பஞ்சு அருணாசலம்
பஞ்சு அருணாசலம் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, காரைக்குடி, சிறுகூடல்பட்டி[1] | 18 சூன் 1941
இறப்பு | ஆகத்து 9, 2016 சென்னை, இந்தியா | (அகவை 75)
பணி | தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1965-2016 |
வாழ்க்கைத் துணை | மீனா |
பிள்ளைகள் | சுப்பு பஞ்சு, சண்முகம், கீதா, சித்ரா |
பஞ்சு அருணாசலம் (Panchu Arunachalam, 18 சூன் 1941 – 9 ஆகத்து 2016) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதற்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது.[2] கவிஞர் கண்ணதாசன் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின.[3] பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம். [4] மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு, நடிகர் சுப்பு ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ஏ.எல்.எஸ். ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து, தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். செட் போடுவதற்கான பொருளை எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்தவுடன் வாங்கி வைக்கும் வேலை.[3]
பணி
[தொகு]அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். சுப. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார்.[4]. விரைவில் வெளிவரவிருக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல்களை எழுதியதே, இவரின் இறுதி பாடலாசிரியர் பணியாகும்[5]. இவர் கதை - வசனம் எழுதி தயாரித்த, ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு, சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருதை இவர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு[6]
இயற்றிய சில பாடல்கள்
[தொகு]வரிசை எண் | ஆண்டு | திரைப்படம் | பாடல் | பாடியவர்கள் | இசையமைப்பாளர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
1 | 1963 | ஏழை பங்காளன் | தாயாக மாறவா | |||
2 | 1963 | நானும் ஒரு பெண் | பூப்போல பூப்போல பிறக்கும் | |||
3 | 1965 | கலங்கரை விளக்கம் | பொன்னெழில் பூத்தது | டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா | எம். எஸ். விஸ்வநாதன் | |
4 | 1978 | காற்றினிலே வரும் கீதம் | ஒருவானவில் போலே என் | |||
5 | 1979 | ஆறிலிருந்து அறுபது வரை | கண்மணியே காதல் என்பது | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா | |
6 | 1984 | தம்பிக்கு எந்த ஊரு | காதலின் தீபமொன்று ஏற்றினாளே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | இளையராஜா | |
7 | 1989 | மாப்பிள்ளை | மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா | |
8 | 1976 | அன்னக்கிளி | திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் | இளையராஜா |
இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]- இளைய தலைமுறை (1977)
- என்ன தவம் செய்தேன் (1977)
- சொன்னதை செய்வேன் (1977)
- நாடகமே உலகம் (1979)
- மணமகளே வா (1988)
- புதுப்பாட்டு (1990)
- கலிகாலம் (1992)
- தம்பி பொண்டாட்டி (1992)
தயாரித்த திரைப்படங்கள்
[தொகு]- ஆறிலிருந்து அறுபது வரை (1979)
- கல்யாணராமன் (1979)
- எங்கேயோ கேட்ட குரல் (1982)
- ஆனந்த ராகம் (1982)
- ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
- குரு சிஷ்யன் (1988)
- மைக்கேல் மதன காமராஜன் (1991)
- ராசுக்குட்டி (1992)
- தம்பி பொண்டாட்டி (1992)
- வீரா (1994)
- பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
- ரிஷி (2001)
- சொல்ல மறந்த கதை (2002)
- மாயக் கண்ணாடி (2007)
- காதல் சாம்ராஜ்ஜியம் (வெளிவரவில்லை)
எழுத்தாளர் என்ற வகையில்
[தொகு]- ரிஷி (2001)
- மாயா பஜார் 1995 (1995)
- தொட்டில் குழந்தை (1995)
- சிங்கார வேலன் (1992)
- தம்பி பொண்டாட்டி (1992)
- எங்கிட்ட மோதாதே (1990)
- புதுப்பாட்டு (1990)
- அபூர்வ சகோதரர்கள் (1989)
- ராஜா சின்ன ரோஜா (1989)
- மணமகளே வா (1988)
- குரு சிஷ்யன் (1988)
- என் ஜீவன் பாடுது (1988)
- தர்மத்தின் தலைவன் (1988)
- நீதானா அந்தக்குயில் (1986)
- உயர்ந்த உள்ளம் (1985)
- ஜப்பானில் கல்யாண ராமன்(1985)
- தம்பிக்கு எந்த ஊரு (1984)
- குவா குவா வாத்துகள் (1984)
- வாழ்க்கை (1984)
- தூங்காதே தம்பி தூங்காதே (1983)
- மண்வாசனை (1983)
- பாயும் புலி (1983)
- எங்கேயோ கேட்ட குரல் (1982)
- சகலகலா வல்லவன் (1982)
- மகனே மகனே (1982)
- எல்லாம் இன்பமயம் (1981)
- மீண்டும் கோகிலா (1981)
- கடல் மீன்கள் (1981)
- முரட்டுக் காளை (1980)
- உல்லாசப்பறவைகள் (1980)
- ஆறிலிருந்து அறுபது வரை (1979)
- கல்யாணராமன் (1979)
- கௌரிமான் (1979)
- வெற்றிக்கு ஒருவன் (1979)
- வட்டத்துக்குள் சதுரம் (1978)
- புவனா ஒரு கேள்விக்குறி (1977)
- துணிவே துணை (1976)
- மயங்குகிறாள் ஒரு மாது (1975)
பாடலாசிரியர் பணி
[தொகு]1960களில்
[தொகு]- 1960- தெய்வ பிறவி
- 1963- ஆசை அலைகள்
- 1965- கலங்கரை விளக்கம்
1970களில்
[தொகு]- 1975- மயங்குகிறாள் ஒரு மாது
- 1976- அன்னக்கிளி
- 1977- புவனா ஒரு கேள்விக்குறி
- 1977- காயத்ரி
- 1977- ஆடு புலியாட்டம்
- 1978- முள்ளும் மலரும்
- 1978- வட்டத்துக்குள் சதுரம்
- 1978- பிரியா
- 1979- கௌரிமான்
- 1979- வெற்றிக்கு ஒருவன்
- 1979- ஆறிலிருந்து அறுபதுவரை
- 1979- கவிக்குயில்
- 1979- பூந்தளிர்
1980களில்
[தொகு]- 1980- குரு
- 1980- உல்லாசப் பறவைகள்
- 1980- முரட்டுக்காளை
- 1980- நெஞ்சத்தைக் கிள்ளாதே
- 1980- அன்புக்கு நான் அடிமை
- 1981- அலைகள் ஓய்வதில்லை
- 1981- கர்ஜனை
- 1981- கழுகு
- 1981- சங்கர்லால்
- 1981- எல்லாம் இன்பமயம்
- 1981- கடல்மீன்கள்
- 1981- மீண்டும் கோகிலா
- 1982- கோபுரங்கள் சாய்வதில்லை
- 1982- ராணி தேனி
- 1982- எங்கேயோ கேட்ட குரல்
- 1983- கோழி கூவுது
- 1983- ஆனந்தக்கும்மி
- 1983- அடுத்த வாரிசு
- 1983- மண்வாசனை
- 1984- அம்பிகை நேரில் வந்தாள்
- 1984- தம்பிக்கு எந்த ஊரு
- 1984- வைதேகி காத்திருந்தாள்
- 1984- வாழ்க்கை
- 1985- புதிய தீர்ப்பு
- 1985- மனக்கணக்கு
- 1986- நீதானா அந்தக்குயில்
- 1987- உள்ளம் கவர்ந்த கள்வன்
- 1988- மணமகளே வா
- 1988- தர்மத்தின் தலைவன்
- 1989- மாப்பிள்ளை
1990களில்
[தொகு]- 1990- புதுப்பாட்டு
- 1991- தர்மதுரை
- 1993- சின்னக்கண்ணம்மா
- 1994- வியட்நாம் காலணி
- 1995- மாயா பஜார் 1995
2000த்தில்
[தொகு]- 2001- ரிஷி
கவியரசர் கண்ணதாசனுக்கு பாடல் உதவி
[தொகு]- புன்னகை
- தேனும் பாலும்
- ஆண்டவன் கட்டளை
- சங்கே முழங்கு
- பெரிய இடத்துப் பெண்
- தாயைக்காத்த தனயன்
- பழனி
- சபதம்
- மணி ஓசை
- காவியத் தலைவி
மறைவு
[தொகு]பஞ்சு அருணாசலம் தனது 75 வது அகவையில் சென்னையில் 2016 ஆகத்து 9 அன்று காலமானார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://cinema.maalaimalar.com/2013/11/18224845/panchu-arunachalam-introduce-i.html
- ↑ "திரை உலகுக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம்". Archived from the original on 2014-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-06-29.
- ↑ 3.0 3.1 பஞ்சு அருணாசலம் (20 ஏப்ரல் 2016). திரைத்தொண்டர். ஆனந்தவிகடன். pp. 76–78.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ 4.0 4.1 "சினிமா எடுத்துப் பார் 70: பஞ்சு அருணாசலம்- எல்லாமுமாக வாழ்ந்தவர்!". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 17, 2016.
- ↑ "பிரபல தமிழ் திரைப்பட கதாசிரியர் பஞ்சு அருணாசலம் காலமானார்". பிபிசி தமிழ். பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 17, 2016.
- ↑ "பிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!". விகடன். பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 17, 2016.
- ↑ "Panchu Arunachalam passes away". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2016.