உள்ளடக்கத்துக்குச் செல்

முப்பரிமாண படிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்பரிமாண படநோக்கி. இராணுவத்தால் வானூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ய பயனாகியது.
Stereo card image modified for crossed eye viewing.
View of Manhattan, c. 1909
பாஸ்டன் காட்சி, c. 1860
An 1893-era World's Columbian Exposition viewer
Company of ladies watching stereoscopic photographs (Jacob Spoel, before 1868) Probably the earliest depiction of people using a stereoscope

முப்பரிமாண படிமம், (stereoscopic imaging)என்பது ஓர் படிமத்தில் உயரம்,அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் மூன்று பிரிமாணங்களில் காட்சித் தகவலை பதிவதற்கும் திறனுள்ள நுட்பமாகும். ஒவ்வொரு கண்ணிற்கும் சற்றே வேறுபட்ட படிமத்தை காட்டுவது மூலம் ஓர் நிழற்படத்திலோ,திரைப்படத்திலோ அல்லது பிற இருபரிமாண படிமங்களிலோ ஆழத்தைக் குறித்த மாயக்காட்சியை உருவாக்க வியலும்.பல முப்பரிமாண காட்சிகள் இந்த நுட்பத்தையே பயன்படுத்துகின்றன.இதனை முதலில் சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் 1840ஆம் ஆண்டு கண்டறிந்தார்.[1] இந்த நுட்பம், எடுத்த நிழற்படங்களிலிருந்து தொலைவுகளை அளக்கும் பட அளவையியல் மற்றும் மனமகிழ்விற்காக எடுக்கப்படும் 3D படநோக்கிகளில் பயன்படுத்தப் படுகிறது. மேலும் பெரிய பலபரிமாணங்களில் எடுக்கப்பட்ட ஆய்வு தரவுகளை காணவும் பயனாகிறது. நவீன தொழிலக முப்பரிமாண படிமங்கள் 3D ஒளிவருடிகளை கொண்டு உருவாக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Welling, William. Photography in America, page 23
  2. Fay Huang, Reinhard Klette, and Karsten Scheibe: Panoramic Imaging (Sensor-Line Cameras and Laser Range-Finders). Wiley & Sons, Chichester, 2008

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Stereoscopy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பரிமாண_படிமம்&oldid=3225349" இலிருந்து மீள்விக்கப்பட்டது