4கே பகுப்பியல்
4கே பகுப்பியல் என்பது கிடைப்பட்ட திரைப் பகுப்பியலில் 4000 படவணுக்களைக் கொண்டது. எண்ணிமத் தொலைக்காட்சி மற்றும் எண்ணிமப் படவியலில் பொதுவாகவே 4கே பகுப்பு பயன்படுகிறது. தொலைக்காட்சி தொடர்பான ஊடகங்களில் 4கே தரநிலை 3840 × 2160 (மீமிகைத் துல்லியம்) படவணுக்களாகவும் திரைப்படம் தொடர்பான காட்சியங்களில் 4096 × 2160 (எண்ணிமத் திரைப்படத் துவக்கங்கள்) படவணுக்களாகவும் பயன்படுகிறது.[1]
4கே தரநிலை
[தொகு]4கே என்ற சொல்லானது தோராயமாக 4000 படவணுக்களைக் கொண்ட எந்த ஒரு திரை விகிதத்தையும் குறிக்கப் பயன்படுகிறது. அவ்வகை விகிதங்களை தங்களின் தரநிலை விகிதங்களாக பல்வேறு நிறுவனங்கள் கொண்டுள்ளன.
டி.சி.ஐ தரநிலை
[தொகு]டி.சி.ஐ என்று அழைக்கப்படும் எண்ணிமத் திரைப்படத் துவக்கங்கள் 2கே மற்றும் 4கே பகுப்புகளை முறையாக 2048 × 1080 மற்றும் 4096 × 2160 ஆகிய விகிதங்களில் எண்ணிமத் திரைப்பட உருவாக்கத்தின் தரநிலையாக அறிவித்துள்ளன.
SMPTE 428-1 என்று அழைக்கப்படும் இந்த தரநிலை கீழ்வரும் விகிதங்களை 4கே பகுப்பெனக் கொள்கிறது.
- 4096 × 2160 (முழுச்சட்டம், 256∶135 or ≈1.90∶1 புலன் விகிதம்)
- 3996 × 2160 (தட்டைநிலை கத்தரிப்பு, 1.85∶1 புலன் விகிதம் )
- 4096 × 1716 (படநோக்கு கத்தரிப்பு, ≈2.39∶1 புலன் விகிதம்)
2கே பகுப்பில் வெளியிட ஒரு நொடிக்கு 24 அல்லது 48 சட்டங்களை ஒரு காட்சி பெற்றிருக்க வேண்டும் எனும் போதிலும் 4கே பகுப்பில் வெளியிட கண்டிப்பாக ஒரு காட்சிக்கு 24 சட்டங்கள் தான் அமைக்கப்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.[2]
மீமிகைத் துல்லியத் தரநிலை
[தொகு]2007 உருவாக்கப்பட்ட SMPTE ST 2036-1 என்கிற தரநிலை மீமிகைத் துல்லியம் அமையப்பெறுவதற்கான விகிதங்களை வரையறுக்கிறது.
- 3840 × 2860 அல்லது 7680 × 4320 படவணு விகிதங்கள்.
- 16:9 புலன் விகிதம் அமையப்பெற 1:1 சதுரப் படவணு விகிதம்.
- 23.976, 24, 25, 29.97, 30, 50, 59.94, 60, 100, 119.88, or 120 Hz ஆகிய எண்களினூடே அமையப்பெறும் சட்டவிகிதங்கள்.
- RGB, Y′CBCR 4:4:4, 4:2:2 வண்ணவிகிதம் அல்லது 4:2:0 படவணு பிண்ணல்.
- 10 bpc (30 bit/px) அல்லது 12 bpc (36 bit/px) நிற ஆழம்.[3][4]
4கே பகுப்பியல் பட்டியல்
[தொகு]எண்ணிம ஊடகங்களில் பயன்படும் 4கே பகுப்பியல் விகிதங்கள் | |||
---|---|---|---|
வடிவம் | பகுப்பு | புலன் விகிதம் | படவணுக்கள் |
- | 4096×3072 | 1.33:1 (4:3) | 12,582,912 |
- | 4096×2560 | 1.60:1 (16:10) | 10,485,760 |
- | 4096{×2304 | 1.77:1 (16:9) | 9,437,184 |
டி.சி.ஐ 4கே (முழுச்சட்டம்) | 4096×2160 | ≈1.90:1 (256:135) | 8,847,360 |
டி.சி.ஐ 4கே (படநோக்கு கத்தரிப்பு) | 4096×1716 | ≈2.39:1 (1024:429) | 7,020,544 |
டி.சி.ஐ 4கே (தட்டைநிலை கத்தரிப்பு) | 3996×2160 | 1.85:1 (≈37:20) | 8,631,360 |
WQUXGA | 3840×2400 | 1.60:1 (16:10) | 9,216,000 |
4கே (மீமிகைத் துல்லியம்) | 3840×2160 | 1.77:1 (16:9) | 8,294,400 |
- | 3840×1600 | 2.40:1 (12:5) | 6,144,000 |
- | 3840×1080 | 32:9) | 4,147,200 |
4கே பதிவு
[தொகு]ஒரு காணொலியைப் 4கேவில் பதிவிடலின் பெருனன்மையே துல்லியம் தான். காணொலியைத் தொகுத்தல் மேம்படுத்தல் போன்ற செயல்பாடுகள் அடுத்து ஏற்படும் தரமிழப்பிலும் 4கே காணொலிகளானது துல்லியமாக காட்சியளிக்கும்.[5]
வண்ண மீளமைவை 4:2:0 (Y:C:R) என்கிற விகிதத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் 4கேவில் அருமையான நிற ஆழத்துடன் பதிவிக்க முடியும். 4கே வசதி பெற்ற திறன்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் 2160p (படவணு) காணொலியை 50 முதல் 100 பிட்விகிதங்கள் வரை பதிவு செய்கின்றன. அதிகப்படியான பிட்விகிதங்கள் துல்லியத்தை அதிகம் செய்வன.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "4கே பகுப்பியல் பற்றிய ஆங்கில கட்டுரை - விஷுவல் எஃபெக்ட்ஸ் இன் ஏ டிஜிட்டல் வேர்ல்ட்".
- ↑ "டி.சி.ஐ தொழில்நுட்பம் பற்றிய ஆங்கிலக் கட்டுரை - டிஜிட்டல் சினிமா இனிஷியேட்டிவ்ஸ்" (PDF). Archived from the original on 2016-05-27. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ OV 2036-0:2015: மீமிகைத் துல்லியத் தொலைக்காட்சி - ஒரு மேற்பார்வை. Society of Motion Picture and Television Engineers (SMPTE). March 27, 2015. doi:10.5594/SMPTE.OV2036-0.2015.
- ↑ SMPTE ST 2036-1:2014, Society of Motion Picture and Television Engineers (SMPTE), October 13, 2014
- ↑ "ஏ கைட் டூ விஷுவல் எஃபெக்ட்ஸ் சினிமேட்டோகிராஃபி - கூகுள் நூல்".
- ↑ "ஏன் 1080 படவணு திறன்பேசிகளில் 4கே காணொலிகள் மிகத்துல்லியமாக தெரிகின்றன? - யூடியூப் காணொலி ஆங்கிலம்".