என் மலர்
நீங்கள் தேடியது "Paris Olympic"
- இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
- ஏற்கனவே 3 இந்திய வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்றுகள் தற்போது நடந்து வருகிறது.
ஏற்கனவே நடந்த தகுதிச்சுற்று ஒன்றில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை நிஷாந்த் தேவ் இழந்தார். இதற்கிடையே, மற்றொரு தகுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மால்டோவா வீரரை 5-0 என வீழ்த்தி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம்பிடித்தார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார்.
ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பெண் வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத் பவார் (54 கிலோ), லாவ்லினா போர்கோஹெய்ன் (75) ஆகியோர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்னர்.
இந்நிலையில், 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் வென்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம்பிடித்தார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது இந்திய வீரர் ஆவார்.
- தமிழக துப்பாக்கி சுடுதல் வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- இவர் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.
பிருத்வி ராஜ் தொண்டைமான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். இவரது தலைமையில் ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
- விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை நகரான திருப்பூரில் இருந்து வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பனியன்கள் உள்ளிட்ட ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் , உலக கால்பந்து போட்டி உள்பட சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந்தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் அப்போட்டியில் பங்கேற்கும் பார்வையாளர்கள் அணிவதற்காக திருப்பூரில் உள்ள பேக் பே இந்தியா நிறுவனம் 10 லட்சம் டீ-சர்ட் பனியன்களை தயாரித்து அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான தீபா ஜெயன் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கூறியதாவது:-
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக எங்களது நிறுவனம் மூலம் பெற்ற ஆர்டர்களில் இதுவரை 70 சதவீத ஆர்டர்களை முடித்து அனுப்பி வைத்துவிட்டோம். மீதமுள்ள 30 சதவீத ஆர்டர்களை முடிப்பதற்கு 6 சிறு, குறு நிறுவனங்கள் மூலம் பனியன் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே 2023ம் ஆண்டு பிரான்சில் நடந்த ரக்பி உலக கோப்பைக்கான போட்டிக்கும் பனியன்கள் தயாரித்து அனுப்பி வைத்திருந்தோம். ஐ.ஓ.சி.யின் அதிகாரபூர்வ உரிம திட்டத்தின் மூலம் எங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு தயாரித்து அனுப்புகிறோம். ஜவுளி உற்பத்தியில் பல நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுவதில்லை. பல ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய நம்பகத்தன்மையின் மூலம் நாங்கள் சுமூகமாக இயங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் வோண்ட்ரசோவா வெள்ளி வென்றார்.
பாரிஸ்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து செக் நாட்டு வீராங்கனையான மார்கெட்டா வோண்ட்ரசோவா மற்றும் போலந்து வீரர் ஹ்யூபர்ட் ஹர்காக்ஸ் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வகையில் கவனம் செலுத்துவதற்காக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுகிறேன் என வோண்ட்ரசோவா தெரிவித்துள்ளார்.
இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலந்து வீரர் ஹர்காக்ஸ் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
- ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா வண்ணமயமான கலைநிகழ்ச்சியுடன் இன்று நடைபெறுகிறது.
- ஒலிம்பிக் தொடரின் மகளிர் கால்பந்து போட்டியில் பிரான்ஸ், அமெரிக்கா ஆகியவை வென்றன.
பாரீஸ்:
ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் பிரமாண்ட தொடக்கவிழா இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், ஒலிம்பிக் தொடரில் மகளிர் கால்பந்து போட்டி இன்று தொடங்கியது.
குரூப் ஏ பிரிவில் நடந்த போட்டியில் பிரான்ஸ், கொலம்பியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.
இதேபோல், குரூப் பி பிரிவில் ஒலிம்பிக்கில் 4 முறை தங்கம் வென்ற அமெரிக்க அணி ஜாம்பிய அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஸ்வாசன் மலோரி 24 மற்றும் 25வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல் அடித்து அசத்தினார்.
- கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
- அவர்களின் பயிற்சி மற்றும் மற்ற ஏற்பாடுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என மந்திரி தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்க விழாவுடன் தொடங்குகிறது. இந்தியா சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இடம் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சீனியர் தடகள பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
முகமது அனாஸ், முகமது அஜ்மல் (இருவரும் ரிலே அணியில் உள்ளனர்), அப்துல்லா அபுபக்கர் (டிரிபிள் ஜம்ப்), பி.ஆர். ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), ஹெச்.எஸ் பிரனோய் (பேட்மிண்டன்) ஆகியோருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி வீரர்களின் பயற்சி மற்றும் ஒலிம்பிக் தொடர்பான ஏற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த முறையில் ஹாக்கி அணி பதக்கம் வெல்லும என நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம். பிரனோய் நல்ல ஃபார்மில் உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
- தங்க பதக்கத்திற்கான போட்டியில் சீனா 16-12 என தென்கொரியாவை வீழ்த்தியது.
- வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் கஜகஸ்தான் 17-5 என ஜெர்மனியை வீழ்த்தியது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று தொடக்க விழாவுடன் தொடங்கியது. இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிக்கான போட்டி நடைபெற்றது. தகுதி சுற்றில் சீனா, தென்கொரியா, கஜகஸ்தான், ஜெர்மனி அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தன.
முதல் இரண்டு இடங்களை பிடித்த சீனா- தென்கொரியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்திற்காக மோதின. கஜகஸ்தான்- ஜெர்மனி அணிகள் வெண்கல பதக்கத்திற்காக மோதின.
வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் கஜகஸ்தான் 17-5 என ஜெர்மனியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.
சீனா- தென்கொரியா இடையிலான தங்க பதக்கத்திற்கான போட்டியில் சீனா 16-12 என தென்கொரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
இதன்மூலம பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றது சீனா. தென்கொரியா வெள்ளி பதக்கம் வென்றது.
- சரப்ஜோத் சிங் மற்றும் ஜெர்மனி வீரர் ஆகியோர் தலா 577 புள்ளிகள் பெற்றிருந்தனர்.
- சரப்ஜோத் சிங் 16x, ஜெர்மனி வீரர் 17x பெற்றிருந்ததால் வாய்ப்பை இழந்தார்.
துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதிச் சுற்று இன்று மதியம் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம் 33 வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஆறு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் 10 முறை இலக்கை நோக்கி சுட வேண்டும். மொத்த புள்ளிகள் கணக்கிடப்பட்டு முதல் 8 இடங்கள் பிடிக்கும் வீரர்கள் பதக்கத்திற்கான சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
இந்திய வீரரான சரப்போஜத் சிங் தொடக்கம் மற்றும் ஐந்தாவது சுற்றில் சிறப்பாக செயல்படவில்லை. முதல் சுற்றில் 94 புள்ளிகளும், 5-வது சுற்றில் 93 புள்ளிகளும் பெற்றார். 4-வது சுற்றில் 100 புள்ளிகள் பெற்று அசத்தினார். மொத்தமாக 577 புள்ளிகள் பெற்றார். இதில் 16 முறை துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டார்.
அதேவேளையில் ஜெர்மனி வீரர் ராபின் வால்டர், துருக்கி வீரர் இஸ்மாயின் கெலேஸ் ஆகியோரும் 577 புள்ளிகள் பெற்றிருந்தனர்.
ஆனால் ஜெர்மனி வீரர் ராபின் வால்டர் 17 முறை துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டார். சரப்ஜோத் சிங் 16 முறைதான் துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டதால் 9-வது இடம் பிடித்து பதக்கப்போட்டிக்கான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நூழிலையில் இழந்தார்.
மற்றொரு வீரர் அர்ஜுன் சிங் சீமா 574 (17 முறை 10) புள்ளிகள் பெற்றி 18-வது இடத்துடன் ஏமாற்றம் அடைந்தார்.
- இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.
- ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர், ரிதம் சங்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
44 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் பதக்கத்திற்கான சுற்றுக்கு (இறுதி சுற்று) முன்னேறியுள்ளார்.
ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.
ரிதம் சங்வான் 573-14x புள்ளிகள் பெற்று 15-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.
நாளை பதக்கத்திற்கான சுற்று நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் பதக்கத்தை உறுதி செய்வார்கள்.
- காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல் முறையாக ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
- பாரீஸ் ஒலிம்பிக் உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவரது 112-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் மோடி பேசியதாவது:-
காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல் முறையாக ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. காதியின் விற்பனை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? காதியின் விற்பனை 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் காதி மற்றும் கைத்தறி விற்பனை அதிக அளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. பெரும்பாலும் பெண்கள் இந்த தொழிலில் இருப்பதால் அவர்கள் அதிகமாக பயன் அடைகிறார்கள்.
நீங்கள் வெவ்வேறு வகையான ஆடைகளை வைத்திருக்கலாம். இதுவரை நீங்கள் காதி ஆடைகளை வாங்கவில்லை என்றால் அவற்றை வாங்க தொடங்குங்கள்.
பாரீஸ் ஒலிம்பிக் உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. உலக அரங்கில் மூவர்ண கொடியை பெருமையுடன் அசைக்க நமது விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு அளிக்கிறது. நாட்டுக்காக அவர்கள் குறிப்பிடத்தக்க ஒன்றை சாதிக்க வேண்டும்.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஆதரிக்க வேண்டும். நாட்டுக்காக அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
சில தினங்களுக்கு முன்பு கணித உலகில் ஒரு ஒலிம்பிக் நடந்தது. சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் இந்திய மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நமது அணி 4 தங்கப்பதக்கத்தையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்றது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் அசாமில் உள்ள 'மொய்டாம்ஸ்' இடம் பெற்றுள்ளது. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ந் தேதிக்கு முன்பு நீங்கள் எனக்கு ஆலோசனைகளை அனுப்புகிறீர்கள். இந்த ஆண்டும் உங்கள் ஆலோசனைகளை எனக்கு அனுப்புங்கள். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நீங்கள் மூவர்ண கொடியுடன் உங்கள் செல்பியை இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இவ்வாறு மோடி உரையாற்றி உள்ளார்.
- இன்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.
- பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
பாரீஸ்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகளான இளவேனில் மற்றும் ரமிதா ஜிண்டால் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.
இதில் ரமிதா ஜிண்டால் சிறப்பாக செயல்பட்டு 5-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான இளவேனில் 10-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.
- பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
- இன்று டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர்
பங்கேற்றார்.
8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.
ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.