உள்ளடக்கத்துக்குச் செல்

இருசோடியம் பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருசோடியம் பாசுபேட்டு
Structural formula of disodium phosphate
Ball-and-stick model of the component ions of disodium phosphate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஐதரசன் பாசுபேட்டு
வேறு பெயர்கள்
இருசோடியம் ஐதரசன் ஆர்த்தோபாசுபேட்டு
சோடியம் ஐதரசன் பாசுபேட்டு
சோடியம் பாசுபேட்டு இருகாரம்
இருசோடியம் பாசுபேட்டு
இனங்காட்டிகள்
7558-79-4 Y
10028-24-7 (இருநீரேற்று) N
7782-85-6 (ஏழுநீரேற்று) N
10039-32-4 (பன்னிருநீரேற்று) N
ChEBI CHEBI:34683 Y
ChEMBL ChEMBL1060 Y
ChemSpider 22625 Y
EC number 231-448-7
InChI
  • InChI=1S/2Na.H3O4P/c;;1-5(2,3)4/h;;(H3,1,2,3,4)/q2*+1;/p-3 N
    Key: BNIILDVGGAEEIG-UHFFFAOYSA-K N
  • InChI=1/2Na.H3O4P/c;;1-5(2,3)4/h;;(H3,1,2,3,4)/q2*+1;/p-3
    Key: BNIILDVGGAEEIG-DFZHHIFOAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24203
வே.ந.வி.ப எண் WC4500000
  • [Na+].[Na+].[O-]P([O-])([O-])=O
UNII 22ADO53M6F Y
பண்புகள்
Na2HPO4
வாய்ப்பாட்டு எடை 141.96 கி/மோல் (நீரிலி)
268.07 கி/மோல் (ஏழுநீரேற்று)
தோற்றம் வெண்மை நிறப்படிகத் திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 1.7 கி/செ.மீ3
உருகுநிலை 250 °C (482 °F; 523 K) சிதைவடையும்
7.7 கி/100 மி.லி (20 °செல்சியசு)
11.8 கி/100 மி.லி (25 °செல்சியசு, ஏழுநீரேற்று)
கரைதிறன் ஆல்ககால்களில் கரையாது
மட. P -5.8
காடித்தன்மை எண் (pKa) 12.35
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.35644..1.35717 20°செல்சியசில்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உறுத்தும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1129
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
17000 மி.கி/மி.கி (எலி, வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் பாசுபைட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் இருபொட்டாசியம் பாசுபேட்டு
ஈரமோனியம் பாசுபேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இருசோடியம் பாசுபேட்டு (Disodium phosphate) என்பது Na2HPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பலவகையான சோடியம் பாசுபேட்டுகளுள் ஒன்றான இச்சேர்மம் சோடியம் ஐதரசன் பாசுபேட்டு என்றும் ஆங்கிலத்தில் சுருக்கமாக DSP என்றும் அழைக்கப்படுகிறது. நீரிலி வடிவ உப்பாகவும் அதே சமயத்தில் 2,7,8 மற்றும் 12 வடிவ நீரேற்றுகளாகவும் இவ்வுப்பு காணப்படுகிறது. நீரிலி வடிவ உப்பு நீருறிஞ்சும் திறனுடனும் [1] நீரேற்று உப்புகள் யாவும் தண்ணீரில் கரையக் கூடியனவாகவும் உள்ளன.

அமிலக்காரப் பண்புகள்

[தொகு]

இரு சோடியம் ஐதரசன் பாசுபேட் நீர்க்கரைசலின் காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) 8.0 மற்றும் 11.0 அளவுகளுக்கு இடையில் இருப்பதால் இது ஒரு மிதமான காரமாக கருதப்படுகிறது.

HPO42− + H2O H2PO4 + OH

தயாரிப்பு மற்றும் வினைகள்

[தொகு]

பாசுபாரிக் அமிலத்துடன் சோடியம் ஐதராக்சைடு சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இரு சோடியம் பாசுபேட்டு தயாரிக்கலாம்.

H3PO4 + 2 NaOH → HNa2PO4 + 2 H2O

தொழிற்சாலைகளில் இது இரண்டு படிநிலைச் செயல்முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இச்செயல்முறையில் இருகால்சியம் பாசுபேட்டுடன் சோடியம் பைசல்பேட்டு சேர்த்து வினைப்படுத்தப்படுகிறது. இங்கு கால்சியம் சல்பேட்டு வீழ்படிவாக உருவாகிறது.[2]

CaHPO4 + NaHSO4 → NaH2PO4 + CaSO4

வினையில் உருவாகும் ஒருசோடியம் பாசுபேட்டு கரைசல் இரண்டாவது படிநிலையில் பகுதியாக நடுநிலையாக்கப்படுகிறது.

NaH2PO4 + NaOH → HNa2PO4 + H2O

பயன்கள்

[தொகு]

உணவு மற்றும் தண்ணீர் சிகிச்சையில் இருசோடியம் பாசுபேட்டுடன் முச்சோடியம் பாசுபேட்டு இணைத்து பயன்படுத்தப்படுகிறது. உணவுகளில், காரகாடித்தன்மைச் சுட்டெண்ணை (pH) சரிசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. செறிவூட்டப்பட்ட பால் தயாரிப்பில் உறைதலை தடுக்க இதன் இருப்பு பயன்படுகிறது. தூளாக்கப்பட்ட உணவுக் கூட்டுப் பொருட்கள் உறைதலையும் [3], நீர் தூய்மையாக்கலின் போது கால்சியம் செதில்கள் உருவாவதையும் இவ்வுப்பு ஒடுக்குகிறது. சிலவகையான தூய்மையாக்கிகளிலும் இது காணப்படுகிறது[2]. திண்மநிலையில் உள்ள இருசோடியம் பாசுபேட்டை சூடுபடுத்துவதால் நான்கு சோடியம் பைரோபாசுபேட்டு என்ற சேர்மம் கிடைக்கிறது.

2 HNa2PO4 → Na4P2O7 + H2O

மலச்சிக்கல் சிகிச்சையில் அல்லது முன்குடல் சுத்தம் செய்ய, ஒருகார மற்றும் இருகார சோடியம் பாசுபேட்டுகள் மலமிளக்கியாக பயன்படுத்தப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Physical data (pdf)" (PDF). Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
  2. 2.0 2.1 Klaus Schrödter, Gerhard Bettermann, Thomas Staffel, Friedrich Wahl, Thomas Klein, Thomas Hofmann "Phosphoric Acid and Phosphates" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry 2008, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a19_465.pub3
  3. "MSDS". Archived from the original on 2017-10-28. பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-28. பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருசோடியம்_பாசுபேட்டு&oldid=3792999" இலிருந்து மீள்விக்கப்பட்டது