உள்ளடக்கத்துக்குச் செல்

அமோனியம் குரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் குரோமேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அம்மோனியம் குரோமேட்டு(IV)
இனங்காட்டிகள்
7788-98-9
ChemSpider 22997
பண்புகள்
CrH8N2O4
வாய்ப்பாட்டு எடை 152.07 g/mol
தோற்றம் மஞ்சள் நிற படிகங்கள்
அடர்த்தி 1.90 g/ml
உருகுநிலை 185 °C (365 °F; 458 K)
24.8 g/100ml (0 °C)
37.36 g/100ml (25 °C)[1]
45.3 g/100ml (40 °C)
70.06 g/100ml (75 °C)[1][2]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-1163 kJ/mol
நியம மோலார்
எந்திரோப்பி So298
657 J/K·mol
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Toxic
GHS pictograms [3]
GHS signal word Danger
H272, H314, H334, H350, H400[3]
P201, P220, P261, P273, P280, P305+351+338[3]
ஈயூ வகைப்பாடு ஒக்சியேற்றி O விஷம் T சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N
R-சொற்றொடர்கள் R8, R34, R43, R49, R50/53
S-சொற்றொடர்கள் S17, S26, S36/37/39, S45, S53, S60, S61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அமோனியம் குரோமேட்டு (Ammonium chromate) என்பது (NH4)2CrO4 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதி உப்பாகும். இது மஞ்சள்நிற ஒற்றைமுகப் படிகமாக உருவாகிறது. அமோனியம் ஐதராக்சைடு, அமோனியமிரு குரோமேட்டு ஆகிய உப்புகளின் சேர்க்கையால் இவ்வுப்பு உருவாகிறது. புகைப்படத் தொழிலில் ஊன்பசைப் பூச்சுகளில் கூருணர்வேற்றியாகப் பயன்படுகிறது. நெசவுத் தொழிலில் அச்சிடுவதற்கும், கம்பளிகள் மீது குரோமேட்டு சாயங்களை நிலைநிறுத்துவதற்கும் பயன்படுகிறது. மேலும் இது ஒரு பகுப்பாய்வு கரணியாகவும் , வினையூக்கியாகவும், அரிப்பைத் தடுக்கின்ற மட்டுப்படுத்தியாகவும் பயன்படுகின்றது. நீரில் கரையக்கூடிய இவ்வுப்பு தோல், கண்கள், சுவாச மண்டலம் ஆகியவற்றில் எரிச்சலை உண்டாக்கும். நீண்ட காலமாக தொடர்ந்து இதைக் கையாள்பவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்குகிறது. கல்லீரல், சிறுநீரக திசுக்களில் புண்ணையும் ஏற்படுத்துகிறது[4] 185 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது சிதைவடைகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds, Second Edition. Boca Raton, Florida: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-43981462-8. பார்க்கப்பட்ட நாள் 2014-04-28.
  2. http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=6481
  3. 3.0 3.1 3.2 Sigma-Aldrich Co., Ammonium chromate. Retrieved on 28-04-2014.
  4. Information preview for Ammonium chromate, GIDEON
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோனியம்_குரோமேட்டு&oldid=3946948" இலிருந்து மீள்விக்கப்பட்டது