search icon
என் மலர்tooltip icon
    • பெரியாரே ஒரு மண்தான் என்று சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • பல்லவர்-சோழர் காலத்தில்தான் பிராமணிய-சமஸ்கிருத ஆதிக்கம் வந்தது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான், "எதற்கெடுத்தாலும் பெரியார் மண்.. பெரியார் மண் என்று கூறுகின்றனர். ஆனால் பெரியாரே ஒரு மண்தான். இது சேர,சோழ, பாண்டிய மண், முத்துராமலிங்க தேவரின் மண், தீரன் சின்னமலையின் மண்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், சீமானின் இக்கருத்துக்கு பேராசிரியர் அருணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், "இது பெரியார் மண் அல்ல, மூவேந்தர் மண் என்கிறார் ஒருவர். பல்லவர்-சோழர் காலத்தில்தான் பிராமணிய-சமஸ்கிருத ஆதிக்கம் வந்தது. தமிழருக்கும் தமிழுக்கும் பெரும் கேடு சூழ்ந்தது. அதை எதிர்த்து வலுவான களம் அமைத்தவர் பெரியாரே. வரலாறு தெரியாத அரைவேக்காடுகளின் வாய்ச்சவடாலில் ஏமாற வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • அங்கரோன் பாடலுக்கு ஒரு வாலிபர் தனது பாட்டியுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
    • என் ஸ்ரீவள்ளியுடன் என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    சமீபத்தில் வெளியான 'புஷ்பா-2' படம் உலகளவில் மிகப்பெரிய ஹிட்டாகி ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற அங்கரோன் எனத்தொடங்கும் ஸ்ரீவள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜூன்- ராஷ்மிகாவின் நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து பெரும் வரவேற்பை பெற்றது.

    இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கரோன் பாடலுக்கு ஒரு வாலிபர் தனது பாட்டியுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வயதான மூதாட்டி ஒருவர் அங்கரோன் பாடலுக்கு ராஷ்மிகாவை போன்று நடனமாடுகிறார். அவருடன் அவரது பேரன் இணைந்து நடனமாடும் காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது.

    என் ஸ்ரீவள்ளியுடன் என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், அந்த பாட்டி மிகவும் அழகாக நடனமாடுகிறார் என பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், வயது என்பது வெறும் எண் தான், மகிழ்ச்சி எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இந்த வீடியோ உதாரணம் என பதிவிட்டார்.



    • அனைத்து மணிக்கட்டு வலிகளுக்கும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை.
    • பொதுவாக ஒற்றடம், ஓய்வு மற்றும் வலி நிவாரணி எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

    மணிக்கட்டு வலி பெரும்பாலும் சுளுக்கு அல்லது திடீர் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் கீல்வாதம், கார்பல் டன்னல் சிண்ட்ரோம், எலும்பு தேய்மானம், நரம்பு பலவீனம் போன்றவற்றாலும் ஏற்படலாம்.

    கம்ப்யூட்டர்களில் நீண்ட நேரம் பணிபுரிபவர்கள், தட்டச்சு பணிகளை செய்பவர்கள், நீண்ட தூரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோருக்கும் மணிக்கட்டு வலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வலிக்கான சரியான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை எடுப்பது அவசியம்.

    கார்பல் டன்னல் சிண்ட்ரோம்:

    மணிக்கட்டின் உள்ளங்கை பகுதி கார்பல் டன்னல் ஆகும். இதன் வழியாக செல்லும் மீடியன் நரம்பு மீது அழுத்தம் அதிகரிக்கும் போது வலி ஏற்படும்.

    கேங்க்லியன் நீர்க்கட்டிகள்:

    இந்த மென்மையான திசு நீர்க்கட்டிகள் பெரும்பாலும் உள்ளங்கைக்கு பின்புறம் உள்ள மணிக்கட்டின் பகுதியில் ஏற்படும்.

    கீன்பாக் நோய்:

    இந்த கோளாறு பொதுவாக இளம் வயதினரை பாதிக்கிறது. மணிக்கட்டில் உள்ள சிறிய எலும்புகளில் ஒன்றான லூனேட் எலும்பிற்கு போதுமான ரத்த ஓட்டம் இல்லாததால் கீன்பாக் நோய் ஏற்படுகிறது.


    ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்:

    இது கைகள், கால்கள் மற்றும் உடலின் பல மூட்டுகளை பாதிக்கும் நாள்பட்ட அழற்சி நோயாகும். இந்நோயில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மூட்டுகள் மற்றும் சொந்த திசுக்களை தாக்குவதால் இது ஏற்படுகிறது.

    டெனோசினோவிடிஸ்:

    இது மணிக்கட்டில் உள்ள தசை நாண்களைப் பாதுகாக்கும் இணைப்பு திசுக்களின் வீக்கம் ஆகும்.


    மணிக்கட்டு பகுதியில் ஏற்படும் காயங்கள், சுளுக்குகள், எலும்பு முறிவுகள், எலும்பு பிறழ்தல் போன்ற பல காரணங்களால் மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்படுகிறது. எந்த வகையான நோய் என்பதை ரத்த பரிசோதனைகள், எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவை மூலம் கண்டுபிடிக்கலாம்.

    அனைத்து மணிக்கட்டு வலிகளுக்கும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை. சிறு சுளுக்கு மற்றும் வலிகளுக்கு பொதுவாக ஒற்றடம், ஓய்வு மற்றும் வலி நிவாரணி எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஆனால் வலி மற்றும் வீக்கம் சில நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது மோசமாக இருந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

    • சென்னையில் 356 பள்ளிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
    • குழந்தைகளுக்கு சரியான நேரத்திலும், சூடாகவும் உணவு கிடைக்காத நிலை உருவாகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிமாறப்படும் காலை உணவை தயாரித்து வழங்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன்களுக்கு எதிரான திமுக அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

    சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கான காலை உணவை இப்போது அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்து வழங்குகின்றனர். அதனால், குழந்தைகளுக்கு ஓரளவு தாமதமின்றி மாணவர்களுக்கு உணவு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் சத்துணவு தயாரிக்கப்படுவதைப் போல பள்ளிகளிலேயே காலை உணவையும் தயாரித்து வழங்குவது தான் சரியானதாக இருக்கும். அதற்கு மாறாக இந்தப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

    சென்னையில் 356 பள்ளிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன. அவை மொத்தம் 35 மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்களில் காலை உணவை தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, சராசரியாக 11 பள்ளிகளுக்கு ஓர் இடத்தில் உணவு தயாரிக்கப்பட்டால், அதை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கொண்டு சென்று சேர்க்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். அதனால் குழந்தைகளுக்கு சரியான நேரத்திலும், சூடாகவும் உணவு கிடைக்காத நிலை உருவாகும். இது காலை உணவுத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

    காலை உணவை தயாரிக்கும் பணியை தனியாரிடம் வழங்க கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை மாநகராட்சி முடிவு செய்த போது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது. ஆனால், எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல், ஏற்கனவே கைவிடப்பட்ட ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி அவசர, அவசரமாக செயல்படுத்தத் துடிப்பதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

    காலை உணவுத் திட்டத்தின் நோக்கமே மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சூடான உணவு கிடைக்க வேண்டும் என்பது தான். அதை உறுதி செய்யும் வகையில் காலை உணவுத் தயாரிப்பை தனியாரிடம் விடும் திட்டத்தை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும். மாறாக, அனைத்துப் பள்ளிகளிலும் சத்துணவுத் திட்டத்திற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடங்களில் காலை உணவை தயாரித்து வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார். இதனால் பும்ரா உடற்தகுதியுடன் இருந்தால் தான் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    தற்போது நியூசிலாந்தை சேர்ந்த மருத்துவர் ரோவன் ஸ்கௌடன் உதவியுடன் பும்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னாள் பும்ரா 100% உடற்தகுதியுடன் இருந்தால் அது ஒரு அதிசயம் என்று பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    பும்ராவின் மருத்துவ அறிக்கைககள் மருத்துவர் ரோவன் ஸ்கௌடனிடம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதனை பொறுத்து சிகிச்சைக்காக பும்ராவை நியூசிலாந்திற்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பும்ரா உடற்தகுதி பெறாவிட்டால் ஹர்ஷித் ராணா அல்லது சிராஜ் ஆகியோரில் யாராவது ஒருவர் அணியில் இடம்பெறுவர் என்று சொல்லப்படுகிறது.

    • கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
    • நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல

    ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதுமுதல் உலக சுகாதர அமைப்பில் இருந்து வெளியேறுவது, உலக நாடுகளுக்கான யுஎன்- எய்ட் நிதியுதவியை நிறுத்துவது உள்ளிட்ட முடிவுகளை அறிவித்தார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை நாடுகடத்துவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது. ஆனால் கொலம்பியா அமெரிக்காவின் நாடு கடத்தல் திட்டத்தை நிராகரித்தது. இதனால் கோபம் தலைக்கேறிய டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

    முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட 2 விமானங்களைத் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால் கொதித்த டிரம்ப், அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியை உயர்த்தி உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வரி விதிப்பு ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும், கொலம்பிய நாட்டு அரசு அதிகாரிகள், அவர்களை சார்ந்தோருக்கான விசா ரத்து, கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் அவசரகதியில் டிரம்ப் பிறப்பித்தார்.

    இதற்க்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை உயர்த்தி கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டார். நீங்கள் எங்களுக்கு செய்வதை, நாங்களும் உங்களுக்கு செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் கொலம்பிய அதிகாரிகளின் விசா ரத்து, பயணிக்க தடை உள்ளிட்டவை குறித்து பேசிய குஸ்டாவோ பெட்ரோ, நான் ஒன்றும் அமெரிக்கா வர விரும்பவில்லை. அது எனக்கு போர் அடிக்கிறது. நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.

     

    இந்நிலையில் கொலம்பியா தனது நிலைப்பாட்டில் இருந்து திடீரென யு டர்ன் அடித்து, அமெரிக்காவில் இருந்து அனுப்பட்ட தங்கள் நாட்டு அகதிகளை ஏற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

    கொலம்பியா அரசு, ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு கடத்தும் விமானங்களில் நாட்டிற்கு வரவிருக்கும் சக நாட்டவர்கள் பாதுகாப்பாக திரும்புவதையும், கண்ணியமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.   

    எந்த சூழ்நிலையிலும் திரும்ப வந்தவர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதன்மூலம் தென் அமெரிக்க நாடான கொலம்பியா தன்னிடம் அடிபணிந்ததை அடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி உயர்வு, விசா ரத்து, பயண தடை ஆகியவற்றை அமெரிக்கா திரும்பப்பெற்றுள்ளது.

    மெக்சிகோ நாடும் தங்கள் அகதிகளை திரும்பப்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டவரை விமானத்தில் தண்ணீர் கொடுக்கால், ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. 

     

    • விவேக் குமார் திருமண சடங்குகளை செய்கிறார்.
    • விவேக்குமார் பிளஸ்-2 முடித்த பிறகு வேத படிப்பை தொடர்ந்தார்.

    திருமண விழாக்களின் போது சுவாரஸ்யமாக நடைபெறும் சில சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஹரித்துவாரை சேர்ந்த விவேக் குமார் என்பவர் தனது சொந்த திருமணத்தில் அர்ச்சகராக மாறி, வேத மந்திரங்கள் உச்சரித்த காட்சி உள்ளது.

    ராம்பூர் பகுதியில் இருந்து மணமகன் ஊர்வலமாக ஹரித்துவார் வருவது போன்று வீடியோ தொடங்குகிறது. அங்கு மணமேடையில் விவேக் குமார் ஏறியதும் மணமகள் வருகிறார். பின்னர் மேடையில் விவேக் குமார் திருமண சடங்குகளை செய்கிறார்.

    தனது திருமண விழாவில் அவர் வேத மந்திரங்களை உச்சரித்து சடங்குகளை நடத்தியதை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர். விவேக்குமார் பிளஸ்-2 முடித்த பிறகு வேத படிப்பை தொடர்ந்தார். ஆரிய சமாஜத்தின் மரபுகளுடான அவரது உறவு திருமணத்தின் போது மந்திரங்களை உச்சரிக்க தூண்டியதாக அவர் கூறினார்.



    • தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
    • பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தினர்.

    நாட்டின் 76வது குடியரசு தினத்தை ஒட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்தது. கடந்த சனிக்கிழமை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்தப் பட்டியலில் முன்னாள் இந்திய வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்ததை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

     


    அந்த வரிசையில், நடிகர் தனுஷ் ரவிச்சந்திரன் அஸ்வினை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்தப் பதிவில், "பத்மஸ்ரீ விருது வென்ற முதல் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார். இதுதவிர பத்ம விருது வென்ற நடிகர் அஜித் குமார் மற்றும் அனைவருக்கும் நடிகர் தனுஷ் தனது பதிவில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

    எக்ஸ் தளத்தில் தனக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்-க்கு ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்து கமென்ட் செய்தார். இவரது பதிவுக்கு ஒருவர் இந்தி மொழியில் பதில் அளித்து இருந்தார். அதில், நன்றி சொல்வதாக இருந்தால் ரோகித் சர்மாவுக்கு சொல்லுங்க என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த அஸ்வின், "டேய் பைத்தியம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

    • மறுநாள் காரை பார்த்த போது, அதன் பானட்டில் ஏராளமான கீறல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சேதம் அடைந்த காரை சரி செய்ய ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் ஆனதாக கோஷி குறிப்பிட்டிருந்தார்.

    மத்திய பிரதேச மாநிலம் திருப்பதிபுரம் காலனியை சேர்ந்தவர் பிரஹ்லாத் சிங் கோஷி. இவர் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு நாய் மீது கார் மோதியது. இதில் நாய்க்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் தன் மீது மோதிய காரை பார்த்தும், காரை ஓட்டி சென்ற பிரஹ்லாத்தை பார்த்தும் நாய் குரைத்தது. பின்னர் சிறிது தூரம் காரை துரத்தியது.

    இந்நிலையில் பிரஹ்லாத் திருமண விழாவுக்கு சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினார். மறுநாள் காரை பார்த்த போது, அதன் பானட்டில் ஏராளமான கீறல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது முதல் நாள் கார் மோதியதில் காயமடைந்த நாய் மேலும் ஒரு நாயுடன் அவரது வீட்டிற்கு வந்து கார் பானட்டை தனது நகங்களால் கீறும் காட்சிகள் இருந்தது.

    சேதம் அடைந்த காரை சரி செய்ய ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் ஆனதாக கோஷி குறிப்பிட்டிருந்தார்.



    • 13 மாடி கட்டிடத்தின் 3 ஆவது மாடியில் இருந்து 2 வயது குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது.
    • இதனை பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக கூச்சலிட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 3 ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த குழந்தையை இளைஞர் ஒருவர் லாவகமாக பிடித்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தானேவில் உள்ள 13 மாடி கட்டிடத்தின் 3 ஆவது மாடியில் இருந்து 2 வயது குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த மக்கள் உடனடியாக கூச்சலிட்டுள்ளனர். உடனே கீழே இருந்த பாவேஷ் மத்ரே என்ற நபர் ஓடிச்சென்று குழந்தையை பிடிக்க முயன்றார். அவரது கையில் பட்டு பின்னர் குழந்தை தரையில் விழுந்தது. இதனால் குழந்தைக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பாவேஷ் மத்ரே, "நான் கிரிக்கெட் விளையாடுவதால் எனக்கு பந்தை பிடிக்கும் பழக்கம் உள்ளது, அதுதான் குழந்தை கீழே விழுந்ததைக் கண்டதும் உடனடியாக விரைந்து சென்று காப்பாற்ற உதவியது" என்று தெரிவித்தார்.

    • சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி தொடங்கி பூதங்குடி வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழை காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு நீர்வரும். இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் தீர்த்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவமழையால் பெய்த கனமழை காரணமாக வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை மற்றும் வீராணம் வடக்கு நீர் போக்கி மூலமாக வெளியேற்றப்பட்டு, ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது கொள்ளிடம் வடவாற்றில் இருந்தும், மழைநீரும் சேமிக்கப்பட்டு வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடிக்கு தற்போதைய நிலவரப்படி 47.40 அடியை எட்டி கடல்போல் காட்சியளிக்கிறது.

    சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வடவாறு வழியாக வினாடிக்கு 1330 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையானது.
    • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.60,440-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,555-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,540-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.60,320-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

    25-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

    24-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

    23-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,200

    22-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-01-2025- ஒரு கிராம் ரூ. 105

    25-01-2025- ஒரு கிராம் ரூ. 105

    24-01-2025- ஒரு கிராம் ரூ. 105

    23-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    22-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    ×