இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள்
Appearance
இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Handloom Technology [IIHT]), கைத்தறி தொழில் மேம்பாட்டிற்கான தொழில்நுட்பக் கல்வி கழகங்களில் ஐந்து இந்திய நடுவண் அரசாலும், நான்கு மாநில அரசுகளாலும் நடத்தப்படுகிறது. இவைகள் தன்னாட்சி பெற்ற பொதுத்துறை கல்வி நிலையங்களாகும். அனைத்து தொழில் நுட்பக்கழகங்களிலும் மூன்றாண்டு பட்டயப் படிப்புகள் உள்ளது. வாரணாசி மற்றும் சேலம் கைத்தறி தொழில் நுட்பக் கழங்களில் மட்டும் கைத்தறி மேம்பாட்டுக்கான ஒராண்டு முதுநிலை பட்டயப் படிப்புகள் உள்ளது.[1]
இந்திய நடுவண் அரசின் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள்
[தொகு]- இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகம் IIHT, வாரணாசி, உத்திரப் பிரதேசம், 1956
- இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகம் IIHT, சேலம், தமிழ்நாடு, 1960
- இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகம் IIHT, குவகாத்தி, அசாம், 1982
- இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகம் IIHT, ஜோத்பூர், ராஜஸ்தான், 1993
- இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகம் IIHT, பர்கார், ஒடிசா, 2008
மாநில அரசுகளின் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள்
[தொகு]- எஸ். பி. கே. எம். இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகம், வெங்கடகிரி, ஆந்திரம்
- கர்நாடகா கைத்தறி தொழில்நுட்பக் கழகம் கடக், கர்நாடகம்
- கைத்தறி தொழில்நுட்பக் கழகம், சம்பா, சட்டீஸ்கர் மாநிலம்
- கைத்தறி தொழில்நுட்பக் கழகம், கண்ணூர், கேரளம் [2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.educationobserver.com/institute_news/index.php/tag/iiht-salem
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2015-05-31.