பிசுமத்(III) அயோடைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பிசுமத்(III) அயோடைடு
| |
வேறு பெயர்கள்
பிசுமத் அயோடைடு, பிசுமத் மூவயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
7787-64-6 | |
ChemSpider | 21172753 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24860889 |
| |
பண்புகள் | |
BiI3 | |
வாய்ப்பாட்டு எடை | 589.69 கி/மோல் |
தோற்றம் | பசுமையும் கருப்புமான படிகங்கள் |
அடர்த்தி | 5.778 கி/செ.மீ3 |
உருகுநிலை | 408.6 °C (767.5 °F; 681.8 K) |
கொதிநிலை | 542 °C (1,008 °F; 815 K) |
0.7761 மி.கி/100 மி.லி (20 °செ) | |
கரைதிறன் | 50 கி/100 மி.லி எத்தனால் 50 கி/100 மி.லி 2M ஐதரோகுளோரிக் அமிலம் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம், hR24 |
புறவெளித் தொகுதி | R-3, No. 148 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | அரிக்கும் (C) |
R-சொற்றொடர்கள் | R34 |
S-சொற்றொடர்கள் | S26, S27, S36/37/39, S45[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிசுமத்(III) புளோரைடு பிசுமத்(III) குளோரைடு பிசுமத்(III) புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நைட்ரசன் மூவயோடைடு பாசுபரசு மூவயோடைடு ஆண்டிமனி மூவயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிசுமத்(III) அயோடைடு (Bismuth(III) iodide) என்பது BiI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத் மற்றும் அயோடின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சாம்பல் கலந்த கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. முன்னர் இச்சேர்மம் பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்பட்டது[2] [3]. அறுகோணப் பக்க நெருக்கப் பொதிவு அணிக்கோவையில் நிரம்பியுள்ள அயோடைடு மையங்கள், மற்றும் மூன்றில் இரண்டு பங்கு எண்முக இடைவெளிகளில் நிரப்பியுள்ள பிசுமத் மையங்கள் ஆகியவற்றால் ஆன தெளிவான படிக அமைப்பை பிசுமத்(III) அயோடைடு ஏற்றுள்ளது[4] [5]
தயாரிப்பு
[தொகு]பிசுமத் தூள் மற்றும் அயோடினின் நெருங்கிய கலவையை சூடுபடுத்துவதால்:[6] பிசுமத்(III) அயோடைடு உண்டாகிறது.
- 2Bi + 3I2 → 2BiI3
பிசுமத் ஆக்சைடை நீர்த்த ஐதரோ அயோடிக் அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்துவதாலும் இதைத் தயாரிக்கலாம்:[7]
- Bi2O3(s) + 6HI(aq) → 2BiI3(s) + 3H2O(l)
வினைகள்
[தொகு]பிசுமத்(III) அயோடைடு தண்ணீரில் கரைவதில்லை. இதனுடைய நீர்த்த கரைசலில் Bi3+ அயனிகள் உள்ளனவா என்பதை அயோடின் மூலமான பொட்டாசியம் அயோடைடைச் சேர்த்து சோதித்து அறிய முடியும். கருப்புநிற வீழ்படிவு தோன்றினால் கரைசலில் Bi3+ அயனிகள் இருப்பு உறுதிப்படுத்தப்படுகிறது[8].
ஆலைடு வழங்கிகளுடன் சேர்த்து பிசுமத்(III) அயோடைடைச் சூடுபடுத்தினால் அயோடோ பிசுமத்(III) எதிர்மின் அயனிகள் உருவாகின்றன:[9]
- 2 NaI + BiI3 → Na2[BiI5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "341010 Bismuth(III) iodide 99%". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2008-06-19.
- ↑ "Bismuth iodide", McGraw-Hill Dictionary of Scientific and Technical Terms, McGraw-Hill, 2003, பார்க்கப்பட்ட நாள் 2008-06-19
- ↑ Turner, Jr., Francis M.; Berolzheimer, Daniel D.; Cutter, William P.; Helfrich, John (1920), The Condensed Chemical Dictionary, New York: Chemical Catalog Company, p. 107, பார்க்கப்பட்ட நாள் 2008-06-19
- ↑ Smart, Lesley; Moore, Elaine A. (2005), Solid State Chemistry: An Introduction, CRC Press, p. 40, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7487-7516-1, பார்க்கப்பட்ட நாள் 2008-06-19
- ↑ Mackay, Rosemary Ann; Henderson, W. (2002), Introduction to Modern Inorganic Chemistry, CRC Press, pp. 122–6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7487-6420-8, பார்க்கப்பட்ட நாள் 2008-06-19
- ↑ Erdmann, Hugo; Dunlap, Frederick Leavy (1900), Handbook of Basic Tables for Chemical Analysis, New York: John Wiley & Sons, p. 76, பார்க்கப்பட்ட நாள் 2008-06-19
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 559. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Bruno, Thomas J.; Svoronos, Paris D. N. (2003), Handbook of Basic Tables for Chemical Analysis, CRC Press, p. 549, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-1573-5, பார்க்கப்பட்ட நாள் 2008-06-19
- ↑ Norman, Nicholas C. (1998), Chemistry of Arsenic, Antimony and Bismuth, Springer, pp. 168–70, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7514-0389-X, பார்க்கப்பட்ட நாள் 2008-06-19