Leo Update: `தயாரானது டிரெய்லர்' - லியோ படத்தின் புதிய அப்டேட்!

லியோ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Published:Updated:
LEO-வில் விஜய்
LEO-வில் விஜய்
0Comments
Share
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'லியோ' திரைப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், லியோ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை காந்தி ஜெயந்தியான இன்று அறிவித்திருக்கின்றனர்.

'லியோ'  | Leo
'லியோ' | Leo

அதிகம் எதிர்பார்க்கப்படும் லியோ படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்து திடீரென ரத்தாகியிருந்தது. இது ரசிகர்களை கவலை கொள்ள செய்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் வரிசையாக 4 போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அனிருத்தின் இசையில் முதலில் 'நான் ரெடி' பாடல் வெளியாகியிருந்த நிலையில், 'Badass' என்கிற இரண்டாவது பாடலையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், புதிதாக ஒரு அப்டேட்டை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

அதாவது, காஷ்மீரில் விஜய் கழுதைப்புலியுடன் சண்டையிடுவதைப் போல ஒரு போஸ்டரை வெளியிட்டு படத்திற்கான டிரெய்லர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப்படம் லோகேஷின் வழக்கமான 'LCU' க்குள் இருக்குமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்தது. டிரெய்லர் வெளியாகும்பட்சத்தில் அதில் இதற்கான விடை கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கலாம்.