உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திராவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திராவரம்
சந்திராபுரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636 902

சந்திராவரம் (Chandrapuram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மத்தியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 50 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°10'01.6"N 78°33'47.3"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 338 குடும்பங்கள் உள்ளன. ஊரின் மொத்த மக்கள் தொகை 1,243 ஆகும். இதில் 656 ஆண்களும் 587 பெண்களும் அடங்குவர்.[3][4] கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 52.5% ஆகும்.[5] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திராவரம்&oldid=3608021" இலிருந்து மீள்விக்கப்பட்டது