இருபுரோமின் ஓராக்சைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருபுரோமின் ஓராக்சைடு
| |
வேறு பெயர்கள்
இருபுரோமின் ஆக்சைடு, புரோமின் ஓராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
21308-80-5 | |
பண்புகள் | |
Br2O | |
வாய்ப்பாட்டு எடை | 175.807 கி/மோல் |
தோற்றம் | அடர்பழுப்பு நிறத் திண்மம் |
உருகுநிலை | சுமார் -17.5°செ இல் சிதைவடைகிறது.[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோமின் ஈராக்சைடு புரோமின் முப்புளோரைடு புரோமின் ஐம்புளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஆக்சிசன் இருபுளோரைடு இருகுளோரின் ஓராக்சைடு குளோரின் ஈராக்சைடு அயோடின் ஈராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இருபுரோமின் ஓராக்சைடு (Dibromine monoxide) என்பது Br2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமின் அயனியும் ஆக்சிசன் அயனியும் சேர்ந்து உருவாகும் இவ்வுப்பு அடர்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. – 40 0 செல்சியசு வெப்பநிலையில் நிலைப்புத் தன்மையுடன் இருக்கும் இச்சேர்மம் புரோமினேற்ற வினைகளில் பயன்படுத்தப்படுகிறது[1]. தனிமவரிசை அட்டவணையில் ஒரு தொடர் மேலேயுள்ள ஆலசனின் இருகுளோரின் ஓராக்சைடுடன் ஒத்த பண்புகளை இச்சேர்மம் கொண்டுள்ளது. இருபுரோமின் ஓராக்சைடானது C2v மூலக்கூறு சீரொழுங்குடன் வளைந்த மூலக்கூறு அமைப்புடன் காணப்படுகிறது. மூலக்கூறில் உள்ள Br-O பிணைப்புகளின் பிணைப்பு நீளம் 1.85Å ஆகவும் Br-O-Br பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 112 0 ஆகவும் அமைந்திருக்கிறது.[2][3]
வினைகள்
[தொகு]புரோமின் ஆவி அல்லது புரோமின் கரைசலை தாழ் வெப்பநிலையில் கார்பன் நாற்குளோரைடு மற்றும் பாதரச(II) ஆக்சைடுடன் சேர்த்துவினைபுரியச் செய்தால் இருபுரோமின் ஓராக்சைடு உருவாகிறது.:[1][3]
புரோமின் ஈராக்சைடை வெப்ப இயக்கவியல் சிதைவுக்கு உட்படுத்துவதாலும் அல்லது 1:5 என்ற விகிதத்தில் புரோமின் மற்றும் ஆக்சிசன் வாயுக்களின் கலவையில் மின்சாரத்தைச் செலுத்துவதாலும் இருகுளோரின் ஓராக்சைடைத் தயாரிக்கலாம்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, CRC Press, p. 74, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3, பார்க்கப்பட்ட நாள் 25 August 2015
- ↑ Levason, William; Ogden, J. Steven; Spicer, Mark D.; Young, Nigel A. (January 1990). "Characterization of dibromine monoxide (Br2O) by bromine K-edge EXAFS and IR spectroscopy". Journal of the American Chemical Society 112 (3): 1019–1022. doi:10.1021/ja00159a019.
- ↑ 3.0 3.1 3.2 Wiberg, Egon (2001). Wiberg, Nils (ed.). Inorganic chemistry (1st ed.). San Diego, Calif.: Academic Press. p. 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123526519.