உள்ளடக்கத்துக்குச் செல்

பித்தாகரசு

விக்கிமேற்கோள் இலிருந்து

பித்தாகரசு ஒரு அயோனியக் கிரேக்கக் கணிதவியலாளரும், பித்தாகரியனியம் என்னும் மத இயக்கம் ஒன்றின் நிறுவனரும் ஆவார். இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராகவும், அறிவியலாளராகவும் போற்றப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம்.[1]
  • நல்லொழுக்கம் மட்டுமே புயலுக்கு அசையாமல், உறுதியாய் நிற்கும் என்பது இறைவனின் சட்டம்.[2]
  • மனிதன் வாழ்வாகிய இந்த மேடையில் கடவுளும் தேவர்களுமே (வேலையில்லாமல்) பார்வையாளர்களாக இருக்க உரிமையுள்ளவர்கள்.[3]
  • திறமையும் அவசியமும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் வாழ்கின்றன. [4]
  • எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னை நீயே மதித்துக்கொள்.[5]
  • நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. உன்னைப்பற்றிப் பேசுவதை மற்றவர்களுக்கு விட்டுவிடு. [6]
  • வாள் தரும் புண்ணினும் நா தரும் புண்ணே கொடியது. வாள் தரும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.[7]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 62-65. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142-143. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 149. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 208. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 191-192. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பித்தாகரசு&oldid=21733" இலிருந்து மீள்விக்கப்பட்டது