நிகழ்வெல்லை
Appearance
பொதுச் சார்புக் கோட்பாட்டில், ஒரு நிகழ்வெல்லை (event horizon) என்பது, வெளிநேரத்தின் (spacetime) எல்லையான, கருங்குழி ஒன்றைச் சூழவுள்ள ஒரு பகுதியாகும். இதற்கு அப்பால் நிகழ்வுகள் எதுவும் வெளியிலிருந்து பார்க்கும் எவரையும் பாதிப்பது இல்லை. இவ்வெல்லைக்கு உள்ளிருந்து உருவாகக் கூடிய ஒளி வெளியிலிருக்கும் பார்வையாளரை அடைய முடியாது என்பதுடன், பார்வையாளரின் பக்கமிருந்து எல்லைக்குள் செல்லும் எதுவும் திரும்பி வரவும் முடியாது.
மிகவும் சிறப்புத் தன்மையான ஆனால் தொடர்புடைய இவ்வாறான எல்லைகள் கருங்குழிகளைச் சூழவுள்ள, தனி எல்லைகளும் (Absolute horizon), தோற்ற எல்லைகளும் (apparent horizon) ஆகும்.