உள்ளடக்கத்துக்குச் செல்

டெர்பியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்பியம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டெர்பியம் டிரையோடைடு, டெர்பியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
13813-40-6 Y
ChemSpider 75569
EC number 237-469-8
InChI
  • InChI=1S/3HI.Tb/h3*1H;/q;;;+3/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83747
  • I[Tb](I)I
பண்புகள்
TbI3
வாய்ப்பாட்டு எடை 539.638 கி/மோல்
தோற்றம் நீர் உறிஞ்சும் திறன் படிகங்கள்
அடர்த்தி 5.2 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 957 °C (1,755 °F; 1,230 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H317, H361
P201, P202, P261, P264, P271, P272, P280, P281, P302+352, P304+340, P305+351+338, P308+313, P312, P332+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

டெர்பியம்(III) அயோடைடு (Terbium(III) iodide) என்பது TbI3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

டெர்பியம் தனிமமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2]

2 Tb + 3 I2 → 2 TbI3

டெர்பியம்(III) ஆக்சைடு, டெர்பியம் ஐதராக்சைடு அல்லது டெர்பியம் கார்பனேட்டு ஆகியவற்றுடன் ஐதரயோடிக் அமிலத்தை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் கரைசலில் இருந்து டெர்பியம் அயோடைடு நீரேற்றை படிகமாக்க முடியும்:

2 Tb + 6 HI → 2 TbI3 + 3 H2↑
Tb2O3 + 6 HI → 2 TbI3 + 3 H2O
2 Tb(OH)3 + 6 HI → 2 TbI3 + 3 H2O
Tb2(CO3)3 + 6 HI → 2 TbI3 + 3 H2O + 3 CO2

டெர்பியம் மற்றும் பாதரச(II) அயோடைடை 500 ° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து டெர்பியம்(III) அயோடைடு தயாரிப்பதும் ஒரு மாற்று வழிமுறையாகும்.[3]

கட்டமைப்பு

[தொகு]

டெர்பியம்(III) அயோடைடு சேர்மமானது பிசுமத்(III) அயோடைடு (BiI3) படிக கட்டமைப்பு வகையை ஏற்றுக்கொள்கிறது.[4][3] ஒவ்வொரு Tb3+ அயனியும் 6 அயோடைடு அயனிகளுடன் இணைந்து எண்முக ஒருங்கிணைப்பு காணப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Terbium iodide (TbI3)". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. WebElements: Chemical reactions of the element Terbium
  3. 3.0 3.1 Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. (1964). "Preparation and Crystal Data for Lanthanide and Actinide Triiodides". Inorg. Chem. 3 (8): 1137–1141. doi:10.1021/ic50018a015. https://digital.library.unt.edu/ark:/67531/metadc867868/. 
  4. Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford University Press. p. 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965763-6.
  5. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1240–1241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பியம்(III)_அயோடைடு&oldid=3893954" இலிருந்து மீள்விக்கப்பட்டது