குலுக் கான்
Appearance
கயிசன் குலுக் கான் யுவானின் பேரரசர் வுசோங் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் பேரரசின் 7வது ககான் (பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில்) யுவான் வம்சத்தின் 3வது பேரரசர் சீனாவின் பேரரசர் | |||||||||||||||||||||
யுவான் சகாப்தத்தின் போது குலுக் கானின் (பேரரசர் வுசோங்) சித்திரப்படம். | |||||||||||||||||||||
யுவான் வம்சத்தின் பேரரசர் | |||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | ஜூன் 21, 1307 – ஜனவரி 27, 1311 | ||||||||||||||||||||
முடிசூட்டுதல் | ஜூன் 21, 1307 | ||||||||||||||||||||
முன்னையவர் | தெமுர் கான் | ||||||||||||||||||||
பின்னையவர் | அயுர்பர்வத புயந்து கான் | ||||||||||||||||||||
பிறப்பு | ஆகஸ்ட் 4, 1281 கன்பலிக், யுவான் வம்சம் | ||||||||||||||||||||
இறப்பு | சனவரி 27, 1311 கன்பலிக், யுவான் வம்சம் | (அகவை 29)||||||||||||||||||||
மனைவி | ஜெங்கே | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
மரபு | போர்ஜிஜின் | ||||||||||||||||||||
அரசமரபு | யுவான் | ||||||||||||||||||||
தந்தை | தர்மபாலா[1] | ||||||||||||||||||||
தாய் | கொங்கிராட்டின் டகி |
குலுக் கான் (Külüg Khan, மொங்கோலியம்: ஹுலுக் கான், Хөлөг хаан, குலுக் கயன்), பிறப்புப் பெயர் கயிஷன் (கயிசன் என்றும் உச்சரிக்கப்படுகிறது, மொங்கோலியம்: Хайсан, "சுவர்" என்று அர்த்தம்), வுசோங் (யுவானின் பேரரசர் வுசோங் என்ற கோவில் பெயராலும் அழைக்கப்படுகிறார், சீனம்: 元武宗; பின்யின்: Yuán Wǔzōng) (ஆகஸ்ட் 4, 1281 – ஜனவரி 27, 1311), யுவான் வம்சத்தின் பேரரசர் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் ஏழாவது மாபெரும் கான் என கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது. மங்கோலிய மொழியில் அவரது பெயர் "போர்வீரன் கான் அல்லது நல்ல குதிரையையுடைய கான்" என்று பொருள்.