மதுரா வங்கி
Appearance
மதுரா வங்கி (Bank of Madurai) 1943ஆவது ஆண்டில் கருமுத்து தியாகராஜன் செட்டியாரால் தொடங்கப்பட்ட வங்கியாகும். 1960களில் இவ்வங்கி, 1933ஆவது ஆண்டில் தொடங்கப்பட்ட செட்டிநாடு மெர்க்கன்டைல் வங்கியையும் 1904 ஆவது ஆண்டில் தொடங்கப்பட்ட இளஞ்சி வங்கியையும் வாங்கிக் கொண்டது. மதுரா வங்கி இந்தியாவின் 100 நகரங்களில், 2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும், 280 கிளைகளையும், 40க்கும் அதிகமான ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணவழங்கிகளையும் கொண்டு செட்டியார்களால் தொடங்கப்பட்ட வங்கிகளில், மிகப்பெரிய வங்கியாகத் திகழ்ந்தது. 2001 மார்ச் 10 அன்று ஐசிஐசிஐ வங்கியுடன் இணைவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து இவ்வங்கி, இந்திய வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949, பிரிவு 44A கீழ் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டது.