அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையம்
அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையம் (2024) | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Ampang Park 安邦购物中心站 | ||||||||||
அமைவிடம் | அம்பாங் சாலை கோலாலம்பூர் மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°09′35″N 101°43′07″E / 3.15972°N 101.71861°E | ||||||||||
உரிமம் | பிரசரானா மலேசியா | ||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா | ||||||||||
நடைமேடை | நிலத்தடி தீவு மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | நிலத்தடி நிலையம் | ||||||||||
தரிப்பிடம் | இல்லை | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KJ9 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1 சூன் 1999 (எல்ஆர்டி) | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையம் அல்லது அம்பாங் பார்க் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Ampang Park LRT Station; மலாய்: Stesen Ampang Park; சீனம்: 安邦购物中心站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
இந்த எல்ஆர்டி நிலையம், அம்பாங் சாலையின் கிளானா ஜெயா வழித்தடத்தில் கடைசி நிலத்தடி நிலையமாகும். இதன் பின்னர் இந்தத் தடம் மீண்டும் தரைக்கு மேலே செல்கிறது.
பொது
[தொகு]இந்த நிலையம் சிட்டி வங்கியின் (Citibank) மலேசியத் தலைமையகத்திற்கு அருகில் உள்ளது. அத்துடன் அமெரிக்க தூதரகம், சிங்கப்பூர் உயர் ஆணையம், கனடிய உயர் ஆணையம் மற்றும் பிரித்தானிய உயர் ஆணையம் ஆகியவை இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. துன் ரசாக் சாலைப் பகுதியில் உள்ள இந்த இடம் 'தூதரக வளாகம்' என்றும் அழைக்கப்படுகின்றது.[3]
இந்த எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் மற்றும் ஒரு நிலையம் உள்ளது. அந்த நிலையம் அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
அமைவு
[தொகு]மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து கோம்பாக் எல்ஆர்டி நிலையம் வரை இயங்கும் புத்ரா எல்ஆர்டி அமைப்பின் (PUTRA LRT System) இரண்டாம் கட்டமாக இந்த நிலையம் 1 சூன் 1999 அன்று திறக்கப்பட்டது.
அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலத்தடி நிலையத்தின் வெளிப்புற கட்டிட வடிவமைப்பு நியூபார்மேசன் (NEUformation) எனும் கட்டிடக்கலை நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்டது. நிலையத்தின் வடிவம், சாய்ந்த வரிசைக் கண்ணாடி மேற்பரப்புகளின் அமைப்பில் உருவாக்கப்பட்டது.[4]
இந்த நிலையம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அதன் நுழைவாயில் தரை மட்டத்தில் உள்ளது. அதே வேளையில் பயணச் சீட்டுப் பகுதியும்; மற்றும் அதன் தளங்களும் நிலத்தடியில் உள்ளன.
அம்பாங் பார்க் வணிக வளாகம்
[தொகு]மலேசியாவின் முதல் வணிக வளாகமான அம்பாங் பார்க் வணிக வளாகத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமையுந்துகள் உள்ளன.
அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது. நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
நுழைவாயில்கள்
[தொகு]அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையம் | ||
நுழைவாயில் | இலக்கு | தோற்றம் |
---|---|---|
வடக்கு | தெரு நிலை வடக்குப் பக்கம் அம்பாங் சாலை (நுழைவாயில் B) அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் |
|
தெற்கு | தெரு நிலை தெற்குப் பக்கம் அம்பாங் சாலை துன் ரசாக் சாலையின் பாதசாரிகள் நடைபாதை |
காட்சியகம்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- கிளானா ஜெயா வழித்தடம்
- மலேசிய தொடருந்து போக்குவரத்து
- கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.
- ↑ "Ampang Park LRT Station is an LRT station in Kuala Lumpur that served by RapidKL's Kelana Jaya Line. Ampang Park Station is the last underground station on the Kelana Jaya Lin". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 7 November 2024.
- ↑ "Ampang Park station station is close to the US embassy, the Singapore High Commission, the Canadian High Commission, and the British High Commission which are all located in the area of Jalan Tun Razak called "Embassy Row"". klia2.info. 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 7 November 2024.
- ↑ "Project | Neuformation Architect". 2012-01-12. Archived from the original on 2012-01-12. பார்க்கப்பட்ட நாள் 2022-07-19.