bails
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bails, பெயர்ச்சொல்.
- இணைப்பான்கள்; குருத்துகள்; தண்டுகள்[1]
விளக்கம்
[தொகு]- விக்கெட் என்ற அமைப்பினை உருவாக்க, ஆட்டத்தில் மூன்று குறிக்கம்புகள் (Stumps) உதவுகின்றன. அந்த மூன்று குறிக்கம்புகளையும் ஒன்றாக இணைத்திட, அவற்றின் தலைப்பாகத்தில் வைக்கப்படுகின்ற பொருளுக்கு இணைப்பான்கள் என்று பெயர். மூன்று கம்புகளையும் இணைக்கின்ற தன்மையில் உதவுவதால், இப்பெயர் பெற்றது. இரண்டு இணைப்பான்கள் ஒரு விக்கெட்டில் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு இணைப்பானும் 4⅜ அங்குலம் நீளம் உள்ளது. அது குறிக்கம்புகளின் மேல் வைக்கப்படுகின்ற பொழுது, கம்புக்கு மேல் அரை அங்குல உயரத்திற்குத் துருத்திக் கொண்டிருப்பதுபோல் உள்ள அமைப்பாக இருக்கும். ஒரு போட்டி ஆட்டத்திற்கு 2 விக்கெட்டுகள் உண்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bails--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்