உள்ளடக்கத்துக்குச் செல்

செரானைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரானைடீ
குரோமைலெப்டசு ஆல்டிவெலிசு (Cromileptes altivelis)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
செரானைடீ
துணைக் குடும்பம்

கட்டுரையில் பார்க்கவும்.

செரானைடீ (Serranidae) பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த பெரிய மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 64 பேரினங்களில் அடங்கிய 450 இனங்கள் உள்ளன. இவை பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. 110 மில்லிமீட்டர் (4.33 அங்குலம்) நீளம் கொண்ட சிறிய மீனான செரானசு சப்லிகேரியசு (Serranus subligarius) என்னும் இனத்திலிருந்து, 2.4 மீட்டர் (94.5 அங்குலம்) நீளம் வரை வளரக்கூடிய எப்பினெஃபெலசு இட்டாயாரா (Epinephelus itajara) வரையான இனங்கள் இக் குடும்பத்தில் உள்ளன.

இயல்புகள்

[தொகு]

ஒளி பொருந்திய நிறங்களைக் கொண்டுள்ள இக் குடும்ப மீன்களில் பல உணவுக்காக வணிக அடிப்படையில் பிடிக்கப்படுகின்றன. இவை, வெப்பவலய, துணை வெப்பவலயப் பகுதிக் கரையோரத் திட்டுகளின் மேல் காணப்படுகின்றன.

சில் இனங்கள் தவிர்ந்த செரனைடீ குடும்ப மீன்கள் அனைத்தும் ஊனுண்ணிகள். இவற்றுட் பல சிறிய மீன்களை உணவாகக் கொள்கின்றன. இவை மறைந்திருந்து உணவைத் தாக்குகின்றன. பவளத்திட்டுக்களில் மறைந்திருக்கும் இவை அவ்வழியே செல்லும் சிறிய மீன்களைப் பிடிக்கின்றன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]


வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரானைடீ&oldid=1352412" இலிருந்து மீள்விக்கப்பட்டது