பரோ விமான நிலையம்
Appearance
பரோ விமான நிலையம் (ஐஏடிஏ: PBH, ஐசிஏஓ: VQPR), பூட்டானில் அமைந்துள்ள ஒரே பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இது பரோ சூ ஆற்றங்கரையை ஒட்டிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்நிலையம் மலைகளால் சூழப்பட்டுள்ளதாலும், சிறிய ஓடுபாதையைக் கொண்டுள்ளதாலும், இங்கு விமானங்களை தரையிறக்குவதும் பறப்பதும் கடினமானதாகும். இதனால் வெகு சில வானூர்தி ஓட்டுநர்களுக்கு மட்டும் இங்கு வானூர்தியை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையால் பகல் நேரத்தில் மட்டும் இங்கு வானூர்திகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது[1]. தட்பவெட்ப நிலை கண்காணிக்கப்பட்டே விமானங்கள் தரையிறக்க அனுமதிக்கப்படும்.
பரோ நகரத்தில் இருந்து சாலை வழியாக ஆறு கி.மீ பயணித்து இந்நிலையத்தை அடையலாம். திம்புவில் இருந்து 54 கி.மீ பயணித்தும் வந்து சேரலாம்.
வானூர்திகளும் சேரும் நிலையங்களும்
[தொகு]பயணியர் விமானங்கள்
[தொகு]விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
பூட்டான் ஏர்லைன்ஸ் | பாங்காக், தில்லி, காட்மண்டூ, கல்கத்தா |
ட்ரூக் ஏர் | பாக்டோக்ரா பாங்காக், தில்லி, தாக்கா, காட்மண்டூ, கெலெபூ, கல்கத்தா, குவாஹாட்டி, ஜகர், மும்பை, சிங்கப்பூர், அகமதாபாத், துபாய். |
சான்றுகள்
[தொகு]- ↑ "Paro Bhutan". Air Transport Intelligence. Reed Business Information. 2011. Archived from the original on 7 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 12 February 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Paro Airport தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- BBC World feature on landing at Paro Airport
- உலக ஏரோ தரவுத்தளத்தில் VQPR குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.