உள்ளடக்கத்துக்குச் செல்

ரோசா ஒட்டுன்பாயெவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோசா ஒட்டுன்பாயெவா
Роза Отунбаева
கிர்கிஸ்தான் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஜூலை 2010
முன்னையவர்குர்மான்பெக் பாக்கியெவ்
கிர்கிஸ்தான் பிரதமர்
பதில்
பதவியில்
7 ஏப்ரல் 2010 – 19 மே 2010
முன்னையவர்டனியார் உசேனொவ்
பின்னவர்எவருமில்லை
கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
1992–1992
குடியரசுத் தலைவர்அஸ்கார் அக்காயெவ்
பிரதமர்துர்சுன்பெக் சிங்கிசெவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 23, 1950 (1950-08-23) (அகவை 74)
ஓஷ், சோவியத் ஒன்றியம் (தற்போது கிர்கிஸ்தான்)
அரசியல் கட்சிகிர்கிஸ்தான் சமூக மக்களாட்சிக் கட்சி
முன்னாள் கல்லூரிலமனோசொவ் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்

ரோசா இசகோவ்னா ஒட்டுன்பாயெவா (Roza Isakovna Otunbayeva, கிர்கீசிய மொழி: Роза Исаковна Отунбаева, பிறப்பு: ஆகஸ்ட் 23, 1950) கிர்கிஸ்தானின் அரசுத்தலைவரும், கிர்கிஸ்தான் சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவரும் ஆவார். ஏப்ரல் 2010 முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவிற்கு எதிராக இடம்பெற்ற புரட்சியை அடுத்து ஒட்டுன்பாயெவா இடைக்காலத் தலைவராகத் தன்னை அறிவித்திருந்தார். முன்னாளில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

ஓஷ் என்ற நகரத்தில் பிறந்தவர் ஒட்டுன்பாயெவா. இவரது தந்தை இசாக் ஒட்டுன்பாயெவ் முன்னாள் சோவியத் குடியரசின் உச்சநீதிமன்ற உறுப்பினராக இருந்தவர். 1972 ஆம் ஆண்டில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் பயின்று மெய்யியலில் பட்டதாரியானார். பின்னர் ஆறு ஆண்டுகள் கிர்கிஸ்தான் அரசு தேசியப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1975 இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார். திருமணமான இவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. இவர் கிர்கீசிய மொழி, ரஷ்ய மொழி, ஆங்கிலம், ஜெர்மானிய மொழி, மற்றும் பிரெஞ்சு மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர்[2][3].

அரசியலில்

[தொகு]

1981 இல் பொதுவுடமைக் கட்சியில் இணைந்தார். 80களின் இறுதியில் பாரிசில் யுனெஸ்கோவின் சோவியத் பிரதிநிதியாகவும், பின்னர் மலேசியாவின் சோவியத் தூதுவராகவும் பணியாற்றினார். 1992 இல் கிர்கிஸ்தான் சோவியத்தில் இருந்து விடுதலை பெற்றதும், புதிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், உதவிப் பிரதமராகவும் ஆனார். பின்னர் ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் தூதுவராகப் பணியாற்றினார். 1994 இல் மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். 1998-2001 காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்துக்கான தூதுவரானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-04-20. பார்க்கப்பட்ட நாள் 2010-07-04.
  2. http://www.rian.ru/spravka/20100408/219501495.html
  3. Osborn, Andrew (8 April 2010). "Roza Otunbayeva, the head of Kyrgyzstan's new interim government, is not an archetypal revolutionary". telegraph.co.uk. பார்க்கப்பட்ட நாள் 9 April 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசா_ஒட்டுன்பாயெவா&oldid=3570013" இலிருந்து மீள்விக்கப்பட்டது