சின்ன பச்சைக்காலி
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ சதுப்பு மண்கொத்தி உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
சின்ன பச்சைக்காலி | |
---|---|
குளிர் காலத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுகோலோபாசிடே
|
பேரினம்: | |
இனம்: | T. stagnatilis
|
இருசொற் பெயரீடு | |
Tringa stagnatilis (பேச்செடேயின், 1803) |
சின்ன பச்சைக்காலி (Marsh Sandpiper) என அழைக்கப்படுவது உள்ளான்களில் ஒரு சிற்றினமாகும். இது ஒரு கரையோரப் பறவையாகும்.
பெயர்கள்
[தொகு]தமிழில் :சின்ன பச்சைக்காலி
ஆங்கிலப்பெயர் :Marsh Sandpiper
அறிவியல் பெயர் :Tringa stagnatillis [2]
உடலமைப்பு
[தொகு]25 செ.மீ. - சாம்பல் பழுப்பு நிற உடல் கொண்ட இதன் முன் நெற்றி, கண்புருவம், தலையின் பக்கங்கள், பின்முதுகு, பிட்டம் ஆகியனவும், மார்பு, வயிறு, வாலடி ஆகியனவும் தூய வெள்ளை நிறங் கொண்டவை.
காணப்படும் பகுதிகள் ,உணவு
[தொகு]குளிர்காலத்தில் வலசை வரும் இதனைக் குளங்கள், ஏரிகள் ஆகியவற்றின் நீர்ப்பரப்பின் ஓரங்களிலும் நீர்தேங்கி நிற்கும் நெல்வயல்களிலும் பரவலாகக் காணலாம். சிறிது உப்பான நீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரும்பித் திரிவது. ஆகஸ்ட் இறுதியில் வரத் தொடங்கும் இவை மே முதல் வாரத்தில் திரும்பிவிடும். இனப் பெருக்கம் செய்வதில் ஈடுபடாத சில, கோடையிலும் இங்கே தங்கிவிடுகின்றன. 1962இல் கோடியக்கரையில் காலில் வளையம் அணிவிக்கப்பட்ட இரு பறவைகள் 5100 கி.மீ. தொலைவுக்கு அப்பால் ரஷ்யாவில் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளன. தலையும் அலகும் முழுவதும் மூழ்கும்படி நீர் பரப்பில் இறங்கி இரை தேடவும் செய்யும். சிறுநத்தை, புழு பூச்சிகள் இதன் முக்கிய உணவு எழுந்து பறக்கும் போது ச்சீ வீப், ச்சி வீப் எனக் குரல் கொடுக்கும். [3]
படங்கள்
[தொகு]-
சின்ன பச்சைக்காலி
-
பறக்கும் சின்ன பச்சைக்காலி
-
இரைதேடும் சின்ன பச்சைக்காலி
-
கூட்டமாக பறக்கும் சின்ன பச்சைக்காலி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tringa stagnatilis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "சின்ன பச்சைக்காலி ". பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2017.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:47
வெளி இணைப்புகள்
[தொகு]- Marsh sandpiper species text in The Atlas of Southern African Birds
- BirdLife species factsheet for Tringa stagnatilis
- {{{2}}} on Avibase
- சின்ன பச்சைக்காலி videos, photos, and sounds at the Internet Bird Collection
- சின்ன பச்சைக்காலி photo gallery at VIREO (Drexel University)
- Interactive range map of Tringa stagnatilis at IUCN Red List maps
- Audio recordings of Marsh sandpiper on Xeno-canto.