உள்ளடக்கத்துக்குச் செல்

செய்யூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்யூர் (தனி) என்பது தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் செய்யூர் தனி தொகுதியாக உள்ளது. முழுவதிலும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாகும்.

மதுராந்தகம் பொதுத் தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட லத்தூர் ஊராட்சி ஒன்றியம், அச்சிறுபாக்கம் தொகுதியிலிருந்து நீக்கப்பட்ட சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் 46 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதி 2011-ல் உருவாக்கப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை கிராமங்கள் பலவும் செய்யூர் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், கடபாக்கத்தில் கிழக்கு கடற்கரை ஒட்டி உள்ள பழங்கால ஆலம்பரை கோட்டை, முதலியார் குப்பத்தில் உள்ள அரசின் படகு குழாம் கல்பாக்கம் அனுமின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன.

இத்தொகுதியில் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 41 ஊராட்சிகள், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகள், இடைக்கழி நாடு பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகள், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் வாக்காளர்கள் மொத்தம்- 2,26,346. அதில் ஆண்கள்- 1,11,270, பெண்கள்- 1,15,019 மற்றும் 3-ம் பாலினம்- 57 ஆக உள்ளனர். அதிமுக சார்பில் கனிதா சம்பத், திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கிளாப்பாக்கம், பெரும்பேடு, அம்மணம்பாக்கம் (ஆர்.எப்), குன்னவாக்கம், வீராபுரம், வெங்கம்பாக்கம், ஆரம்பாக்கம், பூந்தண்டலம், குடிபெரும்பாக்கம், பேரம்பாக்கம், அமிஞ்சிக்கரை, பெரியகாட்டுப்பாக்கம், நடுவக்கரை, பாக்கம், பாண்டூர், வெள்ளப்பந்தல், வழுவாதூர், திம்மூர், வள்ளிபுரம், விளாகம், எடையாத்தூர், இரும்புலிச்சேரி, தேப்பனாம்பட்டு, அட்டவட்டம், நெரும்பூர், சின்னக்காட்டுப்பாக்கம், அங்கமாம்பட்டு, சிட்லம்பாக்கம், புன்னப்பட்டு, சோமாஸ்ப்பட்டு, சோலைக்குப்பம், இளையனார்குப்பம், விட்டலாபுரம் மி, விட்டலாபுரம் -மிமி, மேற்காண்டை, லட்டூர், சூராடிமங்கலம், கொந்தகாரிக்குப்பம், பனங்காட்டுசேரி, பொம்மராஜபுரம், நல்லாத்தூர், ஆயப்பாக்கம், வசுவசமுத்திரம், வயலூர் மற்றும் வெங்காடு கிராமங்கள்,

புதுப்பட்டிணம் (சென்சஸ் டவுன்)[2]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 வி. எஸ். ராஜி அதிமுக 78,307 -- பார்வேந்தன் விசிக 51,723 --
2016 ஆர். டி. அரசு திமுக 63,446 -- ஏ. முனுசாமி அதிமுக 63,142 --

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. விசிக நேருக்குநேர் போட்டியிடும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்:செய்யூர் தொகுதி கண்ணோட்டம்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2016.

வெளியிணைப்புகள்