பிளஸ் விரைவுச்சாலைகள்
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 27 சூன் 1986 |
தலைமையகம் | பெர்சாடா பிளஸ் (Persada PLUS) சுபாங் மாற்றுச் சாலை கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை, பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா |
தொழில்துறை | நெடுஞ்சாலை சலுகைகள் |
பணியாளர் | + 3,500 |
தாய் நிறுவனம் | யுஇஎம் குழு UEM Group |
இணையத்தளம் | www |
பிளஸ் விரைவுச்சாலைகள் அல்லது பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் (ஆங்கிலம்: PLUS Expressways; அல்லது PLUS Expressways Berhad (PEB); மலாய்: PLUS Expressways Berhad அல்லது Projek Lebuhraya Utara Selatan Berhad (PLUS) என்பது மலேசியாவில் மிகப்பெரிய நெடுஞ்சாலைக் கட்டுமான-செயலாக்க முதலீட்டு நிறுவனமாகும்.[1]
பொதுவாக, இந்த நிறுவனம் பிளஸ் (ஆங்கிலம்; மலாய்: PLUS) என்றே அழைக்கப்படுகிறது.
இந்த நிறுவனம் அதிவேக நெடுஞ்சாலை இயக்கச் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் விரைவுச்சாலை சுங்கச் சாவடிகளைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாகவும் செயல்படுகிறது. அத்துடன் உலகில் 8-ஆவது பெரிய விரைவுச்சாலை நிறுவனமாகவும் அறியப்படுகிறது.[2]
பொது
[தொகு]பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் 27 சூன் 1986-இல் மலேசிய நெடுஞ்சாலைகள் நிறுவனம் எனும் பெயரில் தொடங்கப்பட்டது. 13 மே 1988 அன்று, அதன் பெயரை வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிறுவனம் (Projek Lebuhraya Utara Selatan Berhad) (PLUS) என மாற்றியது.[3]
29 சனவரி 2002 அன்று, பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் ஒரு பொது நிறுவனமாக மலேசிய பங்குச் சந்தையில் இணைக்கப்பட்டது.
மாநிலச் சாலைகளின் குறியீடுகள்
[தொகு]மலேசியாவில் உள்ள மாநிலங்களில், கீழ்க்கண்டவாறு சாலைகளின் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பு முறையையே பிளஸ் நிறுவனமும் பயன் படுத்தி வருகிறது.
- A: பேராக்
- B: சிலாங்கூர்
- C: பகாங்
- D: கிளாந்தான்
- J: ஜொகூர்
- K: கெடா
- M: மலாக்கா
- N: நெகிரி செம்பிலான்
- P: பினாங்கு
- R: பெர்லிஸ்
- SA: சபா
- T: திராங்கானு
- W: மலேசிய கூட்டரசு பிரதேசம் (கோலாலம்பூர்)
- Q: சரவாக்
நிறுவன உறுப்பினர்களின் பட்டியல்
[தொகு]உள்நாடு
[தொகு]சின்னம் | பெயர் | அமைவு | செயல்பாடு |
---|---|---|---|
Projek Lebuhraya Usaha Sama Berhad |
உசகா சமா விரைவுச்சாலைத் திட்ட நிறுவனம் Projek Lebuhraya Usaha Sama Berhad (PLUS) |
2011 | மலேசியாவின் அனைத்து விரைவுச்சாலைகள்:
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை |
PLUS Helicopter Services Sdn. Bhd. |
பிளஸ் உலங்கூர்தி சேவைகள் நிறுவனம் PLUS Helicopter Services Sdn Bhd (PLUS Heli) |
2010 | உலங்கூர்தி சேவைகள் |
தெராஸ் தொழில்நுட்ப நிறுவனம் | 1994 | தொழில்நுட்ப சேவைகள் | |
தொட்டு செல் | 1996 | மின்னியல் கட்டண முறை (Electronic Toll Collection) Touch 'n Go Smart TAG (பங்குதாரர்) |
பன்னாடு
[தொகு]சின்னம் | பெயர் | அமைவு | செயல்பாடு |
---|---|---|---|
PLUS Expressways International Berhad (PEIB) |
பிளஸ் பன்னாட்டு விரைவுச்சாலை நிறுவனம் PLUS Expressways International Berhad (PEIB) |
2011 | பன்னாட்டு விரைவுச்சாலைகள்: யுனிகெஸ்ட் இன்ப்ரா வெஞ்சர்ஸ் நிறுவனம் (Uniquest Infra Ventures Private Limited) (இந்தியா) சிக்காம்பெக்-பாலிமனான் சாலை (Cikampek–Palimanan Toll Road) (இந்தோனேசியா) |
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ "Plus Berhad". Touch 'N Go Information System.
- ↑ "PLUS Expressways Berhad is a Malaysia-based investment holding company. The Company is engaged in providing expressway operation services". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
- ↑ "Subsidiaries: Projek Lebuhraya Utara-Selatan Berhad". PLUS Malaysia Berhad. Archived from the original on 31 May 2015. பார்க்கப்பட்ட நாள் 19 September 2015.