மேலாண்மை கல்வித் துறை இ. தொ. க ரூர்க்கி
மேலாண்மை கல்வித் துறை இ. தொ. க ரூர்க்கி (Department of Management Studies, DoMS) இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கியில் [1] இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் மேலாண்மைக் கல்வி வழங்கும் திட்டத்தின்படி 1998ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஓர் மேலாண்மை பள்ளியாகும். இங்கு ஈராண்டு முழுநேர எம்பிஏ பாடதிட்டமும் பல்வேறு சிறப்புப் பாடங்களில் முனைவர் பட்டத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
வளாகம்
[தொகு]இ.தொ.க ரூர்க்கியின் மேலாண்மைப் பள்ளி இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இருதள கட்டிடமொன்றில் இயங்குகிறது. இதில் வகுப்பு அறைகள், கணினி மையம், நூலகம், ஒலி ஒளி உதவிகளுடன் கூடிய அரங்கம் ஆகியன உள்ளன. இந்தக் கட்டிடம் முழுமையும் கம்பியில்லா இணைய பரப்பு (வை-ஃபை) வழங்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு
[தொகு]இங்கு எம்பிஏ பட்டப்படிப்பு கீழ்காணும் சிறப்புப் பாடங்களில் ஏதேனும் இரண்டில் விருப்பத்தேர்வு பெறுமாறு அமைக்கப்பட்டுள்ளது: MBA at IIT Roorkee is it offers a dual specialization in any two of the following categories:
சேர்க்கைகள்
[தொகு]ஒவ்வொரு ஆண்டும் இ.தொ.கழகங்களும் இந்திய அறிவியல் கழகமும் இணைந்து நடத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு (JMET) வழியாக சேர்க்கைகள் நடைபெறுகின்றன.[2]. தேர்விற்குப் பிறகு இப்பள்ளியின் இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கி விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், முந்தைய கல்விநிறுவனங்களில் நிலையான மதிப்பெண்கள், தகுதிகள் மற்றும் வேலை துய்ப்பறிவு ஆகியன கொண்டு குழு உரையாடல்/நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IIT management programmes பரணிடப்பட்டது 2012-11-06 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, October 25, 2004.
- ↑ schools that use JMET scores.. பரணிடப்பட்டது 2011-02-26 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, October 1, 2007.