உள்ளடக்கத்துக்குச் செல்

கஞ்சனூர் இராமலிங்கேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கஞ்சனூர் இராமலிங்கேசுவரர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

சென்னை-விழுப்புரம் சாலையில் விழுப்புரத்திற்கு முன்பாக உள்ள ரயில்வே கேட்டையொட்டி வலது புறம் செல்லும் விழுப்புரம்-செஞ்சி/திருவண்ணாமலை சாலையில் 12ஆவது கிமீ தொலைவில் உள்ள கூட்ரோட்டை அடுத்து 2 கிமீ தொலைவில் உள்ளது. தென் நாட்டில் கஞ்சனூர் என்ற பாடல் பெற்ற தலம் உள்ளது. எனவே இதனை வட கஞ்சனூர் என்று கூறுகின்றனர். இருப்பினும் இவ்வூர் கஞ்சனூர் என்றே அழைக்கப்படுகிறது.

இறைவன்,இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் இராமலிங்கேசுவரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

[தொகு]

விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம் சன்னதிகள் உள்ளன. இறைவி சன்னதி தனியாக உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009