இரும்பு(III) புரோமைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) புரோமைடு
| |
வேறு பெயர்கள்
பெர்ரிக் புரோமைடு
இரும்பு முப்புரோமைடு முப்புரோமோயிரும்பு | |
இனங்காட்டிகள் | |
10031-26-2 | |
ChemSpider | 23830 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25554 |
| |
UNII | 9RDO128EH7 |
பண்புகள் | |
FeBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 295.56 கி மோல்−1 |
தோற்றம் | பழுப்பு நிறத் திண்மம் |
மணம் | நெடியற்ரது |
அடர்த்தி | 4.50 கி செ.மீ−3 |
உருகுநிலை | 200 °C (392 °F; 473 K) (சிதைவடையும்) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம், hR24 |
புறவெளித் தொகுதி | R-3, No. 148 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும் |
R-சொற்றொடர்கள் | R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26 S37/39 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு(III) புரோமைடு(Iron(III) bromide) FeBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செம்-பழுப்பு நிறத்தில் நெடியற்ற சேர்மமாகக் காணப்படும் இரும்பு(III) புரோமைடு, பெர்ரிக் புரோமைடு என்றும் அழைக்கப்படுகிறது. அரோமாட்டிக் சேர்மங்களின் ஆலசனேற்ற வினைகளில் இது இலூயிக் அமில வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பெர்ரிக் புரோமைடு தண்ணீருடன் வினைபுரிந்து அமிலக் கரைசல்களைக் கொடுக்கிறது.
கட்டமைப்பும் பண்புகளும்
[தொகு]இரும்பு(III) புரோமைடு ஆறு ஒருங்கிணைவு எண்முக இரும்பு மையங்கள்[1] தோற்றம் கொண்ட பல்பகுதிய மூலக்கூற்று கட்டமைப்புடன் உருவாகிறது. எனினும் விலை மலிவாகவே வணிக சந்தையில் கிடைக்கிறது.
புரோமினை இரும்புடன் சேர்த்து சூடுபடுத்துவதால் இரும்பு(III) புரோமைடு தயாரிக்க முடியும்:
- 2 Fe + 3 Br2 → 2 FeBr3
200 பாகை செ வெப்பநிலைக்கு மேல் இரும்பு(III) புரோமைடு சிதைவடைந்து இரும்பு(II) புரோமைடு|இரும்பு(II) புரோமைடாக]] மாறுகிறது.
- 2FeBr3 → 2FeBr2 + Br2
குளோரினின் உயர் ஆக்சிசனேற்றும் பண்பை பிரதிபலிக்கின்ற வகையில் இரும்பு(III) குளோரைடு அதிக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. ஆனால் இரும்பு(III) அயோடைடு அயனிகளை ஆக்சிசனேற்றம் செய்வதால் FeI3 நிலைப்புத்தன்மையற்று காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.