விஜயா வங்கி
வகை | பொதுப் பங்கு நிறுவனம் முபச: 532401 |
---|---|
நிறுவுகை | 1931, மங்களூர், இந்தியா. |
தலைமையகம் | பெங்களூரு, இந்தியா |
முதன்மை நபர்கள் | ஸ்ரீ கிஷோர் குமார் சான்சி, (மேலாண்மை இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | நிதிச் சேவைகள் வணிக வங்கி |
பணியாளர் | 13,700 (2014-15) |
இணையத்தளம் | www.vijayabank.com |
விஜயா வங்கி (Vijaya Bank) இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் நடுத்தர அளவு இந்தியப் பொதுத்துறை வங்கியாகும். இவ்வங்கி, இந்திய அரசால் தேசியமயமாக்கம் செய்யப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும்.
வரலாறு
[தொகு]விஜயா வங்கி, 'ஸ்ரீ அட்டாவர் பாலகிருஷ்ண செட்டி என்பவரால் 1931 அக்டோபர் 23 அன்று மங்களூர் பன்ட்ஸ் ஹாஸ்டல் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது.[1] விஜயதசமி நாளில் தொடங்கப்பட்டதால் இது விஜயா வங்கி என அழைக்கப்பட்டது.[2] கர்நாடகாவின் தக்சின கன்னடா மாவட்ட விவசாயிகளிடம் வங்கியை பயன்படுத்துதல், சிக்கனம் மற்றும் தொழில் தொடங்கும் பழக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்திற்காகவே இவ்வங்கி தொடங்கப்பட்டது. 1958 ஆம் ஆண்டில் இவ்வங்கி அட்டவணை படுத்தப்பட்ட வங்கியாக மாறியது. 1963 - 68 காலகட்டத்தில் இவ்வங்கியானது 9 சிறிய வங்கிகளை தன்னுடன் இணைத்ததன் மூலமாக படிப்படியாக, இந்தியா முழுவதும் செயல்படும் வங்கியாக வளர்ந்தது. 1980 ஏப்ரல் 15 அன்று, இந்திய அரசால் இவ்வங்கி தேசியமயமாக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A banker erased from memory". Deccan Herald. http://www.deccanherald.com/content/141131/a-banker-erased-memory.html. பார்த்த நாள்: 27 February 2012.
- ↑ "Vijaya Bank - Inception". Archived from the original on 2008-09-08. பார்க்கப்பட்ட நாள் 2015-06-27.