தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்
உயிர்கோளக் காப்பகம் | தேசிய பூங்கா | வனஉயிரின உய்விடம் | பறவைகள் காப்பகம் | விலங்கியல் பூங்கா |
---|
தமிழ் நாட்டில் பாதுகாக்கப்பட்ட இடங்கள் ஏறத்தாழ 3,305 கிலோமீட்டர்களாகும். இது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 2.54% ஆகும். மொத்த காடுகளின் பரப்பளவு 22,643 சதுர கிலோமீட்டர்களாகும். இது தமிழ்நாட்டின் பரப்பளவில் 15% ஆகும். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் நில அளவை மாநில வாரியாக வரிசைபடுத்தினால் தமிழ் நாடு 14வது இடத்தில் உள்ளது.[2]
தமிழ் நாட்டில் முக்கியமான பாதுகாக்கப்பட்ட இடங்கள் பின்வருவன: 3 உயிர்கோள காப்பகங்கள், 5 தேசிய பூங்காகள், 8 வனஉயிரின உய்விடம், 4 யானை காப்பகங்கள், 5 புலிகள் காப்பகங்கள், 12 பறவைகள் காப்பகங்கள் ஆகும். இவ்வனைத்து பாதுகாக்கப்பட்ட இடங்களிலும் மிகவும் அழிவுறும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கும் வனவிலங்கள் வாழ்கின்றன.
வரலாறு
[தொகு]தென் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட இடங்களை தேர்வு செய்வதும், பின் அதை காப்பதும் பிரித்தானியர்களின் வருகைக்கு பின்பே நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழ் நாட்டின் முதல்பாதுகாக்கப்பட்ட இடமாக முதுமலை வனவிலங்கு சரணாலயம் 1940ல் அறிவிக்கப்பட்டது.
தாவரங்கள் (நிலைத்திணை)
[தொகு]இந்தியாவில் மொத்தம் காணப்படும் 17,672 வித்துமூடித் தாவர சிற்றினங்களில் 5640 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகிறன, இது இந்தியாவின் மொத்த தாவரங்களில் 32 % சதவீதமாகும். தமிழகத்தில் 533 அகணிய (உள்ளெல்லைக்குரிய) தாவரங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.தமிழ் நாட்டில் 4 வித்துமூடியிலி தாவரங்களும் உண்டு. இந்தியாவில் உள்ள 1022 பன்னத்தாவர இனத்தில் தமிழ் நாட்டில் 184 சிற்றினங்கள் உள்ளன.[3]
விலங்குகள்
[தொகு]தமிழ் நாட்டில் காணப்படும் முக்கிய விலங்கினங்கள் பின்வருவன[4]:
- மீன்கள்: 126 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: ?)
- ஈரூடகவாழ்விகள்:76 (அகணிய உயிரிகள்: 36)
- பறவைகள்: 454 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 17)
- பாலூட்டிகள்: 187 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 24)
- ஊர்வன: 177 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 63)
உயிரிக்கோளங்கள்
[தொகு]- மன்னார் வளைகுடா உயிரிக்கோளம் - உலக உயிரிக்கோளங்களில் ஒன்றாக, 1989 ஆம் ஆண்டு, இது 10,500 km2 (4,100 sq mi) பரப்பளவு கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இவ்வளைகுடா, இந்தியஇலங்கை நாடுகளின் கடற்கரைகளுக்கிடையே அமைந்துள்ளது.
- நீலகிரி பல்லுயிர் வலயம் - இவ்வுயிரிக்கோளம் 5,520 km2 (2,130 sq mi) பரப்பளவை உடையதாக அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் இது மூன்று இந்திய மாநில எல்லைகளுக்குள் அமைந்துள்ளதே ஆகும். இதன் மொத்த பரப்பளவில் 2,537.6 km2 (979.8 sq mi) பரப்பளவு தமிழ்நாட்டிலும், 1,527.4 km2 (589.7 sq mi) பரப்பளவு கருநாடகத்திலும், 1,455.4 km2 (561.9 sq mi) பரப்பளவு கேரளத்திலும் அமைந்துள்ளன.
- அகத்தியமலை உயிரிக்கோளம் - இது 2001 ஆண்டு, 3,500.36 km2 (1,351.50 sq mi) பரப்பளவு கொண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இது யுனெஸ்கோவின் மனிதனும், உயிரிக்கோளமும் திட்டம் என்பதில் அறிவிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது.[5]
தேசியப் பூங்கா
[தொகு]தமிழ்நாடு 307.84 km2 (118.86 sq mi) பரப்பளவில் ஆறு தேசியப் பூங்காக்களை கொண்டுள்ளது.[6]
எண் | பூங்கா | பரப்பளவு | நிறுவப்பட்ட ஆண்டு |
---|---|---|---|
1 | இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா முன்பு ஆனைமலை தேசியப் பூங்கா என்றழைக்கப்பட்டது | 117.10 km2 (45.21 sq mi) | 1989 |
2 | முதுமலை தேசியப் பூங்கா | 103.24 km2 (39.86 sq mi) | 1990 |
3 | முக்கூர்த்தி தேசியப் பூங்கா | 78.46 km2 (30.29 sq mi) | 1982 |
4 | மன்னார் வளைகுடா | 6.23 km2 (2.41 sq mi) | 1980 |
5 | கிண்டி தேசியப் பூங்கா | 2.82 km2 (1.09 sq mi) | 1976 |
6 | கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் | [6] |
வனவிலங்கு சரணாலயங்கள்
[தொகு]தமிழ்நாட்டிலுள்ள பாதுகாக்கப்படும் இடங்கள்:[6]
எண் | பூங்கா | பரப்பளவு | நிறுவப்பட்ட ஆண்டு |
---|---|---|---|
1 | ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் | 485 km2 (187 sq mi); | giant squirrel sanctuary near Srivilliputhur |
2 | ஆனைமலை புலிகள் காப்பகம் | ||
3 | களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் | 223.58 km2 (86.32 sq mi) | |
4 | கன்னியாகுமரி காட்டுயிர் உய்விடம் | 457.78 km2 (176.75 sq mi) | |
5 | முதுமலை தேசியப் பூங்கா | 217.76 km2 (84.08 sq mi); | overlaps with Mudumalai National Park |
6 | சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் | ||
7 | வல்லநாடு வெளிமான் காப்பகம் | ||
8 | கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் | ||
9 | மேகமலை வனவிலங்கு சரணாலயம் | ||
10 | கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் | ||
11 | கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் | ||
12 | காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயம் | ||
13 | நெல்லை வனவிலங்கு சரணாலயம்[6] |
யானைகள் காப்பகம்
[தொகு]தமிழ்நாடு யானைகள் திட்டம் என்ற திட்டத்தில் பங்கேற்றுள்ளது மற்றும் நான்கு யானைகள் சரணாலயத்தினை கொண்டுள்ளது.
எண் | காப்பகம் | பரப்பளவு | பாதுகாக்கப்பட்ட பகுதி | நிறுவ. ஆண்டு |
---|---|---|---|---|
1 | நீலகிரி யானை காப்பகம் | 4,663 km2 (1,800 sq mi) | 716 km2 (276 sq mi) | 2003 |
2 | கோயம்புத்தூர் யானை காப்பகம் | 566 km2 (219 sq mi) | 482 km2 (186 sq mi) | 2003 |
3 | ஆனைமலை யானை காப்பகம் | 1,457 km2 (563 sq mi) | 300 km2 (120 sq mi) | 2003 |
4 | சிறீவில்லிபுத்தூர் யானை காப்பகம் | 1,249 km2 (482 sq mi) | 568 km2 (219 sq mi) | 2002 |
பறவைகள் சரணாலயம்
[தொகு]எண் | காப்பகம் | பரப்பளவு | நிறுவ. ஆண்டு | பார்வையிட தகுந்த பருவம் | |
---|---|---|---|---|---|
1 | சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் | .48 km2 (0.19 sq mi) | 1989 | ஆண்டு முழுவதும் | |
2 | கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் | 1.04 km2 (0.40 sq mi) | 1989 | அக் - பிப் | |
3 | கரைவெட்டி பறவைகள் காப்பகம் | 4.54 km2 (1.75 sq mi) | 1989 | ||
4 | கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் | 1.2933 km2 (0.4993 sq mi) | 1994 | டிச - ஜீன்/ஜீலை | |
5 | மேலசெல்வனூர்-கீழசெல்வனூர் பறவைகள் புகலிடம் | 5.93 km2 (2.29 sq mi).[7] | 1998 | ||
6 | கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் | 17.26 km2 (6.66 sq mi) | 1987 | அக்-ஜன (பறவை) / மா-ஆக (விலங்கு) | |
7 | பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம் | 461.02 km2 (178.00 sq mi) | 1976 | ||
8 | உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் | .45 km2 (0.17 sq mi) | 1999 | ||
9 | வடுவூர் பறவைகள் காப்பகம் | 1.28 km2 (0.49 sq mi) | 1999 | ||
10 | வேடந்தாங்கல் | .3 km2 (0.12 sq mi) | 1936 | ||
11 | வெள்ளோடு பறவைகள் சரணாலயம் | .772 km2 (0.298 sq mi) | 1996 | ||
12 | வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் | .344 km2 (0.133 sq mi) | 1977 | ||
13 | சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் | 2002 | |||
14 | விராலிமலை மயில் சரணாலயம்[8] | ||||
15 | கள்ளபெரம்பூர் ஏரி தஞ்சாவூர் அருகே | 2015 | |||
16 | கரிக்கிலி பறவைகள் சரணாலயம் | 1988 | |||
17 | நஞ்சராயன் குளம் | 2022 |
பாதுகாக்கப்பட்ட சமூக காப்பகம்
[தொகு]மிருககாட்சி
[தொகு]மத்திய மிருககாட்சி ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு மிருககாட்சி சாலைகள் தமிழ்நாட்டிலுள்ளது. இது தவிர சிறிய மிருககாட்சி சாலைகளும் உள்ளன.
எண் | காப்பகம் | பரப்பளவு | நிறுவ. ஆண்டு |
---|---|---|---|
1 | அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா | 5.10 km2 (1.97 sq mi) | 1855 |
2 | சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை[9] | 1976 |
முதலை பண்ணை
[தொகு]தமிழ்நாட்டிலுள்ள ஐந்து முதலைப் பண்ணைகள்:
- அமராவதி முதலைப் பண்ணை, கோயம்புத்தூர் மாவட்டம்
- ஓகேனக்கல் (கிராமம்) முதலைப் பண்ணை, தர்மபுரி மாவட்டம்
- குரும்பாபட்டி முதலைப் பண்ணை, சேலம் மாவட்டம்
- சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை, சென்னை
- சாத்தனூர் அணை முதலைப் பண்ணை, திருவண்ணாமலை மாவட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Forest Dept.Eco-Tourism பரணிடப்பட்டது 2017-04-21 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Tamil Nadu Forest Dept. Wild Biodiversity பரணிடப்பட்டது 2017-05-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Tamil Nadu Forest Dept.Floral Diversity பரணிடப்பட்டது 2017-05-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Tamil Nadu Forest Dept., Retrieved 9/9/2007 Faunal Diversity பரணிடப்பட்டது 2017-05-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Tamil nadu Forest Dept., Retrieved 9/9/2007 Biosphere Reserves பரணிடப்பட்டது 2012-11-22 at the வந்தவழி இயந்திரம் (MAB=Man and the Biosphere Programme)
- ↑ 6.0 6.1 6.2 6.3 "Bio-Diversity and Wild Life in Tamil Nadu". ENVIS Centre. பார்க்கப்பட்ட நாள் 15 March 2018.
- ↑ Migratory birds flock to Vettangudi Sanctuary, The Hindu, 9/11/2005, Hinduonnet.com, Vettangudi
- ↑ Rural Development and Panchayat Raj (PR.2) Department, G.O. (Ms) No.19, Dated: 23.1.2008 TNRD.gov.in, Declaring Viralimalai as a heritage place
- ↑ Tamil Nadu Forest Dept. Zoos பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்