5 நயா பைசா (இந்திய நாணயம்)
மதிப்பு | இந்திய ரூபாயில் 1⁄20 |
---|---|
Mass | 4.0 g (62.5 gr) |
விட்டம் | 22 mm (0.87 in) |
தடிமன் | 1.67 mm (0.066 in) |
முனை | Smooth |
Composition | செப்புநிக்கல் |
Years of minting | 1957-1963 |
Mintage | 4,294,967,295 |
Mint marks | ♦ = மும்பை B = Mumbai proof issue * = ஐதராபாத் ⟐ = ஐதராபாத் No mark = கொல்கத்தா |
Circulation | செல்லாமலாக்கப்பட்டது |
Catalog number | KM# 16 |
Obverse | |
வடிவமைப்பு | இந்திய தேசிய இலச்சினையுடன் நாட்டுப் பெயர். |
Reverse | |
Design | நாணய மதிப்பு, ஆண்டு மற்றும் மதிப்பு இந்தியில் (रूपये का बीसवाँ भाग; Eng: Twentieth of a rupee) |
ஐந்து நயா பைசா (five naye paise (இந்தி: पाँच नए पैसे) என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1⁄20 ஆகும். பைசாவின் சின்னம் p.
வரலாறு
[தொகு]1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாய் ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி பைசா நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை நாணயமானது "நயா பைசா" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டது மேலும் அந்த பெயரானது "பைசா" என அழைக்கப்பட்டது. நயா பைசா நாணயங்கள் "பதின் வரிசை"யின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2][3]
காசு அச்சடிப்பு
[தொகு]1957 முதல் 1963 வரை பம்பாயில் (இன்றைய மும்பை) இந்திய அரசு காசாலையில் ஐந்து நயா பைசா நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் சிறிய அடையாளச் சின்னமாக ♦ (சிறிய புள்ளி / வைரம்) வைக்கப்பட்டது.[4]
மொத்த காசுகள்
[தொகு]மொத்தம் 4,294,967,295 நாணயங்கள் 1957 முதல் 1963 முடிய அச்சிடப்பட்டன.
உலோகம்
[தொகு]ஐந்து நயா பைசா நாணயங்கள் செம்புநிக்கல் கலப்பு உலோகத்தில் தயாரிக்கப்பட்டன. காசின் எடை 4.0 கிராம்கள், விட்டம் 22 மில்லிமீட்டர்கள் (0.87 அங்), கனம் 1.67 மில்லிமீட்டர்கள் (0.066 அங்). ஐந்து நயா பைசாவானது முனை மழுங்கிய சதுரவடிவில் அமைந்திருந்தது.
வகைகள்
[தொகு]வகைகள் (1957-1963). | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
படம் | மதிப்பு | தொழில்நுட்ப அளவீடுகள் | விளக்கம் | அச்சிடப்பட்ட ஆண்டு | தற்போதைய நிலை | |||||||
முன்பக்கம் | பின்பக்கம் | எடை | விட்டம் | கனம் | உலோகம் | முனை | முன்பக்கம் | பின்பக்கம் | முதல் | கடைசி | ||
5 நயா பைசா | 4.0 கி | 22 மிமீ | 1.67 மிமீ | செப்புநிக்கல் | Smooth | இந்திய தேசிய இலச்சினை & நாட்டுப்country பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில். |
மதிப்பு மற்றும் ஆண்டு. | 1957 | 1963 | செல்லாக்காசாக்கப்பட்டது.[1] |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Coin details". India Numismatics. https://en.numista.com/catalogue/pieces1624.html. பார்த்த நாள்: 28 August 2017.
- ↑ "Republic India Coinage". Reserve Bank of India. https://rbi.org.in/SCRIPTs/mc_republic.aspx. பார்த்த நாள்: 28 August 2017.
- ↑ "History of Indian coins". India Numismatics. https://indianumismatics.wordpress.com/category/history-of-indian-coins/. பார்த்த நாள்: 28 August 2017.
- ↑ "5 naye paise". colnect.com. https://colnect.com/en/coins/coin/2105-5_Naye_Paise_new-1957~Today_-_Circulation-India_Republic. பார்த்த நாள்: 28 August 2017.