உள்ளடக்கத்துக்குச் செல்

லாபு கொமுட்டர் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாபு
 KB12  | Seremban Line கொமுட்டர்

Labu Komuter Station
லாபு கொமுட்டர் நிலையம் (2007)
பொது தகவல்கள்
அமைவிடம்லாபு, சிரம்பான் மாவட்டம்
சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்2°45′14″N 101°49′36″E / 2.75389°N 101.82667°E / 2.75389; 101.82667
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள்  பத்துமலை-புலாவ் செபாங் 
மேற்கு கடற்கரை
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KB12 
வரலாறு
திறக்கப்பட்டது KB12  1903
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்1995
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் கொமுட்டர்   அடுத்த நிலையம்
   
நீலாய்
பத்துமலை
 
பத்துமலை புலாவ் செபாங் வழித்தடம்
 
திரோய்
தம்பின்
அமைவிடம்
Map
லாபு நிலையம்

லாபு கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Labu Komuter Station; மலாய்: Stesen Komuter Labu) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், லாபு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். லாபு நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், லாபு நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது. முன்பு இந்த நிலையம் லாபு தொடருந்து நிலையம் (Labu Railway Station) என்று அழைக்கப்பட்டது.

ஒரு கிராமத்திற்கும் ஒரு பெரிய செம்பனை தோட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம் 1903-ஆம் ஆண்டிலேயே தன் சேவைகளைத் தொடங்கி விட்டது. இதற்கிடையில் 1995-ஆம் ஆண்டு வரை கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளையும் வழங்கி வந்தது. [1]

சிரம்பான் வழித்தடம் என்றும்; காஜாங் வழித்தடம் என்றும் அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடத்தில் இந்த நிலையம் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளது.[2]

பொது

[தொகு]

இந்த நிலையத்தில் 2 பக்க நடைமேடைகள்; 4 வழித்தடங்கள் உள்ளன. இந்த நிலையத்தில் நிற்காத தொடருந்துகள், நிலையத்தின் நடுவில் உள்ள இரண்டு வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது.

லாபு கொமுட்டர் நிலையம்

[தொகு]

இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கிடம் மற்றும் இரண்டு பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்களும் உள்ளன.[3]

லாபு கொமுட்டர் நிலையம், நகரின் மையத்திற்கு அருகில்; நீலாய் கொமுட்டர் நிலையத்திற்கும்; திரோய் கொமுட்டர் நிலையத்திற்கும் இடையில் உள்ளது.[4]

லாபு நகரம்

[தொகு]

லாபு நகரம், சிரம்பான் நகர மையத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. லாபு என்பது பூசணி காயைக் குறிக்கும் ஒரு மலாய் சொல் ஆகும். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லாபு முக்கிம் நிறுவப்பட்டது. சுங்கை ஊஜோங் ஆட்சியின் எட்டாவது உண்டாங் பதவி வகித்த டத்தோ கெலானா பெட்ரா ஸ்ரீ ஜெயா (Dato' Kelana Petra Sri Jaya) என்பவரால் லாபு முக்கிம் உருவாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது, சப்பானியர்கள் லாபு நகரத்தைத் தங்களின் தலைமையகங்களில் ஒன்றாகப் பயன்படுத்தினார்கள். இந்த நகரத்திற்கு அருகில் பல கோட்டைகளைக் கட்டினார்கள். அவை பெரும்பாலும் 1995-ஆம் ஆண்டில், இரட்டை தொடருந்து வழித்தடங்கள் அமைக்கப் படுவதற்காக இடிக்கப்பட்டு விட்டன.

1966 அக்டோபர் 31-ஆம் தேதி, அமெரிக்க அதிபர் லின்டன் பி. ஜான்சன் இந்த நகருக்குப் பயணம் செய்தார். அவர் சென்ற இடமான லாபு ஜெயாவிற்கு பெல்டா ஜான்சன் (FELDA LB Johnson) என்று பெயரிடப்பட்டது.[5][6]

மேலும் காண்க

[தொகு]

லாபு நிலையக் காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Located between a village and a large palm oil estate, the station previously served KTM Intercity train services from 1903 to 1995". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  2. "The Labu KTM Komuter Station is a KTM Komuter train halt forms part of a common KTM Komuter railway line in Seremban Line. The Station was exist as early as 1903 and was rebuilt on November 1995". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  3. "KTM Labu to KL Sentral Komuter Schedule". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  4. "Labu Komuter Station (KB11) - The station is located near the centre of town. It is between the Nilai Komuter Station and Tiroi Komuter Station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
  5. "President Johnson visited Kampung Labu Jaya (later re-named Kampung LBJ". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 June 2022.
  6. Malaysia: Fifty Years of Diplomacy, 1957-2007, By Chandran Jeshurun

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாபு_கொமுட்டர்_நிலையம்&oldid=4155148" இலிருந்து மீள்விக்கப்பட்டது