ஏ. எல். அழகப்பன்
ஏ. எல். அழகப்பன் | |
---|---|
பிறப்பு | 18 செப்டம்பர் 1951 |
பணி | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1998-தற்போது |
பிள்ளைகள் | ஏ. எல். விஜய், உதயா |
ஏ. எல். அழகப்பன் (A. L. Alagappan) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். திரைப்படங்களை தயாரித்த நிலையில் பின்னர் இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்துவருகிறார். இவர் திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதியுமாவார்.[1]
குடும்பம்
[தொகு]இவரது மகன்கள் ஏ. எல். விஜய் மற்றும் உதயா ஆவர். இதில் விஜய் இயக்குநராகவும், உதயா நடிகராகவும் [2]. தமிழ்த் திரைபடத் துறையில் உள்ளனர்.
வாழ்க்கை
[தொகு]தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக 2004இல் பதவி ஏற்றவர். 2010 ஆண்டு முதல் நடித்துக் கொண்டு வரும் இவருக்கு ஈசன் திரைப்படத்தில் எதிர்மறை பாத்திரம் நடிப்பு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.[3].
2010 ஆம் ஆண்டு முதல், அழகப்பன் திரைப்படத்தில் துணை நடிகராக பணியாற்றிவருகிறார், குறிப்பாக எம். சசிகுமாரின் ஈசன் (2010) திரைப்படத்தில் எதிர்மறையான பாத்திரத்திற்காக விருது பரிந்துரைகளைப் பெற்றார்.
திரைப்படவியல்
[தொகு]நடிகராக
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | Notes |
---|---|---|---|
2010 | ஈசன் | தெய்வநாயகம் | சிறந்த எதிர்நாயகனுக்கான விஜய் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டார் |
2014 | கதை திரைக்கதை வசனம் இயக்கம் | விருந்தினர் தோற்றம் | |
நெருங்கி வா முத்தமிடாதே | காளீஸ்வரன் | ||
2017 | திரி | அங்கணன் | |
2021 | பரமபதம் விளையாட்டு | காளிங்கன் | |
2023 | துணிவு | முதலமைச்சர் | |
2024 | மழை பிடிக்காத மனிதன் | அமைச்சர் தவபுண்ணியம் |
தயாரிப்பு
[தொகு]- இனி எல்லாம் சுகமே (1998)
- கலகலப்பு (2001)
- சைவம் (2014),
- இது என்ன மாயம் (2015),
- ஒரு நாள் இரவில் (2016),
- சில சமயங்களில் (2017)
- வனமகன் (2017)