உள்ளடக்கத்துக்குச் செல்

பர்தோபெலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்தோபெலிசு
பர்தோபெலிசு மர்மோரேட்டா வரைபடம்[1]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பர்தோபெலிசு

செவெர்ட்சூவ், 1858
சிற்றினம்
  • பர்தோபெலிசு மர்மோரேட்டா
பளிங்குப்பூனை பரவல்

பர்தோபெலிசு (Pardofelis) என்பது பெலிடே பூனை குடும்பத்தின் ஒரு சிற்றினமாகும்.[2] இந்த சிற்றினமானது தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு சிற்றினத்தை மட்டும் உள்ளடக்கியதாக வரையறுக்கப்படுகிறது. இச்சிற்றினம் பளிங்குப் பூனை ஆகும்.[3] இந்த பேரினத்தில் கீழ் தற்பொழுது கேட்டோபுமா பேரினத்தில் வகைப்பட்டுள்ள இரண்டு சிற்றினங்களும் இருந்தன.

பர்தோபெலிசு என்ற சொல் இலத்தீன் வார்த்தைகளான பார்டசு சிறுத்தைப்புலி மற்றும் பெலிசு பூனை ஆகியவற்றால் ஆனது. இது பளிங்குப் பூனையினை மாதிரி இனமாகப் புள்ளிகளின் அடிப்படையில் குறிக்கிறது.[4]

வகைப்பாட்டியல் வரலாறு

[தொகு]

1858ஆம் ஆண்டில் உருசிய ஆய்வாளரும் இயற்கை ஆர்வலருமான நிகோலாய் செவர்ட்ஸோவ் என்பவரால் பர்தோபெலிசு முதன்முதலில் முன்மொழியப்பட்டது. இது வெப்பமண்டல ஆசியாவில் பளிங்குப் பூனை உள்ளடக்கிய பேரினப் பெயராக இருந்தது.[5] பிரித்தானிய விலங்கியல் நிபுணர் ரெஜினால்ட் இன்னசு போகாக் 1917ஆம் ஆண்டில் பார்தோபெலிசின் வகைப்பாட்டியலை அங்கீகரித்தார். இது பளிங்கு பூனை மட்டுமல்ல, போர்னியோ விரி குடா பூனை பார்தோபெலிசு படியாவையும் உள்ளடக்கியது. ஏனெனில் இவற்றின் மண்டை ஓடுகளின் வடிவத்தில் ஒற்றுமைகள் உள்ளன.[2] 1939ஆம் ஆண்டில், சாவகம், சுமாத்திரா ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் கிடைத்த தோல்கள் மற்றும் மண்டை ஓடுகளின் அடிப்படையில் பார்தோபெலிசு மர்மோராட்டாவை விவரித்தார்.

2006 வரை, பர்தோபெலிசின் வகைப்பாடு ஒற்றை சிற்றின பேரினமாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வு போர்னியோ விரி குடா பூனை பர்தோபெலிசு பாடியா மற்றும் ஆசிய தங்கப் பூனை பர்தோபெலிசு தெம்மின்கியுடன் நெருங்கிய மரபணு உறவை வெளிப்படுத்தியது. இவை அனைத்தும் மற்ற பூனைக்குடுத்திலிருந்து சுமார் 9.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. எனவே பார்தோபெலிசு பேரினத்தில் வைக்க முன்மொழியப்பட்டது.[3] இதற்கிடையில், பார்தோபெலிசு என்பது கேடோபுமாவின் ஒத்ததாகக் கருதப்படுகிறது.

இந்த கிளைக்கும் பூனை குடும்பத்தில் உள்ள மற்ற உயிரினங்களுக்கும் இடையிலான உறவும் தெளிவாகிவிட்டது. பர்தோபெலிசு சிற்றினங்கள் பாந்தெரினே துணைக் குடும்பத்திலிருந்து தோன்றவில்லை. ஆனால் பெரும்பாலும் சிறிய பூனை இனங்களான பெலினேயின் மற்ற முக்கிய கிளையைச் சேர்ந்தவை. தற்போதுள்ள வேறு எந்த பூனை இனத்தையும் விடச் சேர்வால், கறகால் பூனை மற்றும் ஆப்பிரிக்கப் பொன்னிறப் பூனைகளுடன் மிகவும் சமீபத்திய பொதுவான மூதாதையரைப் பகிர்ந்து கொள்கின்றன.[3][6][7]

சிறப்பியல்புகள்

[தொகு]

பர்தோபெலிசு பேரினத்தினைச் சார்ந்த உயிரிகள் சிறிய நீண்ட வாலுடன், குட்டையான தலையுடன் வட்டமான காதுகளுடன் கூடியன. பிரியோனிலூரசு மற்றும் தொடர்புடைய கிழக்கத்திய வகைகளிலிருந்து வேறுபடுகின்றன. இவற்றின் மண்டை ஓடு உயரமாகவும் வட்டமாகவும் இருக்கும். நடு இறக்கையுருஎன்பு குழிவு ஈட்டி வடிவத்துடன், தடிமனான விளிம்புகள் அல்லது சிறந்த வெளிப்புற முகடுகளுடன் உள்ளன.[2] மண்டை ஓடு குறுகியது, அகலமானது, முதுகுப் பகுதியில் வலுவாகக் குவிந்துள்ளது, ஒப்பீட்டளவில் நீளமாகவும் குறைவாகவும் இல்லை. முன் மேற்றாடை எலும்பின் நாசிக் கிளை மெல்லியதாக உள்ளது. விரிவடையவில்லை, முகவாய் உச்சி மேலே சுருக்கப்படவில்லை, மேல்தாடை எலும்பு மூச்செலும்பிற்கு எதிராக இருக்கும் இடத்தில் விரிவடையாது. மேலும் கட்குழியின் கீழ் எலும்புத் துளை காணப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lydekker, R. (1896). A Handbook to the Carnivora: part 1: Cats, Civets, and Mongooses. Edward Lloyd Limited, London
  2. 2.0 2.1 2.2 Pocock, R. I. (1917). "The classification of the existing Felidae". Annals and Magazine of Natural History. Series 8 XX (119): 329–350. doi:10.1080/00222931709487018. https://archive.org/stream/annalsmagazineof8201917lond#page/338/mode/2up. 
  3. 3.0 3.1 3.2 Johnson, W. E.; Eizirik, E.; Pecon-Slattery, J.; Murphy, W. J.; Antunes, A.; Teeling, E.; O'Brien, S. J. (2006). "The Late Miocene Radiation of Modern Felidae: A Genetic Assessment". Science 311 (5757): 73–77. doi:10.1126/science.1122277. பப்மெட்:16400146. Bibcode: 2006Sci...311...73J. https://zenodo.org/record/1230866. 
  4. Palmer, T. S.; Merriam, C. H. (1904). Index generum mammalium: a list of the genera and families of mammals. Government Printing Office, Washington.
  5. Severtzow, M. N. (1858). "Notice sur la classification multisériale des Carnivores, spécialement des Félidés, et les études de zoologie générale qui s'y rattachent". Revue et Magasin de Zoologie Pure et Appliquée. 2 Séptembre: 385–396. https://archive.org/stream/revueetmagasinde10soci#page/386/mode/2up. 
  6. O'Brien, S.J.; Johnson, W.E. (2005). "Big cat genomics". Annual Review of Genomics and Human Genetics 6 (1): 407–429. doi:10.1146/annurev.genom.6.080604.162151. பப்மெட்:16124868. https://zenodo.org/record/1235009. 
  7. Johnson, W.E.; O'Brien, S.J. (1997). "Phylogenetic reconstruction of the Felidae using 16S rRNA and NADH-5 mitochondrial genes". Journal of Molecular Evolution 44 (Supplement 1): 98–116. doi:10.1007/PL00000060. பப்மெட்:9071018. Bibcode: 1997JMolE..44S..98J. https://zenodo.org/record/1232587. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pardofelis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தோபெலிசு&oldid=3793657" இலிருந்து மீள்விக்கப்பட்டது