டெம்பிளர் சாலை கொமுட்டர் நிலையம்
டெம்பிளர் சாலை Jalan Templer | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KD05 | |||||||||||
டெம்பிளர் சாலை கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | சீன மொழி: 八打灵 | ||||||||||
அமைவிடம் | டெம்பிளர் சாலை, 46000, கோலாலம்பூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°05′00″N 101°39′24″E / 3.08346°N 101.65653°E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||
தடங்கள் | தஞ்சோங் மாலிம்–கிள்ளான் | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KD05 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1886 | ||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
டெம்பிளர் சாலை கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Jalan Templer Komuter Station; மலாய்: Stesen Komuter Jalan Templer); சீனம்: 邓普勒路) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் பெட்டாலிங் ஜெயா' குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குச் சேவை செய்கிறது.
சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள டெம்பிளர் சாலை மிகவும் பரபரப்பான முக்கிய சாலைகளில் ஒன்றாகும். இந்தச் சாலை பெட்டாலிங் ஜெயாவில் கட்டப்பட்ட முதல் சாலை ஆகும். பிஜே சாலை 1 என்று அழைக்கப்படுகிறது.
பொது
[தொகு]மலாயாவின் முன்னாள் மூத்த பிரித்தானிய உயர் ஆணையர் சர் ஜெரால்ட் டெம்பிளரின் நினைவாக இந்தச் சாலைக்கு பெயரிடப்பட்டது
டெம்பிளர் சாலை பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள போக்குவரத்தை நிறைவு செய்வதற்காக சாலையின் பெயரால் இந்த நிலையம் கட்டப்பட்டது.
இனாய் பல்லடுக்கு குடியிருப்புகள்
[தொகு]இந்த நிலையம், பிஜே பிரிவு 1 (PJ Section 1), பிஜே பிரிவு 1A (PJ Section 1A); பிஜே பிரிவு 18 (PJ Section 18)-இல் உள்ள இனாய் கோர்ட் பல்லடுக்கு குடியிருப்புகள் (Inai Court Apartment); பன்மாடி இல்லங்கள்; மற்றும் இந்த நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புகள் போன்றவற்றுக்குச் சேவை செய்கிறது.
1980-களில் இந்த நிலையம் பெட்டாலிங் ஜெயா நிலையம் என்று அறியப்பட்டது. அதன் பின்னர் தற்போதைய டெம்பிளர் சாலை நிலையம் எனும் பெயரைப் பெற்றது.[2]
காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pantai Dalam KTM station is a KTM Komuter train station in Pantai Dalam, Lembah Pantai and served by the KTM Komuter's Port Klang Route". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
- ↑ "KTM Klang Valley Network 1985". பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
மேலும் காண்க
[தொகு]- என்றி கர்னி
- பெட்டாலிங் ஜெயா
- ஜெரால்ட் டெம்பிளர்
- மலாயா அவசரகாலம்
- மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்கள்