தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம்
தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் (2022) | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Taman Bahagia 幸福花園站 | ||||||||||
அமைவிடம் | SS 3/59E; SS 2/3, பிரிவு SS 3/59E; SS 2/3; பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர் மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°06′38″N 101°36′45″E / 3.11056°N 101.61250°E | ||||||||||
உரிமம் | பிரசரானா | ||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா வழித்தடம் | ||||||||||
நடைமேடை | 2 பக்க மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | ரேபிட் கேஎல்; பெட்டாலிங் ஜெயா இலவசப் பேருந்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||
தரிப்பிடம் | கட்டணம் (68) மாநகராட்சி | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | (20) | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KJ23 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1 செப்டம்பர் 1998 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் அல்லது தாமான் பகாகியா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Taman Bahagia LRT Station; மலாய்: Stesen LRT Taman Bahagia; சீனம்: 幸福花園站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையிலான முதலாவது கட்டமைப்புப் பிரிவில் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது.
அந்தக் கட்டமைப்புப் பிரிவில் கோலாலம்பூர் சென்ட்ரல் சேர்க்கப்படவில்லை. தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் திறக்கப்பட்ட பின்னர் தான் கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையத்திற்கான பராமரிப்பு கிடங்கு லெம்பா சுபாங் புறநகர்ப்பகுதியில் உள்ளது.
அமைவு
[தொகு]இந்த நிலையம் 1995 மற்றும் 1998 க்கு இடையில் கட்டப்பட்டது. அப்போது அந்த இடத்தில் தாமான் கெலோரா (Taman Gelora) எனும் 25 ஒற்றை மாடி குடியிருப்பு இருந்தது. இந்த நிலையம் SS 2/3 சாலையில், டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் தாமான் மேகா இடைமாற்றத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
தாமான் பகாகியா நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் பிரிவு SS 3/59E; SS 2/3-இல் அமைந்துள்ளது; மற்றும் பல தொழில்துறை, வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் அமைந்துள்ளது.
அத்துடன் பிரிவு SS 3/59E; SS 2/3|பிரிவு SS1-க்கு அருகாமையிலும் உள்ளது. அத்துடன், இந்த நிலையத்திற்கு அருகில் டாமன்சாரா ஜெயா (SS22); டாமன்சாரா உத்தாமா (SS21) ஆகிய புறநகர்ப் பகுதிகள் உள்ளன.
அமைப்பு
[தொகு]தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் உயர்த்தப்பட்ட சில நிலையங்களைப் போலவே, இரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்ட ஒரு நிலையமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; உயர்த்தப்பட்ட ஒரு நிலை; என இரண்டு நிலைகள் உள்ளன.
இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன.
அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது.
கிளானா ஜெயா வழித்தடம்
[தொகு]கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[3]
மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.
பேருந்து சேவைகள்
[தொகு]பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது.
பேருந்து | தொடக்கம் | இலக்கு |
---|---|---|
T783 | KJ23 தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் | SS6, PJ03, PJ04, PJ05 பெட்டாலிங் ஜெயா நகர மையம் |
T784 | KJ23 தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் | SS6, PJ03, PJ04, PJ05 பெட்டாலிங் ஜெயா நகர மையம் |
காட்சியகம்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- மலேசிய தொடருந்து போக்குவரத்து
- கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல்
- பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல்
- கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines. In addition to that, they are also the owner-operator for the stage bus services in Kuala Lumpur, Selangor, Penang and Pahang". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System running through Kuala Lumpur city centre from Gombak to Putra Heights". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Taman Bahagia LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.