கல்வராயன்மலை வட்டம்
கல்வராயன்மலை வட்டம் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°48′N 78°42′E / 11.800°N 78.700°E | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
தலைமையிடம் | கல்வராயன் மலை |
பரப்பளவு | |
• மொத்தம் | 550.7 km2 (212.6 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 41,025 |
• அடர்த்தி | 74/km2 (190/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
கல்வராயன் மலை வட்டம் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்ட போது 14 நவம்பர் 2019 அன்று புதிதாக இவ்வருவாய் வட்டம் நிறுவப்பட்டது.[1][2] [3][4]
கல்வராயன்மலை வட்டம், கல்வராயன் ஊராட்சி ஒன்றியத்தின் 15 கிராம ஊராட்சிகளைக் கொண்டது.[5] இப்புதிய வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கல்வராயன் மலை ஆகும்.
புவியியல்
[தொகு]கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்த கல்வராயன்மலை வட்டம் 550.7 சதுர கிலோமீட்டர்கள் (212.6 sq mi) பரப்பளவு கொண்டது. இதன் வடகிழக்கில் சங்கராபுரம் வட்டம், தென்கிழக்கில் சின்னசேலம் வட்டம் அமைந்துள்ளது.[6]இதன் தெற்கிலும், மேற்கிலும் சேலம் மாவட்டத்தின் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் உள்ளது.[7] இதன் வடமேற்கில் தருமபுரி மாவட்டத்தின் அரூர் வட்டம் உள்ளது.[8] மற்றும் வடக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தின் தண்டராம்பட்டு வட்டம் உள்ளது.[9] இவ்வட்டத்தில் மணி முத்தா ஆறுகள் மற்றும் கோமுகி ஆறு பாய்கிறது.[10]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 550.7 சதுர கிலோமீட்டர்கள் (212.6 sq mi) பரப்பளவு கொண்ட இவ்வட்டத்தின் மக்கள் தொகை 41,025 ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Bifurcation information". kallakurichi.nic.in. 2021-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- ↑ "Tamil Nadu has a new district: Kallakurichi will be 33rd". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-01-09. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
- ↑ கல்வராயன்மலை கிராம ஊராட்சிகள்
- ↑ "Kallakurichi district map". kallakurichi.nic.in. 2021-03-13. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
- ↑ "Salem district map". salem.nic.in. 2021-03-16. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
- ↑ "Dharmapuri district map". dharmapuri.nic.in. 2021-03-16. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
- ↑ "Tiruvannamalai district census handbook (A)" (PDF). censusindia.gov.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
- ↑ "Viluppuram district census handbook (A)" (PDF). censusindia.gov.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.