உள்ளடக்கத்துக்குச் செல்

லாத்தேஹார்

ஆள்கூறுகள்: 23°45′N 84°30′E / 23.75°N 84.50°E / 23.75; 84.50
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாத்தேஹார்
சந்த்வா, மகுவாதார் சர்ச், செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மற்றும் கீழ் காக்ரி அருவி
லாத்தேஹார் is located in சார்க்கண்டு
லாத்தேஹார்
லாத்தேஹார்
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் லாத்தேஹார் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°45′N 84°30′E / 23.75°N 84.50°E / 23.75; 84.50
நாடு இந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்லாத்தேஹார்
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2001
அரசு
 • லோத்தேஹார் சட்டமன்றத் தொகுதிவைத்தியநாத் ராம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
ஏற்றம்
387 m (1,270 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்26,981
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுJH-19
இணையதளம்latehar.nic.in

லோத்தேஹார் (Latehar), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் மேற்கில் அமைந்த லாத்தேஹார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இந்நகரம் மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு வடமேற்கில் 107 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மலைக்காடுகள் சூழ்ந்த லோத்தேஹார் நகரத்தைச் சுற்றிலும் கனிம வளங்கள் நிறைந்தது. இந்நகரத்தைச் சுற்றிலும் லோஹர்தக்கா, கும்லா, மேதினிநகர், சத்திரா போன்ற நகரங்கள் உள்ளது. இந்நகரத்தின் 25% மக்கள் பட்டியல் சமூகத்தினர் ஆவார். ஜார்கண்ட் மாநிலத்தின் இரண்டாவது பெரிய அருவி இந்நகரத்தில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 387 மீட்டர் (1,270 அடி) உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 13.42 எக்டேர் பரப்பளவும், 5315 வீடுகளும் கொண்ட லோத்தேஹார் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 26,981 ஆகும். அதில் ஆண்கள் 14152 மற்றும் பெண்கள் 12829 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 907 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.85% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5168 மற்றும் 1436 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 20,800, இசுலாமியர் 4,387, கிறித்தவர்கள் 984 மற்றும் பிறர் 810 பேராக உள்ளனர்.[1]

பொருளாதாரம்

[தொகு]

இந்நகர மக்கள் மலைவளம், காட்டு வளம், கனிம வளம் மற்றும் வேளாண்மையை நம்பி வாழ்கின்றனர். இங்குள்ள மலைக்காடுகளிலிருந்து கிடைக்கும் காட்டு வளங்களான தேன், மூலிகைச் செடிகளைச் சேகரித்து விற்பனை செய்கின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்களில் வேலை செய்கின்றனர்.[2][3]இங்கு எஸ்ஸார் நிறுவனத்தின் 1800 மெகா வாட் திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையம் இயங்குகிறது.[4]

கல்வி

[தொகு]
  • செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி
  • லோத்தேஹார் பொதுப் பள்ளி
  • லோத்தேஹார் கலை & அறிவியல் கல்லூரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Latehar City Population Census 2011 Data- JHARKHAND
  2. "Coal India's Magadh mine may produce 51 mtpa by 2020". Business Standard India. Press Trust of India. 2015-10-06. https://www.business-standard.com/article/pti-stories/coal-india-s-magadh-mine-may-produce-51-mtpa-by-2020-115100600762_1.html. 
  3. "Maoist attack in Latehar". Business Standard India. Press Trust of India. 2018-01-06. https://www.business-standard.com/article/pti-stories/maoist-attack-in-latehar-118010600694_1.html. 
  4. Pillay, Ruchira Singh,Amritha (2015-04-13). "Essar Power to restart work on Rs1,000 crore Tori project in Jharkhand". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லாத்தேஹார்&oldid=3517456" இலிருந்து மீள்விக்கப்பட்டது