் போய் (போர்த்துக்கலுக்கு எதிராக)
  • ஒண்டுராசு நொயல் வலடாரெசு (பிரான்சுக்கு எதிராக)
  • நைஜீரியா யோசப் யோபோ (பிரான்சுக்கு எதிராக)

மூலம்:[43]

போட்டிக்குப் பின்னரான அணி தரப்படுத்தல்

[தொகு]
  வாகையாளர்
  இரண்டாமிடம்

  மூன்றாமிடம்
  நான்காமிடம்

  கால் இறுதி
  சுற்று 16

  குழு நிலை

அணி கு வி வெ தோ கோ.அ எ.கோ கோ.வி பு
இறுதி
1  செருமனி 7 6 1 0 18 4 14 19
2  அர்கெந்தீனா 7 5 1 1 8 4 4 16
3ம், 4ம் இடம்
3  நெதர்லாந்து 7 5 2 0 15 4 11 17
4  பிரேசில் 7 3 2 2 11 14 -3 11
கால் இறுதிகளில் வெளியேறியவை
5  கொலம்பியா 5 4 0 1 12 4 8 12
6  பெல்ஜியம் 5 4 0 1 6 3 3 12
7  பிரான்சு 5 3 1 1 10 3 7 9
8  கோஸ்ட்டா ரிக்கா 5 2 3 0 5 2 3 9
சுற்று 16 இல் வெளியேறியவை
9  சிலி 4 2 1 1 6 4 2 7
10  மெக்சிக்கோ 4 2 1 1 5 3 2 7
11  சுவிட்சர்லாந்து 4 2 0 2 7 7 0 6
12  உருகுவை 4 2 0 2 4 6 -2 6
13  கிரேக்க நாடு 4 1 2 1 3 5 -2 5
14  அல்ஜீரியா 4 1 1 2 7 7 0 4
15  ஐக்கிய அமெரிக்கா 4 1 1 2 5 6 -1 4
16  நைஜீரியா 4 1 1 2 3 5 -2 4
குழு நிலையில் வெளியேறியவை
17  எக்குவடோர் குழு ஈ 3 1 1 1 3 3 0 4
18  போர்த்துகல் குழு ஜி 3 1 1 1 4 7 −3 4
19  குரோவாசியா குழு ஏ 3 1 0 2 6 6 0 3
20  பொசுனியா எர்செகோவினா குழு எப் 3 1 0 2 4 4 0 3
21  ஐவரி கோஸ்ட் குழு சி 3 1 0 2 4 5 −1 3
22  இத்தாலி குழு டி 3 1 0 2 2 3 −1 3
23  எசுப்பானியா குழு பி 3 1 0 2 4 7 −3 3
24  உருசியா குழு எச் 3 0 2 1 2 3 −1 2
25  கானா குழு ஜி 3 0 1 2 4 6 −2 1
26  இங்கிலாந்து குழு டி 3 0 1 2 2 4 −2 1
27  தென் கொரியா குழு எச் 3 0 1 2 3 6 −3 1
28  ஈரான் குழு எப் 3 0 1 2 1 4 −3 1
29  சப்பான் குழு சி 3 0 1 2 2 6 −4 1
30  ஆத்திரேலியா குழு பி 3 0 0 3 3 9 −6 0
31  ஒண்டுராசு குழு ஈ 3 0 0 3 1 8 −7 0
32  கமரூன் குழு ஏ 3 0 0 3 1 9 −8 0

மூலம்: thesoccerworldcups.com[44]

பரிசுத் தொகை

[தொகு]

இவ்விளையாட்டுப் போட்டிக்கு பீபாவினால் உறுதி செய்யப்பட்ட மொத்தத் தொகை $ 576 மில்லியனாகும். இது 2010 உலகக்கோப்பை காற்பந்து போட்டிக்கு கொடுக்கப்பட்டதிலிருந்து 37 வீதம் அதிகரித்துள்ளது.[45] போட்டிக்கு முன்பாக 32 நாட்டு அணிகளும் தலா $1.5 மில்லியனை ஆயத்த செவுக்காகப் பெறும். போட்டிக்காக பின்வரும் பரிசுத் தொகை வழங்கப்படும்:

சந்தைப்படுத்துதல்

[தொகு]
பிரேசில் 2014 அலுவல்முறைச் சின்னம்

சின்னம்

[தொகு]

இந்த இறுதிப் போட்டிகளின் சின்னமான "அகவெழுச்சி"யை ஆபிரிக்கா எனப்படும் பிரேசிலிய நிறுவனம் உருவாக்கியுள்ளது.[46] மூன்று வெற்றிக்கரங்கள் கூட்டாக உலகக்கோப்பையை தூக்குவது போன்ற ஒளிப்படத்தை ஒட்டி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை வண்ணங்கள் பிரேசில் உலகநாடுகளை வரவேற்பதாக அமைந்துள்ளது. ஜோகானஸ்பேர்க்கில் நடந்த 2010 உலகக்கோப்பையின் போது ஒரு நிகழ்ச்சியில் இச்சின்னம் வெளியிடப்பட்டது.[46] இந்த வடிவமைப்பு 25 பிரேசிலிய நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது.[47] இத்தேர்விற்கான நடுவர் குழாமில் தொழில்முறை கணினி பக்கவடிவமைப்பாளர் எவரும் இல்லை என்றும் இச்சின்னம் முகத்தில் கையை வைத்திருப்பது போல இருப்பதாகவும் பிரேசிலின் வரைகலை வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் வொல்னர் குறை கூறியுள்ளார்.[48]

பிஃபா சனவரி 2013இல் பிரேசிலிய கலைநிறுவனம் கிராமா உருவாக்கிய ஓர் அலுவல்முறை சுவரொட்டியை வெளியிட்டது.[49] அலுவல்முறை சுலோகமாக "அனைவரும் ஒரே தாளத்தில் " (போர்த்துக்கேயம்: "Juntos num só ritmo") தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.[50]

அலுவல் முறை பாடல்

[தொகு]

1962ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு உலகக்கோப்பைக்கும் ஒரு அலுவல்முறை பாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. On 24 January 2014, பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் சோனி இசை நிறுவனமும் சனவரி 24, 2014 அன்று சொல்லிசைக் கலைஞர் பிட்புல், ஜெனிஃபர் லோபஸ் மற்றும் கிளாடியா லெயிட் பாடிய "நாங்கள் ஒருவரே (ஒலே ஒலா)" என்ற பாடலை அலுவல்முறையான பாடலாக அறிவித்தனர்.[51] மேலும் சோனி உலகளவில் சூப்பர்சாங் என்றழைக்கப்படும் பாடலுக்கான போட்டியை அறிவித்தது. இது ஒரே விருப்பு, ஒரே தாளம் என்ற அலுவல்முறை இசைக்கோவையில் இடம் பெறும்.[52] பெப்ரவரி 10, 2014 அமெரிக்க எலிஜா கிங்கின் "விடா" ("வாழ்வு") என்ற பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதனை எசுப்பானியர் ரிக்கி மாட்டின் பாடியுள்ளார்.[53] வாக்கா வாக்கா (இது ஆபிரிக்காவின் நேரம்) என்ற முந்தைய உலகக்கோப்பைக்கான அலுவல்முறை பாடலைப் பாடிய சக்கீரா "டேர் (ல ல லா)" என்ற பாடலை இதற்கேற்ப மாற்றிப் பாடியுள்ளார். இது இரண்டாம்நிலை அலுவல்முறைப் பாடலாக கொள்ளப்படுகிறது.[54] மார்ச்சு மாத இறுதியில் பிஃபா "டர் உம் ஜெய்தோ (வழி காணுவோம்)" என்ற பாடலை 2014 உலகக்கோப்பைக்கான அலுவல்முறைப் பண்ணாக தேர்ந்தெடுத்துள்ளது.[55]

ஆட்டப்பந்து

[தொகு]

2014 உலகக்கோப்பைக்கான அலுவல்முறை பந்தாக அடிடாசு பிராசுகா விளங்கும்.1970 முதல் உலகக்கோப்பை ஆட்டப் பந்தை வழங்கிவரும் அடிடாசு நிறுவனம், பிரேசிலின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும் விதமாக மூன்று பெயர்களை குறும்பட்டியலிட்டிருந்தது. இதிலிருந்து 1 மில்லியனுக்கும் கூடுதலான பிரேசிலிய காற்பந்து விசிறிகள் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.[56]

ஊடகம்

[தொகு]

தொடர்ந்து நான்காம் முறையாக பிஃபா உலகக்கோப்பை இறுதியாட்டங்களின் காட்சிகளை இன்பிரண்ட் இசுபோர்ட்சு & மீடியா நிறுவனத்தின் துணைநிறுவனமான ஹோஸ்ட் பிராட்காஸ்ட் சர்வீசஸ் (HBS) வழங்குகிறது.[57] இந்த விளையாட்டுக்களை திரைபிடிக்கும் கருவிகளுக்கான அதிகாரபூர்வ நிறுவனமாக சோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மீயுயர் வரையறை ஒளிதத் தயாரிப்பு திறனுள்ள பன்னிரெண்டு 40-அடி-நீள பெட்டிகளை சோனி உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆட்டக்களத்திற்கும் ஒன்றாக இவற்றில் மிகவிரிவான கருவிகள் அமைக்கப்பெற்றுள்ளன.[58][59] ஒவ்வொரு ஆட்டமும் 37 சீர்தர ஒளிப்பிடிப்புக் கருவிகளையும் இரண்டு மிகவிரைவு நகர்வு ஒளிப்பிடிப்புக் கருவிகளையும் நேர்காணல்களுக்கான பிரத்யேக ஒளிப்பிடிப்பு சாதனங்களையும் பயன்படுத்தும். மேலும் வான்வழி ஒளிப்பிடிப்புக் கருவியும் கம்பி மூலமாக ஆட்டக்களத்தில் இயங்கும் ஒளிப்பிடிப்புக் கருவியும் இவற்றில் அடங்கும்.[59] இந்தப் போட்டியைக் குறித்தான அதிகாரபூர்வ திரைப்படமும் மூன்று ஆட்டங்களும்[nb 2] மீயுயர் வரையறைத் தொலைக்காட்சித் தொழினுட்பத்தில், (4K வரையறை), படம் பிடிக்கப்படும்.[60]

பரப்புகை உரிமங்கள் – தொலைக்காட்சி, வானொலி, இணையம் மற்றும் நகர்பேசி பரப்புகை – பிஃபாவால் நேரடியாகவோ அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களாலோ தனித்தனி பகுதிகளில் விற்கப்பட்டுள்ளன.[61] உலகக்கோப்பை நடத்துவதால் பிஃபா பெரும் வருமானத்தில் இந்த விற்பனை 60% ஆக மதிப்பிடப்படுள்ளது.[62] பன்னாட்டு பரப்புகை மையம் இரியோ டி செனீரோவின் புறநகரில் பர்ரா டா டியுகாவில் ரியோசென்ட்ரோவில் அமைக்கப்பட்டுள்ளது.[63][64]

சர்ச்சைகளும் எதிர்ப்புகளும்

[தொகு]

எதிர்ப்புகள்

[தொகு]
ஆரம்ப நிகழ்வு தினத்தில் உலகக்கோப்பை எதிர்ப்பு
பிரேசிலியாவில் கட்டுமானப்பணியில் இறந்த ஒன்பது பேருக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக நுழைவுச்சீட்டு வாயிலருகில் எதிர்ப்பு வாசகங்களுடன்

2013ஆம் ஆண்டு பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளின் துவக்கவிழாவிற்கு முன்னதாகவே பிரேசிலியா தேசிய விளையாட்டரங்கத்தின் முன்பாக உலகக்கோப்பை ஆட்டங்களை ஏற்று நடத்த செலவிடப்படும் பொதுமக்கள் வரிப்பணத்தை எதிர்த்து ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.[65] இந்த போட்டிகளின் துவக்கவிழாவில் பிரேசிலியத் தலைவர் டில்மா ரூசெஃப் மற்றும் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் செப் பிளாட்டர் பேச வந்தபோது அவர்களைப் பேசவிடாது கூக்குரல் எழுப்பினர்.[66] இதன் விளைவாக 2014 உலகக் கோப்பை திறப்புவிழாவில் எந்தவித உரையாற்றலும் இருக்காது என பிஃபா அறிவித்துள்ளது.[67]

இந்த ஆர்பாட்டங்களும் மனக்குறைகளும் பிரேசில் அரசின் பொருளியல் மேலாண்மையை எதிர்த்து எழுந்த பரந்த ஆர்பாட்டங்களின் அங்கங்களாகும். பொது போக்குவரத்தில் உயர்த்தப்பட்ட கட்டணங்களும் இவற்றிற்கு காரணமாயின.[65][68] மேலும் கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளின் மற்ற ஆட்டங்களின்போதும் அரங்கங்களுக்கு வெளியே இந்தப் போராட்டங்கள் தொடர்ந்தன.[69][70]

பிளாட்டர் "தங்கள் மனக்குறைகளை வெளிப்படுத்த காற்பந்தை பயன்படுத்தக் கூடாது" எனவும்[71] இந்த விளையாட்டுகளுக்காக செலவிடப்படும் பொதுப்பணம் "உலகக்கோப்பைக்கானது மட்டுமல்ல, வருங்காலத்திற்கானவை" எனவும் கூறினார்.[71] பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில் ரூசெஃப் கூறினார்: "இந்த விளையாட்டரங்கங்களுக்காக அரசு செலவழித்த பணம் ஓர் நிதி முதலீடு; இவற்றைப் பயன்படுத்தும் பின்னாள் அரசுகளும் நிறுவனங்களும் செலுத்தும் கட்டணங்களால் இது முறையே மீட்கப்படும்".[72]

விளையாட்டரங்கினுள் அத்துமீறல்

[தொகு]

சூன் 18 அன்று எசுப்பானியாவிற்கும் சிலிக்கும் நடந்த பி குழு ஆட்டத்தின்போது 100 சிலியின் ஆதரவாளர்கள் மரக்கானா விளையாட்டரங்கதினுள் அத்துமீறி உட்புகுந்தார்கள். ஒருவர் உடல்நலக்கேடுடன் இருப்பதாக நடித்து காவலரின் கவனத்தை திசை திருப்ப, மற்றுவர்கள் இரு தடுப்புச் சுவர்களை உடைத்தும் ஊடக மையத்தின் கண்ணாடிக் கதவை உடைத்தும் விளையாட்டரங்கினுள் நுழைந்தார்கள். முன்னதாக சூன் 15 அன்றும் இத்தகைய அத்துமீறலை அர்கெந்தீனர்கள் எஃப் குழு ஆட்ட தினத்தன்று நடத்தினர்.[73][74]

லூயிசு சுவாரெசு கடி நிகழ்வு

[தொகு]

2014 உலகக்கோப்பை போட்டிகளில் டி குழுவில் உருகுவைக்கும் இத்தாலிக்குமான இறுதியாட்டத்தின் 79வது நிமிடத்தில் உருகுவையின் ஆட்டக்காரர் லூயிசு சுவாரெசு இத்தாலிய ஆட்டக்காரர் ஜியார்ஜியோ சில்லினியின் இடது தோள்பட்டைக் கடித்தார்; உடனேயே செல்லினி ஆட்டநடுவருக்கு தமது கடிக் காயத்தைக் காண்பித்தார். இத்தாலிக்கு தடங்கலில்லா உதை வழங்கப்பட்டபோதும் அப்போது சுவாரெசிற்கு எந்த தண்டனைச் சீட்டும் வழங்கப்படவில்லை.[75] இத்தாலிய வீரர்கள் நடுவரிடம் முறையிட்டிருக்கையில் உருகுவைக்கு கோண உதை வாய்ப்பு கிட்டியது. இதில் உருகுவையின் டியாகோ கோடின் கோலடித்து ஆட்டத்தை உருகுவை 1-0இல் வென்றது. இதனால் டி குழுவில் இரண்டாமிடத்தை எட்டி அடுத்த நிலைக்கு தகுதி பெற்றது. ஆட்டத்திற்குப் பின்னர் சுவாரெசு "செல்லினியின் தோள் மீது தொடர்பு ஏற்பட்டதாகவும் வேறேதும் இல்லை எனவும்" "இவை நிகழ்வது இயல்பே" என்றும் கூறினார். இவ்வாறு ஓர் எதிராளியைக் கடிப்பது சுவாரெசிற்கு மூன்றாம் முறையாகும்.[75][76][77] சூன் 26 அன்று பிஃபாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சுவாரெசை ஒன்பது பன்னாட்டு ஆட்டங்களிலில் பங்கேற்பதை உடனடியாகத் தடை செய்தது. இதனால் உலகக்கோப்பையில் மேலும் பங்கேற்க இயலாது போயிற்று. மேலும் காற்பந்து தொடர்புடைய, விளையாட்டரங்கினுள் நுழைவது உட்பட, எந்தவொரு செயற்பாட்டிலும் நான்கு மாதங்கள் அவர் பங்கேற்க தடை விதித்தது. இக்குழு அபராதத் தொகையாகவும் சுவிசு பிராங்க்100,000 (ஏறத்தாழ. US$112,000 அல்லது £65,700) விதித்தது.[78] இந்தத் தீர்ப்பு அவர் கழக மாற்றலுக்கு இடையூறாக இருக்காது.[79] இந்தத் தீர்ப்பை எதிர்த்து உருகுவை கால்பந்துச் சங்கம் (AUF) மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறியுள்ளது.[80][81]

நெய்மார் எலும்பு முறிவு

[தொகு]

கொலம்பியாவுடனான காலிறுதிப் போட்டியில் பந்தைத் தடுக்க முயலும்போது நெய்மாரின் முதுகில் பின்னாலிருந்து கொலம்பிய ஆட்டக்காரர் யுவான் கேமிலோ சுனிகா காலால் முட்டினார்; இதனால் காயமடைந்த நெய்மாரை தூக்குப் படுக்கையில் களத்தை விட்டு எடுத்துவர வேண்டியதாயிற்று. மருத்துவமனையில் பரிசோதனைகளுக்குப் பிறகு நெய்மாரின் முதுகுத்தண்டில் ஓர் முள்ளெலும்பு உடைந்துள்ளதாகவும் அதனால் அவரால் மேற்கொண்டு உலகக்கோப்பை ஆட்டங்களில் பங்கேற்க இயலாது என்றும் அறிவிக்கப்பட்டது.[82]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. உலகக்கோப்பை வரலாற்றிலேயே பிரேசில் அணி இட்ட முதல் சுயகோல்[40]
  2. மீயுயர் வரையறைத் தொலைக்காட்சியாக பிடிக்கப்படவிருக்கும் ஆட்டங்கள்:பதின்மச் சுற்றில் ஒன்று (28 சூன்), காலிறுதியில் ஒன்று (4 சூலை) மற்றும் இறுதியாட்டம்
  1. "Players – Top goals". FIFA.com. Archived from the original on 2015-01-15. பார்க்கப்பட்ட நாள் 2014-07-14. பரணிடப்பட்டது 2015-01-15 at the வந்தவழி இயந்திரம்
  2. "Messi wins golden ball".
  3. "Paul Pogba wins young player award". Archived from the original on 2016-01-07. பார்க்கப்பட்ட நாள் 2014-07-14. பரணிடப்பட்டது 2016-01-07 at the வந்தவழி இயந்திரம்
  4. "Manuel Neuer wins golden glove award". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-07-14.
  5. "FIFA launch GLT tender for Brazil 2013/14". FIFA.com. 19 February 2013. Archived from the original on 22 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 ஜனவரி 2014. {{cite web}}: Check date values in: |access-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  6. "If the World Cup started tomorrow". ESPN. 12 June 2013.
  7. "If the World Cup started tomorrow". ESPN. 12 சூன் 2013.
  8. "2014 FIFA World Cup to be held in South America". FIFA.com. 7 மார்ச் 2003. Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26. {{cite web}}: Check date values in: |date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
  9. "Rotation ends in 2018". FIFA.com. 29 அக்டோபர் 2007. Archived from the original on 2014-12-28. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-28. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
  10. "Argentina, Brazil and Colombia want 2014 World Cup". People's Daily. 19 சனவரி 2003.
  11. "Brazil set to host World Cup". BBC. 18 மார்ச் 2003. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/2858989.stm. 
  12. "Colombia bids for 2014 World Cup". BBC. 17 சூலை 2006. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/5187170.stm. 
  13. "Colombia join 2014 World Cup race". BBC. 19 திசம்பர் 2006. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/6191981.stm. 
  14. "Brazil to make 2014 World Cup bid". BBC. 13 திசம்பர் 2006. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/6173775.stm. 
  15. "Brazil confirms bid – Colombia withdraws". Fifa.com. 13 ஏப்ரல் 2007. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26. {{cite web}}: Check date values in: |date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
  16. "Brazil confirmed as 2014 hosts". FIFA. 30 அக்டோபர் 2007. Archived from the original on 2007-10-31. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2007. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-31. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
  17. "Financial report presented, Brazil 2014 slots & host countries decided". Fifa.com. 3 மார்ச் 2011. Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26. {{cite web}}: Check date values in: |date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
  18. "Rio draw pits Spain against France". FIFA.com. 30 சூலை 2011. Archived from the original on 2018-12-12. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-12. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  19. "Draw for World Cup qualifiers at Marina da Glória in Rio" (in Portuguese). globoesporte.com. 8 திசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  20. "Barbarez: The World Cup is priceless". Fifa.com. 16 அக்டோபர் 2013. Archived from the original on 2013-12-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
  21. "Portugal climbs to 5th in FIFA Ranking". Goal.com. 28 நவம்பர் 2013.
  22. "FIFA/Coca-Cola Rankings". FIFA.com (Fédération Internationale de Football Association). 5 June 2014. Archived from the original on 11 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-11. பார்க்கப்பட்ட நாள் 2014-07-02.
  23. "Estádio Nacional Mané Garrincha". FIFA.com. Archived from the original on 23 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 June 2013. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-23. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30.
  24. "Estadio do Maracana – Rio De Janeiro". fifa.com. Archived from the original on 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 June 2013. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30.
  25. "Fifa admite adotar nome Mané Garrincha em estádio de Brasília na Copa". Copadomundo.uol.com.br. 6 May 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.
  26. "Estadio Castelao – Fortaleza". Fifa.com. Archived from the original on 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30.
  27. "Site oficial do Sport Club Internacional – Projeto Gigante Para Sempre". Internacional.com.br. Archived from the original on 7 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  28. "Arena Fonte Nova – Salvador Stadium". Fifa.com. 28 January 1951. Archived from the original on 22 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-22. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30.
  29. "Arena da Baixada's capacity". Globoesporte.globo.com. 30 July 2013. பார்க்கப்பட்ட நாள் 16 September 2013.
  30. "Open list of prospective referees & assistant referees for the 2014 FIFA World Cup" (PDF). FIFA. 7 March 2013. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-03-03.
  31. "Referee trios and support duos appointed for 2014 FIFA World Cup". FIFA. 15 January 2014. Archived from the original on 2 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-02. பார்க்கப்பட்ட நாள் 2014-03-03.
  32. "Referees & Assistant referees for the 2014 FIFA World Cup" (PDF). FIFA. 14 January 2014. Archived from the original (PDF) on 16 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 2014-03-03.
  33. "England v Germany: Frank Lampard denied goal by Uruguayan linesman – in pictures". The Daily Telegraph. 27 June 2010. http://www.telegraph.co.uk/sport/football/world-cup/pictures/7857609/England-v-Germany-Frank-Lampard-denied-goal-by-Uruguayan-linesman-in-pictures.html. 
  34. "World Cup 2010: Blatter apologises for disallowed goal". BBC Sport. 29 June 2010. http://news.bbc.co.uk/sport1/hi/football/world_cup_2010/8771294.stm. 
  35. "IFAB gives the green light to goal-line technology". FIFA. 5 July 2012. Archived from the original on 11 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  36. "GoalControl confirmed as goal-line technology provider for Brazil 2014". FIFA. 10 October 2013. Archived from the original on 1 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-01. பார்க்கப்பட்ட நாள் 2014-03-03.
  37. http://www.bbc.co.uk/tamil/sport/2014/06/140615_wc2014_france_honduras.shtml
  38. "Vanishing spray set for World Cup". eurosport.com. 21 November 2013.
  39. "Regulations – FIFA World Cup Brazil 2014" (PDF). FIFA. Archived from the original (PDF) on 2014-03-08. பார்க்கப்பட்ட நாள் 2014-03-03. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-03-08. பார்க்கப்பட்ட நாள் 2014-03-03.
  40. "Neymar fires Brazil to comeback victory". FIFA. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help) பரணிடப்பட்டது 2018-12-24 at the வந்தவழி இயந்திரம்
  41. "Match report – Brazil–Croatia" (PDF). FIFA.com. 12 June 2014. Archived from the original (PDF) on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help) பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம்
  42. "Referee designations for matches 1-4" (PDF). fifa.com. 2014-06-10. Archived from the original (PDF) on 2014-06-30. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13. பரணிடப்பட்டது 2014-06-30 at the வந்தவழி இயந்திரம்
  43. "adidas Golden Boot". FIFA.com. Archived from the original on 2014-12-31. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-31. பார்க்கப்பட்ட நாள் 2014-06-14.
  44. "2014 Soccer World Cup Final Standings". thesoccerworldcups.com. பார்க்கப்பட்ட நாள் 27 June 2014.
  45. "World Cup money pot increased to $576m". reuters.com. Archived from the original on 19 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 April 2014. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-19. பார்க்கப்பட்ட நாள் 2014-06-12.
  46. 46.0 46.1 "Re-live the Brazil 2014 Emblem Launch". FIFA. 7 July 2010. Archived from the original on 9 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-09. பார்க்கப்பட்ட நாள் 2014-05-24.
  47. Shanahan, Mark; Goldstein, Meredith (10 July 2010). "Gisele picks logo, shops with Tom". Boston Globe இம் மூலத்தில் இருந்து 11 ஜூலை 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100711000321/http://www.boston.com/ae/celebrity/articles/2010/07/10/gisele_picks_logo_shops_with_tom/. பார்த்த நாள்: 11 July 2010. 
  48. "Designer critica logo da Copa 2014: "É uma porcaria" – Terra – Esportes". deportesus.terra.com.br. 9 July 2010. Archived from the original on 12 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 6 December 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  49. "2014 Ambassadors unveil Official Poster". FIFA. 30 January 2013. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-05-24.
  50. "Brazil 2014 slogan presented: All in one rhythm™ / Juntos num só ritmo". FIFA. 30 May 2012. Archived from the original on 15 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  51. Rusu, Dragos (24 January 2014). "Pitbull's "We Are One" Collaboration Named as Official 2014 World Cup song". Softpedia இம் மூலத்தில் இருந்து 30 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140330232232/http://news.softpedia.com/news/Pitbull-s-We-Are-One-Collaboration-Named-as-Official-2014-World-Cup-Anthem-420390.shtml. பார்த்த நாள்: 24 January 2014. 
  52. "Music hopefuls invited to add to the rhythm of the 2014 FIFA World Cup". FIFA. 15 November 2013. Archived from the original on 9 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-09. பார்க்கப்பட்ட நாள் 2014-05-26.
  53. "ricky-martin's World Cup Song Written By Elijah King; Salaam Remi to Produce". பில்போர்டு. 10 February 2014. பார்க்கப்பட்ட நாள் 11 February 2014.
  54. Kwesi, Marcus (2014-03-24). "Shakira Releases 'La La La,' Official 2014 World Cup Song (Video) | World Cup". NESN.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  55. "Listen: Avicii, Carlos Santana, Wyclef Jean & Alexandre Pires Unite on 2014 World Cup Anthem, 'Dar um Jeito (We Will Find a Way)' «". Radio.com. 2014-04-29. Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  56. "adidas Brazuca – Name of Official Match Ball decided by Brazilian fans". FIFA. 2 September 2012 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225025226/https://www.fifa.com/worldcup/news/newsid=1693277/. பார்த்த நாள்: 3 September 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-29. பார்க்கப்பட்ட நாள் 2014-05-26.
  57. "Host Broadcasting". FIFA. Archived from the original on 27 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 December 2013. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-27. பார்க்கப்பட்ட நாள் 2014-06-07.
  58. "Sony Professional awarded 2014 FIFA World Cup Broadcast Production Contract". Live-production.tv. 13 September 2012.
  59. 59.0 59.1 "Sony's astonishing World Cup statistics". RedShark News. 22 May 2014.
  60. "Sony and FIFA announce further 4K coverage of the 2014 FIFA World Cup". FIFA. 3 April 2014. Archived from the original on 18 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் 2014-06-07.
  61. "2014 FIFA World Cup BrazilTM Media Rights Licensees". FIFA. 7 November 2013 இம் மூலத்தில் இருந்து 13 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140513164401/http://www.fifa.com/mm/document/affederation/tv/01/47/76/00/2014fifaworldcupbrazil%28tm%29mediarightslicenseelist110414_neutral.pdf.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-05-13. பார்க்கப்பட்ட நாள் 2014-06-07.
  62. "FIFA revenue estimated to be 4 billion dollars at the close of the 2014 World Cup". CONMEBOL.com. 17 May 2013. Archived from the original on 10 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  63. "International Broadcast Centre to be hosted in Rio de Janeiro". FIFA. 27 May 2011 இம் மூலத்தில் இருந்து 18 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190318232540/https://www.fifa.com/worldcup/media/newsid=1442394/.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-18. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
  64. "Nerve centre for World Cup TV production opens in Rio". FIFA. 2 June 2014 இம் மூலத்தில் இருந்து 25 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170625145958/http://www.fifa.com/worldcup/news/y=2014/m=6/news=nerve-centre-for-world-cup-tv-production-opens-in-rio-2353342.html.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-25. பார்க்கப்பட்ட நாள் 2014-06-07.
  65. 65.0 65.1 ராய்ட்டர்ஸ் (15 June 2013). "Brazil Beats Japan, Protests Spoil Confederations Cup Opening Day". வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா. பிரசிலியா: ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 16 June 2013.
  66. Peck, Brooks (29 May 2013). "Sepp Blatter, Brazil president Dilma booed at Confederations Cup opening ceremony". Sports.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 16 June 2013.
  67. "Fifa scraps speeches to avoid protest". BBC. 12 March 2014.
  68. "Brazil despair: Protests over transport, inflation gain intl support (PHOTOS) — RT News". Rt.com. பார்க்கப்பட்ட நாள் 18 June 2013.
  69. "Confed Cup protests continue". ESPN. 17 June 2013.
  70. "Police clashes at start of Brazil Confederations Cup final". BBC. 1 July 2013.
  71. 71.0 71.1 "Brazil protests continue". ESPN. 19 June 2013.
  72. "Brazil president Rousseff defends public spending on World Cup as protests continue". Daily Mail. 22 June 2013.
  73. Wilson, Jonathan (18 June 2014). "World Cup 2014: Chile fans invade Maracanã before Spain game.". The Guardian. http://www.theguardian.com/football/2014/jun/18/world-cup-2014-chile-fans-maracana-spain. 
  74. "World Cup Chile Fans Storm Rio Stadium And 85 Detained".
  75. 75.0 75.1 Borden, Sam (24 June 2014). "Apparent Bite by Luis Suárez Mars Uruguay’s Victory Over Italy". The New York Times. http://www.nytimes.com/2014/06/25/sports/worldcup/apparent-bite-by-luis-suarez-mars-uruguays-victory-over-italy.html. பார்த்த நாள்: 24 June 2014. 
  76. "Suarez claims 'these things happen' in biting row". ஈஎஸ்பிஎன். Archived from the original on 25 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  77. Ogden, Mark (24 June 2014). "Italy 0 Uruguay 1". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 25 June 2014.
  78. "Luis Suárez suspended for nine matches and banned for four months from any football-related activity". பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு. 26 June 2014. Archived from the original on 3 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  79. "Liverpool keep counsel over Suarez ban reaction". ITV News. 26 June 2014. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
  80. "Uruguay to appeal Suarez ban for biting". Deutsche Welle. 26 June 2014. http://www.dw.de/uruguay-to-appeal-suarez-ban-for-biting/a-17739744. பார்த்த நாள்: 26 June 2014. 
  81. Castaldi, Malena. "Uruguay to appeal Suarez ban, calls it excessive | Reuters". Uk.reuters.com. Archived from the original on 27 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-27. பார்க்கப்பட்ட நாள் 2014-06-29.
  82. "Neymar: Injured Brazil forward ruled out of World Cup". BBC Sport. 4 July 2014. http://www.bbc.com/sport/0/football/28173132. பார்த்த நாள்: 5 July 2014. 

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=2014_உலகக்கோப்பை_காற்பந்து&oldid=3729660" இலிருந்து மீள்விக்கப்பட்டது