search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ban"

    • 2 தனியார் உரக் கடைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசு விதிகளை பின்பற்றாத 2 தனியார் உரக்கடைகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் தற்காலிக தடைவிதித்தனர்.

    ஆலங்குடி அருகே உளள வடகாடு பகுதியில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா உரம் வாங்க சென்றால், அதோடு அவர்கள் வழங்கும் பயிர் நண்ணூட்டமும் சேர்ந்து வாங்க வலியுறுத்துவதாக விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து மாவட்ட வேளாண் துணை இயக்குநர் மோகன்ராஜ், உதவி இயக்குநர்(தரக் கட்டுப்பாடு ) மதியழகன், வேளாண் அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் அப்பகுதியில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு விதிகளை முறையாக பின்பற்றாத 2 கடைகளில் உர விற்பனைக்கு த ற்காலிக தடைவிதித்தனர்.

    • திருச்சி காவிரி பாலத்தில் இன்று நள்ளிரவு முதல் இருசக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
    • பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் வேண்டுகோள்

    திருச்சி :

    திருச்சி மாவட்ட கலெக் டர் மா.பிரதீப் குமார் வெளி–யிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதா–வது:-

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரி பாலத் தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி–றது.

    இதனால் பாலத்தின் மேல் சென்ற வாகனங்களின் போக்கு–வரத்தை 10.09.2022 அன்று முதல் இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் மாற்றுப் பாதை–யில் செல்ல அறிவுறுத்தப் பட்டது.

    இந்நிலையில் பாலத்தூண் களின் மேல் அதிர்வு தாங்கி–கள் பொருத்தும் பணி ஒவ்வொறு தட்டுகளாக மேற்கொள்ளும் நிலையில் தட்டுகளின் தளமட்டம் மாறுபாட்டிற்கு உள்ளாகும் என்கிற காரணத்தால் இரு சக்கர வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற் பட்டுள்ளது.

    எனவே இப்பணி வரும் நாளை 21.11.2022 முதல் துவங்க உள்ளதால் புனரமைப்பு பணியை விரைவில் முடிக்க இன்று நள்ளிரவு முதல் காவிரி பாலத்தில் செல்லும் இரு–சக்கர வாகனங்களின் போக்கு–வரத்து தடை செய் யப்பட்டுள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்டபடி இரு–சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வித வாக–னங்களும் கீழ்கண்ட மாற்றுப்பா–தையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட டுள்ளது.

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணா சிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ெரயில்வே மேம்பா–லத்திலிருந்து ஓயாமரி வழி–யாக (காவிரி தென் கரை சாலை) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை -திருச்சி திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை

    சென்னை-திருச்சி திண் டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடதுகரை சாலை) வழியாக ெரயில்வே மேம் பாலம் ஏறி திரு–வானைக் கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்ல–லாம்.

    ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தி–லிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ெரயில்வே மேம்பாலத் தின் வழியாக திருவானைக் கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி டிரங்க் சாலை வழியாக ெரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை திருச்சி திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரை சாலை) அண்ணா சிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்ல–லாம்.

    திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவ–ரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெம்பர் 1 டோல்கேட் அடைந்து சென்னை செல்ல–லாம். அவ்வாறே சென்னை–யிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெம்பர் 1 டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.

    சத்திரம் பேருந்து நிலை–யத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணா சிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்ன–தாக உள்ள ெரயில்வே மேம்பா–லத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடது–புறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெம்பர் 1 டோல்கேட் சென்று செல்லலாம்.

    கலெக்டர் வேண்டுகோள்

    காவிரிப் பாலம் பரா–மரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்படவுள்ள–தை–யொட்டி மேற்கண்ட மாற்றுப் பாதை–யில் இரு சக்கர வாக–னங்கள் உள்ளிட்ட அனைத்துவித வாகனங்க–ளும் பயணம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நல்ஒத்துழைப்பு வழங்கிடும்படி பொது–மக்கள் கேட்டுக்கொள்ளப்ப–டுகிறார்கள்.

    இவ்வாறு திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    • 2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.
    • அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள்.

    நாமக்கல்:

    2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் புத்தாண்டை அசம்பாவிதங்கள் இல்லாமல் கொண்டாட தமிழக அரசும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள். 20 இடங்களில் வாகன சோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.

    31-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகன ஓட்டுபவர்கள் கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்க, வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்து 100-க்கும், போலீஸ் செயலிக்கும் தகவல் தெரிவிக்கலாம். வழிபாட்டு தளங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவ–தாக நாமக்கல் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வருகிற 31- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • 5 நாட்களுக்கு முன்னரே போலீஸ் கமிஷனர் அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே கூட்டம் நடத்த வேண்டும்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வருகிற 31- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக் கூட்டம் உள்ளிட்டவை நடத்த விரும்புவோர் முறையாக 5 நாட்களுக்கு முன்னரே போலீஸ் கமிஷனர் அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே கூட்டம் நடத்த வேண்டும்.

    திருமணம், இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட இன்றியமையாத நிகழ்ச்சிகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சூறாவளி காற்று வீச கூடும் என்ப தால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வே ண்டாம் ,
    • மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ,

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்வளத் துறை அதிகாரி சூறாவளி காற்று வீச கூடும் என்ப தால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வே ண்டாம் என அறிவித்து ள்ளார். தென்மேற்கு வங்கக்க டலில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சூறாவளி க்காற்று வீசக்கூடும் என்றும், இதனால் தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ள தாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்ரை அறிவித்துள்ளது.

    எனவே மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பி வரவேண்டும். என காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி அறிவித்துள்ளார்.

    • தமிழகமெங்கும் பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பண்ருட்டி பகுதியில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
    • பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் வைக்க போலீசாதடை விதித்துள்ளனர்.

    க்டலூர்:

    பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் வைக்க போலீசாதடை விதித்துள்ளனர்இ து குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கண்ணன்வெளியிட்டுள்ள   செய்தி குறிப்பில்கூறியிருப்பதாவது:-   தமிழகமெங்கும் பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பண்ருட்டி பகுதியில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளிலோ விழா நடைபெறும்

    மண்டபங்களிலோ விழாவிற்கு முதல் நாளில் மிகச் சிறிய அளவிலான பேனர்களை வைத்து விழா முடிவடைந்ததும் அகற்றி விடலாம். உங்கள் நகரை சிங்கார நகரமாக மாற்ற போலீசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அரங்கம் கட்ட அனுமதி வாங்கி, அதில் வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் பகுதியில் வழிபாட்டுத் தலம் அமைக்கக்கூடாது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பகுதியில், பெரும்பான்மை மக்கள் வசித்து வரும் பகுதியில், சிலர் அரங்கம் கட்ட அனுமதி வாங்கி, அதில் வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக, அந்தப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்தப் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடே ஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு, பெரும்பா ன்மையான மக்கள் வசிக்கும் பகுதியில் வழிபாட்டுத் தலம் அமைக்கக்கூடாது. இதனால் மதமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாவட்ட அளவில் போராட்டங்கள் நடைபெறும் என கூறியிருந்தார். இந்த நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, துணை தலைவர் மருதாசலமூர்த்தி மற்றும் காளிவேலம்பட்டி பொதுமக்கள், கட்டிட உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வழிபாட்டு தலம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து கட்டட உரிமையாள ர்களிடம், அரங்கம் அமைப்பதாக கூறி கட்டட அனுமதி பெற்று விட்டு தற்போது கட்டுமான ப்பணி நடைபெற்று கொண்டிரு க்கும்போது, ஜெபக்கூடம் கட்டுவதற்கு அனுமதி கேட்பதை ஏற்க முடியாது. மாவட்ட கலெக்டரின் மறு உத்தரவு வரும் வரை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். கட்டுமானப் பணிகளை தொடரக்கூடாது என தாசில்தார் கட்டட உரிமையாளருக்கு அறிவுறுத்தினார். இதனை ஏற்று கட்டுமான பணிகள் நடைபெறாது என அவர்கள் தெரிவித்தனர்.

    • மதுரையில் 5-ந் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் அரசாணையின்படி புத்தர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் அரசு ஆணையின்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தவறான முறையில் சம்பாதித்து பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்குத்தான் பாதிப்பு.
    • ஆடைகள் வாங்குபவர்கள் ஆன்லைன் மூலமே பண பரிவர்த்தனை செய்கிறார்கள்.

    திருப்பூர் :

    2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் வரவேற்று உள்ளனர். இது குறித்து திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், 2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆடை உற்பத்தியாளர்களுக்குஎந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே ஆடை உற்பத்தி துறையினர் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் 2000 ரூபாய் நோட்டுகளை யாரும் பதுக்கி வைக்க வாய்ப்பில்லை. தவறான முறையில் சம்பாதித்து பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்குத்தான் பாதிப்பு. 2000 ரூபாய் நோட்டுகள் தடையால் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள்.எனவே 2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை வரவேற்கிறோம் என்றார்.

    திருப்பூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சந்திரசேகர் என்பவர் கூறுகையில், ஊழல் அரசியல்வாதிகளுக்கு இது பாடமாக இருக்கும். தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துகின்றனர். 2000 ரூபாய் நோட்டு தடையால் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை நான் வரவேற்கிறேன் என்றார்.

    காதர்பேட்டை 2-ம் தரபனியன் வியாபாரிகள் சங்க துைண தலைவர் குமார் கூறுகையில், எங்களிடம் ஆடைகள் வாங்குபவர்கள் ஆன்லைன் மூலமே பண பரிவர்த்தனை செய்கிறார்கள். 10 சதவீதம்பேர்தான் பணம் செலுத்தி ஆடைகள் வாங்குகின்றனர். இதனால் 2000 ரூபாய் நோட்டு தடையால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றனர். 

    • இணையச் சேவைக்கான தடையை மேலும் நீட்டித்து மாநில அரசு 10-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
    • தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3-ந்தேதி முதல் இைணயச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் இணையச் சேவைக்கான தடையை மேலும் நீட்டித்து மாநில அரசு 10-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுகளை பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் இணையச் சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த தடையில் கைபேசி இணையச் சேவை மற்றும் அகண்ட அலைவரிசை இணையச் சேவை உள்ளடங்கியதாகும். அரசு பயன்பாட்டுக்கான இணையச் சேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • கொள்முதல் பட்டியலில் ரகம், குவியல் எண், காலாவதி நாள் உள்பட அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையில் ஆய்வு குழுவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சான்று பெற்ற நெல் விதைகளையே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மேலும் உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யும்போது முளைப்புத்திறன் அறிக்கை மற்றும் கொள்முதல் பட்டியலில் ரகம், குவியல் எண், காலாவதி நாள் உள்பட அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும். உண்மை நிலை விதைகளுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்–பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் தாராபுரத்தில் சில நெல் விதை நிலையங்களில் விதை விற்பனை உரிமம், விதை இருப்பு மற்றும் விலை விவரப்பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், உண்மை நிலை விதைகளுக்கான பதிவேடுகள், முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. அதில் விதை இருப்பிற்கும், புத்தக இருப்பிற்கும் வேறுபாடு உள்ள விதைகள் மற்றும் விற்பனை பட்டியல் முறையாக பராமரிக்கப்படாத சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 1 லட்சத்து 66 ஆயிரத்து 730 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    மேலும் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது விற்–பனை ரசீது கொடுக்கப்பட வேண்டும். அதில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும் என ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுரை வழங்கினார்.

    மேலும் விதை விற்பனை தொடர்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச்சட்டம்-1966, விதை விதிகள்- 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை-1983 ஆகியவற்றின்படி விதி மீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
    • மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3ம் தேதி முதல் இணையச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது.

    மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

    இதனால், இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.

    வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுகளை பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் இணையச் சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, இம்பாலில் கடந்த வாரம் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மணிப்பூரில் இணையத்தள சேவைக்கான தடை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×