உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தோம்

ஆள்கூறுகள்: 13°01′49″N 80°16′43″E / 13.0302°N 80.2787°E / 13.0302; 80.2787
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தோம்
—  சுற்றுப்புறப் பகுதி  —
சாந்தோம்
அமைவிடம்: சாந்தோம், சென்னை , இந்தியா
ஆள்கூறு 13°01′49″N 80°16′43″E / 13.0302°N 80.2787°E / 13.0302; 80.2787
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3]
திட்டமிடல் முகமை சிஎம்டிஏ
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் சென்னை மாவட்ட வலைத்தளம்
சாந்தோம் பசிலிக்கா

சாந்தோம் (Santhome) சென்னையில் மைலாப்பூர் பகுதியில் உள்ள ஓர் சுற்றுப்புறப் பகுதியாகும். சான் தோம் என்ற சொற்கள் செயிண்ட் தாமசு என்ற கிறித்தவ புனிதரின் பெயரை ஒட்டி எழுந்தது. உள்ளூர் கிறித்தவர்களின் நம்பிக்கையின்படி இயேசு கிறித்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கி.பி 52ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். கி.பி 72ஆம் ஆண்டு சென்னையின் மற்றொரு சுற்றுப்புறப்பகுதியான செயிண்ட் தாமசு மவுண்ட் பகுதியில் உயிர்தியாகம் செய்து இங்கு அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதி மீது சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு இத்தாலிய உலகப்பயணி மார்கோ போலோ 1292ஆம் ஆண்டு வருகை புரிந்து தனது பயணக்குறிப்புகளில் பதிந்துள்ளார்.

இப்பகுதியில் பல கல்விக்கூடங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சில: ரோசரி மெட்ரிக்குலேசன் பள்ளி, செயிண்ட்.பீட் பள்ளி, சாந்தோம் இடைநிலைப் பள்ளி, செயிண்ட் ராஃபேல்சு பள்ளி மற்றும் டோமினிக் சாவியோ பள்ளி. சென்னை மறைப் பேராயரின் அலுவல்முறை குடியிருப்பும், மயிலாப்பூர் மறை பேராயமும் தேவாலயத்தை அடுத்து உள்ளது. உருசியா மற்றும் இசுப்பானிய நாட்டு துணைத் தூதரகங்களும் இங்கு உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

மேலும் பார்க்க

[தொகு]

சென்னை சாந்தோம் தேவாலயம்



"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தோம்&oldid=4141360" இலிருந்து மீள்விக்கப்பட்டது