தியாகதுர்கம்
தியாகதுருகம் | |||||||
— பேரூராட்சி — | |||||||
ஆள்கூறு | 11°53′22″N 78°54′53″E / 11.8895°N 78.9147°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கள்ளக்குறிச்சி | ||||||
வட்டம் | கள்ளக்குறிச்சி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | எம். எசு. பிரசாந்த், இ. ஆ. ப | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
18,605 (2011[update]) • 1,592/km2 (4,123/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 11.69 சதுர கிலோமீட்டர்கள் (4.51 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/thiyagadurgam |
தியாகதுருகம் (ஆங்கிலம்:Thiyagadurgam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]தியாகதுர்க்கம் பேரூராட்சி, விழுப்புரத்திலிருந்து 65 கிமீ; சின்னசேலத்திலிருந்து 27 கிமீ தொலைவிலும், கள்ளக்குறிச்சியிலிருந்து 13.5 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் வடக்கில் திருக்கோவிலூர் 32.6 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]11.69 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 113 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4224 வீடுகளும், 18605 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 12737 ஆகவுள்ளது. மேலும் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5478 மற்றும் 131 ஆகவுள்ளனர்
வரலாறு
[தொகு]தியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய குன்று அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது. இதனை கி.பி 1760 முதல் [ஐதர் அலி]]யின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் திப்பு சுல்தான் அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது.
மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்
[தொகு]இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது சுனை நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ தியாகதுர்க்கம் பேரூராட்சியின் இணையதளம்
=