விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2013
Appearance
இதை தொகுப்பவர்கள் [[சனவரி 2]], [[2013]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2013|ஜனவரி 2, 2013]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.
ஒரு மாதம் முடிந்தவுடன் முடிந்த மாதத்திற்கான தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்
- இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் சகோதரி நிவேதிதா (படம்) ஆவார்.
- கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான இடக்கை கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.
- பொன்னேர் உழுதல் என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.
- தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் இயோசீன் காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.
- கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.
- வட சீனாவிலுள்ள யுன்காங் கற்குகை கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.
- நீரடிக் காளான் இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.
- எவரிஸ்ட் கால்வா தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.
- பிரித்தானிய இந்தியாவில் ஜெய்ஹிந்த் என முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளை (படம்) ஆவார்.
- விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான மாம்பா, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.
- இந்து மதத்தில் கூறப்படும் லோகபாலர்களான குபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.
- வருக்கமாலை எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.
- சிறுநீர் பெய்யும் சிறுவன் என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.
- பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.
- முதல் எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.
- பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், சோம சூக்தப் பிரதட்சணம் எனப்படுகின்றது.
- உருவமாற்ற தேவாலயம் (படம்) என்பது இசுரேலின் தாபோர் மலையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது.
- சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் முனி தாண்டவம் எனப்படுகிறது.
- தன்னுடல் தாக்குமை என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.
- சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட ஸ்புட்னிக் 5 விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.
- சச்சின் டெண்டுல்கர் (படம்) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.
- அநுராதபுரத்தின் பஞ்ச பாண்டியர் என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.
- கில்கமெஷ் காப்பியம் என்பது சுமேரிய மன்னனான கில்கமெஷ் பற்றிய செவிவழிக் கதைகளை வைத்து எழுதப்பட்ட மெசொப்பொத்தேமிய செய்யுள் இதிகாசம் ஆகும்.
- கணிமி (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.
- பரதநாட்டியத்தில் 28 ஒற்றைக்கை முத்திரைகளும், 24 இரட்டைக்கை முத்திரைகளும் (படம்: சில முத்திரைகளின் தொகுப்பு) உள்ளன.
- பிரித்தானிய இலங்கையில் முழு இலங்கைக்கும் விடுதலை என்ற கருத்தை முதலில் அமைப்பு ரீதியில் கேட்டுப் போராடியது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்.
- தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக கிருஷ்ண குமாரசிங் பவசிங் பணியாற்றினார்.
- 1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டது.
- பிக் பென் நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.
- உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) ஆபிரகாமிய சமயங்களை பின்பற்றுபவர்களாக (யூதம், கிறித்தவம், இசுலாம்) உள்ளனர்.
- சொல்லாக்க ஆட்டத்தில் முதலில் வைக்கப்படும் சொல் குறைந்தது இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகவாவது இருக்க வேண்டியுள்ளதுடன், H8 கட்டத்தை மூடுவதாக இருக்க வேண்டும்.
- தூக்க விறைப்பு அல்லது இரவுத் தூக்க ஆண்குறி விறைப்பு என்பது ஆண்கள் உறங்கும் வேளையில் இயல்பாகவே ஏற்படும் ஆண்குறி விறைப்பு ஆகும். உடலியக்க விறைப்புக் கோளாறு இல்லாத எல்லா ஆண்களுக்கும் பொதுவாக இரவில் இரண்டு அல்லது மூன்று முறை இது நேரும்.
- யமுனா ஏரி (படம்) யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த நல்லூரிலுள்ள சங்கிலித்தோப்பு வளவில் காணப்படும், பகர வடிவிலமைந்த கேணி ஆகும்.
- கங்னம் ஸ்டைல் நிகழ்படப் பாடல், யூடியூப்பில் இதுவரை அதிக தடவை (பார்வையாளர்கள்: 1,733,074,510) பார்க்கப்பட்ட நிகழ்படம் என்ற சிறப்பைப் பெற்றது.
- ஐந்தாம் ஜெயவர்மன் அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கம்போடியாவின் கெமர் பேரரசனாக முடி சூடினான்.
- விண்வெளிக் கழிவுகள் என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.
- கோவேறு கழுதை என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.
- ஹிக்கின்பாதம்ஸ் (படம்) என்பது ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேய நூலகரால் 1844 இல் நிறுவப்பட்ட இந்தியாவிலேயே மிகப் பழைமையான புத்தக நிலையம் ஆகும்.
- பழுப்புக் கொழுப்பு திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.
- சிவபெருமான் சதாசிவ திருவுருவத்தில் சத்யோ சோதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என ஐந்து முகங்களுடன் காட்சி தருகிறார்.
- ஆறு பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வொயேச்சர் 1 விண்கலம் எடுத்த வெளிர் நீலப் புள்ளி என்பதே ஆகக் கூடிய தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்.
- உலகில் யூத மதத்தினை பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.
- மக்கா (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
- முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே முருங்கை மரம் ஆகும்.
- பல கிறித்தவ சபைகளில் மண ஒப்பந்தம் செய்த பின், திருமணம் செய்யும் முன் திருமண அறிக்கையினை பொது அறிவிப்பாக வெளியிடும் வழக்கம் உள்ளது.
- சிற்றூர்தியின் ஆங்கிலப் பெயரான Van என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் Caravan என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.
- ஒரு பொருளின் வெண் எகிர்சிதறல் அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.
- அகலப்பரப்பு காட்சி என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).
- குளுக்கோஸை பொறுத்துக் கொள்ளும் சோதனை என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.
- கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, ஜயதேவன் முறை அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.
- தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் .ලංකා என்ற ஆள்களப் பெயரையும் இலங்கை ஆள்களப் பதிவகம் வழங்கி வருகின்றது.
- சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.
- கும்மியாட்டம் (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.
- ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் (1762–1812) ஆவார்.
- பிற சுழற்சிகளை ஒப்பிடுகையில் ஓட்டோ சுழற்சியில் பயனுறுதிறன் அதிகம்.
- எக்ஸ் சாளர அமைப்பு வலையமைப்பு செய்யப்பட்ட கணினிகளுக்கு வரைவியல் பயனர் இடைமுகம் வழங்கும் அமைப்பு மென்பொருள் ஆகும்.
- அக்னி ஏவுகணை என்பது இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.
- 'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் இ. மயூரநாதன் (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.
- இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.
- நோபல் பரிசினை இதுகாறும் மூன்று தமிழர் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆவர்.
- உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- 1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் எம். துரைராஜ் என்பவர் தொகுத்தளித்தார்.
- 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம், ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாக்கியதில் (இயங்கு படம்) 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம், ஈழப்போரில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாகக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் ஒளிச்சேர்க்கை மூலமாக மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.
- அண்டம் விரிவாக்கக் கோட்பாடு, ஹபிள் விதி மற்றும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதலில் சொன்னவர் ஜார்ஜஸ் இலமேத்ர ஆவார்.
- நெடுமுப்போட்டி (டிரையத்லான்) என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.
- மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 ஸ்வபல்ப் என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.
- உத்தேச புற்றுநோய் தோன்றும் வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.
- பாவேந்தர் பாரதிதாசன் விருது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
- இந்தோனேசியா 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.
- மரகதப் பச்சை நத்தைகள், மானுசுத் தீவில் மட்டுமே கிடைக்கின்றன. இவற்றின் ஓடுகள் அணிகலன்களாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
- பித்தேகோரசு தேற்றம் என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a2 + b2 = c2
- பிரித்தானிய இலங்கையின் சட்டவாக்கப் பேரவையின் முதலாவது தமிழ்ப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி.
- காலண்டர் என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.
- தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய மரம் வாகை ஆகும்.
- மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.
- கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.
- திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
- பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.
- கோட்பாடு என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.
- நடிகர் சிவாஜி கணேசன் 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ஒரு நாள் நகரத்தந்தையாகச் சிறப்பிக்கப்பட்டார்.
- ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள சார் மணி உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.
- சீனாவிலுள்ள சிடு தொங்கு பாலம் உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.
- உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய சிங்கப்பூர் பிளையர் என்பதாகும்.
- சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த சேர் முத்து குமாரசுவாமி ஆவார்.
- சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் அரிஸ்டாகஸ் ஆவார்.
- உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது பிரித்தானியப் பேரரசு (படம்) ஆகும்.
- உலகிலேயே மிகவும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட அருங்காட்சியகம் லூவர் அருங்காட்சியகம் ஆகும்.
- காசுப்பியன் கடல் உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.
- பரதநாட்டியத்தில் தாளம் எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.
- தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு சிறுத்தை ஆகும்.
- தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசியப் பறவை செம்போத்து (படம்) ஆகும்.
- புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம் உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.
- உலக மக்கள் தொகையில் 20% ஆக உள்ள ஹான் சீனர் உலகிலுள்ள பெரிய இனக் குழுவினர் ஆவர்.
- சூரியமையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் அரிஸ்டாகஸ் ஆவார்.
- பரதநாட்டியத்தில் இராகம் என்பது மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்ட கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.
- காரைக்கால் அம்மையார் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.
- காவன்தீசனின் பத்துத் தளபதிகள் எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.
- தென்காசி பெரிய லாலா கடை 1904ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.
- சிவபெருமான் பிநாகம் எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் பிநாகபாணி என்று அறியப்பெறுகிறார்.
- கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.
- மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி ஆலயத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா அன்று பக்தர்கள் மொட்டை அடித்து, தங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
- கனோடெர்மா(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
- மின்னணுவியலில், மெய்நிகர் புலம் என்பது மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும்.
- திருத்தூதரக அரண்மனையே திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.
- மார்ட்டின் லூதர் கிங் தனது பேச்சு ஒன்றில் பயன்படுத்திய வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கிறது என்ற சொற்தொடர் அறப் போராட்ட வழிமுறையின் ஒரு முக்கிய கருத்துரு ஆகும்.
- உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் அருவி(படம்)ஆகும்.
- 1946 இல் முடிசூடிய ஒன்பதாம் இராமா மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.
- அகரமேறிய மெய் முறைமை என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.
- ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் சமபகுதியங்கள் எனப்படும்.
- நர்கிசை (படம்) கௌரவிக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் "சிறந்த ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை அவர் பெயரில் வழங்கி வருகிறது.
- அன் விகுதி முறைமையும் தனித்தமிழ் எழுத்து முறைமையும் பிராமிக் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட மொழி தமிழா அல்லது பிராகிருதமா என்று கண்டறியும் முறைகளாகும்.
- ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள ரேடான் என்னும் வேதித்தனிமம் ஆகும்.
- தலாய் லாமா என்பது என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும்.
- தாய்நாடு அழைக்கிறது எனும் சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.
- சிங்கத்தை காட்டுக்கு அரசன் எனக் கூறினாலும் புலியே சிங்கத்தை விட வலிமை வாய்ந்தது. புலியால் ஒரே அடியில் சிங்கத்தை கொன்று விட முடியும்.
- சமணர்களின் கொல்லாமை கோட்பாட்டின் படி சைன ராமாயணத்தில் இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.
- ஃபாக்சு பீ2 என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.
- மத்தேயோ ரீச்சி என்பவரே சீன பேரரண் நகரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார்.
- அச்சுறு நிலையை அண்மித்த நிலையில் உள்ள சுள்ளிய சாம்பல் மந்தி (படம்) என்ற குரங்கு, தமிழகத்தில் முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படுகிறது.
- திருத்திய தமிழ் எழுத்துவடிவம் என்பது தமிழ் அரிச்சுவடியின் ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகும். முன்மொழியப்பட்ட திருத்தங்களில் ஐ எழுத்திற்குப் பதிலான அய், ஔ எழுத்திற்குப் பதிலான அவ் என்பன நிராகரிக்கப்பட்டன.
- தாய்லாந்து திரைப்பட நடிகர்களான டோனி ஜா மற்றும் டான் சுபொங், இருவரும் பன்னா ரிட்டிக்ரையின் மியோ-தாய் திரைப்பட சாகசக்குழுவின் மாணவர்கள்.
- கி.பி 1878 முதல் சிஸ்டைன் சிற்றாலயமே திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.
- லட்சியா(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.
- சீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள சாங்காய் நூலகம் உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.
- சோழர் சீனத்துடன் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே தொடர்பு கொண்டிருந்தனர்.
- 5 அடி உயரமுள்ள சாரசு கொக்கு, (படம்) வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன. இவ்வகையான கொக்குகள் ஆண், பெண் என இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும்.
- பொதுவாக 3.5 அங்குல நெகிழ் வட்டு ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.
- வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே.
- அட்சரம் எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிக்கும்.
- 3 இடியட்சு என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.
- திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் தொகையடியார் எனப்படுகின்றனர்.
- மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் மின்காந்தம் எனப்படும்.
- மீன்பிடி தடைக்காலம் என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில காலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தேசிய அரசுகள் விதிக்கின்ற தடையை குறிப்பதாகும்.
- சகோ. மேரி கென்னத் கெல்லர் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.
- சங்ககாலத்து சிறுநில மன்னர்களான சீறூர் மன்னர்கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.
- கியூபாவே விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.
- யோவான் 3:16 என்பது விவிலியத்தில் மிகவும் அதிகமாகக் கையாளப்படும், மிகவும் புகழ்பெற்ற வசனமாகும். இது கிறித்தவத்தின் கருப்பொருளைச் சுருக்கமாக எடுத்தியம்புவதால் நற்செய்தியின் சுருக்கம் என அழைக்கப்படுகின்றது.
- இந்திய விடுதலைப் போராளி சந்திரசேகர ஆசாத் கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.
- ரேக்ளா வண்டிப் பந்தயத்திற்குத் (படம்) தேர்வாகும் ஒரு ஜோடி காளைகள் ₹ 25 ஆயிரம் முதல் ₹ ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.
- தாரிக் இப்னு சியாத் எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டு கால இசுலாமிய ஆட்சிக்கு வித்திட்ட பெரும் போர் வெற்றியைக் கண்ட தளபதி ஆவார்.
- நாயகனின் பயணம் என்பது உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு.
- விண்டோஸ் போன் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும்.
- நாவரசு கொலை நிகழ்வால் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை இயற்றியது.
- வழமையாக பிரித்தானிய மன்னர்களின் முடி சூட்டும் விழாவும் ஆங்கில, பின்னர் பிரித்தானிய தற்போது பொதுநலவாய மன்னர்களின் உடல் அடக்கங்களும் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் தான் நடைபெறுகின்றன.
- சுண்டன் வள்ளம் (படம்) என்ற கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
- வலஜி என்பது கருநாடக இசையில் பயன்படும் சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
- நாளமில்லாச் சுரப்பிகள் என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும்.
- குண்டர் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.
- அமெரிசியம் என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'சீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.
- அந்துருண்டை என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும்.
- மெர்க்கல் நரம்பிறுதி என்பவை முதுகெலும்பிகளில் தொடு உணர்வை மூளைக்கு அனுப்பும் உணரிகள் ஆகும்.
- கடல் முள்ளி (படம்) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான விலங்காகும்.
- எலியாஸ் ஓவே தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.
- பணியர் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.
- நாரோடாகினி திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.
- வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய புத்தமித்திரர், ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.
- கிறிஸ்துமஸ் கெரொல் (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.
- திமிசுத்தாரை எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.
- ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் அந்திமந்தாரை பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.
- ஆகாயகங்கை அருவி (படம்) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.
- இந்தியாவின் ஏவுகணையான ஆகாஷ் ஏவுகணை எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.
- இளநீரில் தாவர வளரூக்கிகளில் ஒரு வகையான ஆக்சின்கள் உட்பட பல செடி வளரூக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை தாமஸ்பாரி என்ற வேல்சு நாட்டு வணிகரின் பெயரை வைத்தே வழங்கப்படுகிறது
- குக்குரங்கு என்பது (படம்) தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும் 14 முதல் 16 செமீ உடல் நீளமே கொண்ட சிறிய குரங்கு ஆகும்.
- ஆவுரோஞ்சிக் கல் என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.
- அமைதியின் கோபுரம் என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.
- ஒடியல் என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.
- ஒன்சூ தீவு சப்பான் நாட்டின் மிகப்பெரியதும், உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரியதும், மக்கள் தொகையின் படி இரண்டாவது மிகப்பெரிய தீவும் ஆகும்.
- கத்தூரி மானில் இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.
- ரென்மின்பி அல்லது ஆர்.எம்.பி. என்பது சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும்.
- கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள சி. என். கோபுரம் (படம்) துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது.
- அலாரிப்பு என்பது பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவாகும்.
- ஆங்கில்கள் என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர்.
- எரிமலைக் கூம்பான அரராத் மலை (படம்) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும்.
- மாவீரன் தீரன் சின்னமலை பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர்.
- கிறித்தவ கொள்கைளில் உருவாகிய சமயமான மொர்மனியம் மோர்மொன் நூலை மறைநூலாகக் கொள்கின்றது.
- எட்டி விருது என்பது சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் வழங்கப்பட்ட சங்ககால விருதுகளில் ஒன்றாகும்.
- தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே கோட்டியா என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.
- சுழிதிசைகாட்டி (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.
- குருதியடக்குவடப் பரிசோதனை டெங்குக் காய்ச்சலை அறிதியிட ஏற்ற பரிசோதனை என உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது.
- பரப்பிசை (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.
- இசைப்பேரறிஞர் விருது சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.
- இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி எஸ். எல். வி ஏவுகலமாகும்.
- இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமான கோல்கொண்டா (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
- ஹைன்றிக் ரோரர் என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.
- யாழ்ப்பாண வைபவமாலை என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.
- கிலாபத் இயக்கம் என்பது 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.
- வெள்ளை ரோசா என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.
- இண்டிர்யாமி (படம்) என்பது இன்கா நாகரிக காலத்திலிருந்து செவ்விந்தியர் சூரியக்கடவுளுக்காக கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.
- பெத்லகேமின் விண்மீன் என்பது கிறித்தவப் பாரம்பரியப்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும்.
- த லோட் ஒவ் த ரிங்ஸ் (The Lord of the Rings) என்பது ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் எழுதப்பட்ட ஏழு வகை கற்பனை உயிரினங்களை பாத்திரங்களாய்க் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில புதினம் ஆகும்.
- சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும்.
- பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த தாமூது மக்களை ஒலி அலை ஒன்று அழித்ததாகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.
- ஆண் சிங்கமும் பெண் புலியும் இணைந்த கலப்பினமான சிங்கப்புலி அறியப்பட்ட அனைத்து பூனைக் குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாகும்.
- அய்யாவழி சமயத்தில் புனிதமானதாய் மதிக்கப்படும் மருந்துவாழ் மலை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்த ஒரு மலையாகும்.
- ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் அரோகன் எண் என்றழைக்கப்படும்.
- ஆரியக்கூத்து எனப்படும் கழைக்கூத்து என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கூத்துவகை ஆகும்.
- பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் கொற்றவையை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.
- அல்லது வாயில் எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.
- முடிசூடிய மரியா (ஜியோட்டோ) என்பது சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.
- பெரிப்ளசு (Periplus) என்பது கடல் வழிப்பயணம், கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.
- தட்டலங்காய் புட்டலங்காய் என்பது தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் வகையில் அமையும் பண்டைய தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.
- நியூட்டன் அலகு, SI அடிப்படை அலகுகளில், கிகி x மீ x செக்-2 ( ) என்பவற்றை உள்ளடக்கிய ஒரு SI அலகு ஆகும்.
- மூக்கன் பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.
- விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை மைய நரம்பு மண்டலமாக கொள்ளப்படுகின்றது.
- 1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.
- லோலிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திரிகடுகம் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்
- மஞ்சட் கோட்டுச் சருகுமான் இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.
- நெடுங்குழு என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.
- முப்பரிமாண அச்சாக்கம் என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.
- இரோசி யமாசிடா என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.
- ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு (படம்) என்பது அதன் புவியியல் பெயர் அல்ல.
- உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.
- தஜிகிஸ்தானில் உள்ள நியுரெக் அணை உலகின் மிக உயரமான அணையாகும்.
- பண்டைய தமிழகத்தைப் போலவே, இன்கா நாகரிகத்தின் வேளாண்மையிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் ஊணூர் என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.
- பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு பகுதிபடக் காய்ச்சி வடித்தல் முறை பயன்படுகிறது.
- உமாமி சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.
- ஏபெல் பரிசு 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.
- கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான மயன் கணிதத்திலும் திறமையாயிருந்தார்.
- முல்லா கதைகளில் வரும் முல்லா நசுருதீனைச் (படம்) சிறப்பிக்கும் விதமாக 1996 முதல் 1997 வரை உள்ள ஆண்டினை பன்னாட்டு நசுருதீன் ஆண்டு என ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்தது.
- ஆல்ப்சு மலைகளில் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய மிக நீண்ட தொங்கு பாலம் டிரிஃப்ட் பாலம் (படம்) ஆகும். இது 170 மீட்டர் (560 அடி) நீளமானது.
- 1911-ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நகர், பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.
- ஏரிஸ் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் ஆகும்.
- கறுப்புச் சாவு (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.
- வித்வான்சாக், திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.
- இந்தியாவின் மிகப்பழைய பள்ளிவாசலான சேரமான் ஜும்மா பள்ளிவாசல் (படம்) பின் தீணார் என்பவரால் சேரமான் பெருமாள் என்ற சேர மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது.
- அருமன் வாயுக்களின் உருகுநிலைக்கும் கொதி நிலைக்கும் உள்ள வேறுபாடு 10 oC ஐ விடக் குறைந்ததாகவே காணப்படுகின்றது.
- கிரியா தீபிகை என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.
- உள்-பிணைவு படிவாக்கம் என்பது விரும்பிய டி.என்.ஏ பகுதிகளை விரும்பிய பரப்பிகளில் விரும்பிய நிலைகளில் எளிமையாகவும், விரைவாகவும் செய்யக்கூடிய பக்டிரியல் படிவாக்கமுறை ஆகும்.
- நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான ஜேம்ஸ் சட்விக் 1932இல் கண்டுபிடித்தார்.
- உலகின் தற்போதைய கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இந்தியரான பசேலியோஸ் கிளேமிஸ் பாவா ஆவார்.
- தமிழ்நாடு மாநிலத்தின் பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் பாம்பன் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.
- ஜெசிக்கா காக்ஸ் உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர் மற்றும் கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர் ஆவார்.
- செருமனியில் உல்ம் மினிஸ்டர் எனும் லூதரனிய தேவாலயம் உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயம் ஆகும்.
- சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் சுருவாசோ கல்வெட்டு மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
- சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள மனாரா ஜித்தா (படம்) உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.
- முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு என்பது இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகள், எனும் இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.
- 2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு சல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.
- பீமன் சிலந்தி (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.
- புவித் திணிவு (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 1024 கிகி க்குச் சமனானது.
- எரிக்சன் உலகம் (படம்) உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும்.
- புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான வாஸ்கோ ட காமாவின் கல்லறை கொச்சி புனித பிரான்சிசு தேவாலயத்தில் உள்ளது.
- செ. நாகலிங்கம் இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழரும், பதில் மகாதேசாதிபதியாகக் கடமையாற்றிய முதலாவது இலங்கையரும் ஆவார்.
- மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி 1268 - கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.
- உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் எட்விக் கண்ணாடிக் குவளை (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.